ஸூரத்து அபுலஹப்
அபுலஹப் - யார் இவர்? இவர் பெயரில் ஒரு அத்தியாயமா? அப்படி என்ன இவருக்கு முக்கியத்துவம்? - தெரிந்து கொள்ளுமுன் -
இவரை பற்றிய சிறு குறிப்பு:
- மக்காவில் வாழ்ந்த மிகப் பிரபலமானவரும் செல்வந்தரும் ஆவார்.
- பெருமானார் (ஸல்) அவர்களின் தந்தையாரின் சகோதரரும் ஆவார்.
- இவரின் உண்மையான பெயர் அப்துல் உஜ்ஜா.
- உஜ்ஜா என்பது மக்காவில் கஃபத்துல்லாஹ்வில் கற்பனையால் வடிவமைக்கப்பட்டிருந்த கடவுள் சிலைகளின் ஒன்று. அந்த கற்பனை கடவுளின் அடிமை என்ற பொருள் படும் படி அமைந்திருக்கிறது இவரது பெயர்.
- ஆனால் இவருக்கு ஒரு சிறப்பு பெயர் இருந்தது. அது தான் அபுலஹப்.
- லஹப் என்றால் தீஜுவாலை, தீச்சுடர். இது ஏனெனில், இவரது முகம் நெருப்பு மாதிரி ”செக்கசெவேன்னு செவப்பா” என்பார்களே அதே போல் இருக்கும். அதாவது அவ்வளவு அழகாக இருப்பார்.
- இவரின் மனைவி பெயர் உர்வா.
- உர்வா என்பவர் மிகப் பெரிய குடும்ப வம்சத்தில் வந்தவர்.
- இவர் எப்போதும் தனது குடும்ப அந்தஸ்த்தை உயர்த்தி மற்றவர்களிடத்தில் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்.
- இவருக்கும் இவரது கணவருக்கு இருந்தது போலவே இன்னொரு பெயரும் இருந்தது, அது தான் உம் ஜமில் (அழகி)
1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடையட்டும்; அவனும் நாசமாகட்டும்
2. அவனுடைய பொருளும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை
3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்
4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ
5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான்
--------------------------------------------------------------------------------------------
அப்பப்பா... எவ்வலவு கடுமையான வார்த்தைகள். அப்படி அபுலஹப் செய்த தவறு தான் என்ன...?
அபுலஹப் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய இன்னல்களை கொடுத்து வந்தான். பெருமானார் (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வந்த இவன் (ஸல்) அவர்கள் குரான் ஷரீஃபை ஓதினால் குப்பைகளை வீசி எறிவான்.
இவனது மகன்களுக்கு தான் பெருமானார் (ஸல்) அவர்களின் மகளார்களை மணமுடித்து வைக்கப்பட்டிருந்தது. மகன்களை ஏவி விட்டு அருமை மகளார்களை மணரத்தை செய்ய வைத்தான்.
பெருமானார் (ஸல்) அவர்களின் மகனார் காஸிம் அவர்கள் மரணத்தை எய்திய போது அந்த கனமே ஆனந்த கூத்தாடினான். இத்தகைய மோசமான ஒரு செயலை பெருமானார் (ஸல்) அவர்கள் மீது போரை ஏவி விட்டவர்கள் கூட செய்ததில்லை. வரலாற்றில் படித்ததுமில்லை. மேலும் வாரிசில்லாதவர் என கேலி பேசினான்.
இன்னும் சொல்லிலடங்கா இன்னல்களையும் கேடுகளையும் விளைவித்தான். தன்னுடைய ஹபீபை கிண்டலாகவும், கேலியாகவும் பேசும் இக்கயவனுக்கு இறைவன் இவன் பெரும் செல்வாக்கோடும், உடல் ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருந்த போது மேலே படித்த ஆயத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக இறக்கி வைத்தான்.
--------------------------------------------------------------------------
‘தப்’ என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகுதல் என்று பொருள்படும்.
அதாவது அந்த கால அரபிகள் ஒரு பெண்ணை பார்த்து “நீங்கள் குமரியா அல்லது வயசானவரா?” என்று கேட்க “அ ஷ்ஷாபா அம் தாப்பா..” என்று கேட்பார்களாம். அதாவது “நீங்கள் குமரியா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருபவரா? (இறப்பை அடைந்து வருபவரா?)” என்று
இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு அபுலஹப் இந்த அத்தியாயத்தை வைத்தே மிகவும் கேலி பேசினானாம்.
பொதுமக்கள் கூடும் இடத்தில் இருக்கும் போது வேண்டும் என்றே கைகளை தூக்கி காண்பித்து, ”தபன் லகுமா” - “நீ அழிந்து போவாயாக” என்பான். மேலும் கைகளை பார்த்து “முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதில் ஒரு அடையாளத்தையும் கானோமே..?” என்பானாம்.
---------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயம் இறங்கும் வரை “அபுலஹப்” என்றால் அழகானவர், தீயின் சுடரைப் போன்ற கன்னமுடையவர் என்ற பெயரே இருந்தது. ஆனால் இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு “அபுலஹப்” என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
அதாவது “லஹப்” என்றால் அழகை குறிக்காமல் - (”சயஸ்லா - பொசுங்கி விடுவான்; நாரன் தாத - நெருப்பு; லஹபின் - தீச்சுடர், ஜூவாலை”) - தீச்சுடர் பொசுக்கும் நரக நெருப்பில் அதாவது லஹபில் என்றென்றும் தங்கியிருப்பவன் என்று பொருள் கிடைக்கப் பெற்றது.
-------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment