மூன்றாம் பிறை -
‘மின்னலே நீ வந்ததேனடி.. மண்ணிலே மறைந்து போன மாயம் என்னடி..’ - என்று ஒரு பாடல் வருமே மே மாதம் எனும் படத்தில். அது போல் தான் சீனு வாழ்வில் ஒரு மின்னலாய் வந்து மறைகிறாள் விஜி.
நான் நினைக்கிறேன், கமலஹாசன் கமலஹாசனாக நடிக்காத ஒரே படம் இது தான் என்று. மற்ற எவ்வளவோ பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கலாம், ஆனாலும் அதில் ஏனோ ஆழ்வார் பேட்டை கமல் தெரிவார் ஆனால் இந்த மூன்றாம் பிறையில் மட்டும் தான் அவர் ஊட்டியை சேர்ந்த சீனுவாகவே வசித்திருக்கிறார்.
சீனு அப்பாவித்தனம் நிறைந்த வெட்கம் மிகுந்த ஒரு வாலிபன். வயசுக்கேத்த ஆசை ஆட்டிப்படைக்க அடிமையாகி நண்பனின் அழைப்பில் போக கூடாத இடம் விபச்சார விடுதி செல்கிறான். ஆனால் அங்கே அவன் பார்க்க கூடாத எதையும் பார்க்கவில்லை, பார்க்க வேண்டிய தேவதையை பார்க்கிறான்.
பாக்யலட்சிமி என்ற பெயர் தாங்கியான அவளோ நண்பர்களுடன் பிக்னிக் செல்கையில் கார் ஓட்டி வரும் போது நடந்த விபத்தில் மண்டையில் அடிப்பட்டு அத்தனையையும் மறக்கிறாள். வெறும் ஆறு வயதே நிரம்பிய உள்ளத்துடனும் 18 வயது நிரம்பிய உடலுடனும் இருக்கிறாள்.
மருத்துவமனையில் சரியான கவனிப்பாரற்று அங்கிருந்து வெளியேறி இப்போது யார் கையில் சிக்கியோ இந்த விபச்சார விடுதியில் விஜியாகிறாள்.
‘என் பேரு பாக்யலட்சுமி.. எல்லாரும் ஏன் விஜி என்கிறார்கள்’ என்று கேட்கிறாள். ஏற்கனவே விபச்சாரம் வரை வந்திருந்தாலும் இன்னமும் குழந்தை மனத்துடனே இருக்கும் இந்த பருவ வாலிபன் அதே போல் ஒரு குமரியின் வடிவில் இருக்கும் குழந்தையை கண்டதில் இயல்பாகவே ஒரு நேசக் கயிறு இருவரையும் கட்டி போடுகிறது.
அவளை அழைத்துக் கொண்டு ஊட்டி வரை வந்து விடுகிறான். இப்பொழுது இவர்கள் இருவருக்கு இடையில் உருவான அன்பை மூன்று காட்சிகளில் பிராதனமாக தெரிந்து கொள்ள முடிகிறது.
1. ஒரு முறை சீனு விஜியை கோபத்தில் திட்டி விடுகிறான். அதன் பின்பு வீடு வந்து பார்க்கையில் வீடு திறந்து கிடக்க விஜியை காணவில்லை. வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு ஊட்டி முழுவதுமே சல்லடையாக தேடுகிறான்.
தேடலின் மிகுதியில் கண்ணீர் சிந்துகிறான், கால் வலிக்க தேடியும் கை நிறைய தோல்விகளோடு வீடு திரும்புகையில் உள்ளே விஜி நிற்கிறாள்.. அந்த கனம்.. அவர்கள் உடலின் தேடலை மீறிய உள்ளத்து தேடல் அங்கே பிரதிபலிக்கின்றது..
2. செப்பில் செய்த சிலையை ஒரு முறை அனுபவித்து விட துடிக்கிறான் ஒருவன். விஜி ஆசையுடன் வளர்க்கும் சுப்ரமணி என்ற நாய் குட்டிக்கு பெல்ட் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி தான் ஆசைக்கு பலியாக்க நினைக்கிறேன்.
அவன் தகாது நடந்து கொள்வதை 6 வயது சிறுமியால் கூட பொறுக்கத் தான் முடியாது, அவனிடமிருந்து தப்பித்து வருகிறாள். விஜியை கிழிந்த ஆடையுடன் பார்க்கும் சீனு செய்தியை தெரிந்து கொண்டு அந்த ஒருவனை தேடி அவன் இடத்திற்கு செல்கிறான். அவனோடு சண்டை பிடிக்கிறான். கோபத்தில் அவனை புரட்டி எடுக்கிறான்.
3. தான் வேலை செய்யும் பள்ளிக்கூட வயதான முதல்வரின் இள மனைவி சீனுவை படுக்கையில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறாள். ஒரு நாள் அவளுக்கான சந்தர்ப்பம் அமைகிறது. சீனுவை வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு அவன் வருகைக்காக நவநாகரீக உடை அணிந்து நடக்க இருக்கும் அந்த கட்டிலறை காட்சியை கனவில் கண்டபடி அவளது பொன்மேனி உருகித் தான் போய் கிடக்கிறது. (பொன்மேனி உருகுதே பாடலில் கூட கமலஹாசன் தெரிய மாட்டார், சீனு தான் தெரிவார்)
சீனு வருகிறான். நினைத்து பார்க்க வெட்கப்படாதவள் அதை சீனுவிடம் தன் ஆசையை வெளிப்படுத்தவும் வெட்கமோ தயக்கமோ அடையவில்லை. சீனு என்ன தான் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள விபச்சார விடுதி வரை சென்றிருந்தாலும் அவன் இந்த கனத்தில் தனது உண்மையான உள்ளத்து தேவையை உணர்ந்தவனாக ”என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது” என்ற பதிலாள் அவளது ஆசைக்கு அங்கேயே முற்றுப் புள்ளி வைக்கிறான்.
இதற்கிடையில் பாக்யலட்சிமியின் பெற்றோர்கள் தேடிக் கொண்டு ஊட்டிக்கு வர, விஜி குணமாகி அதாவது விஜியாக இருந்த நினைவுகள் எல்லாம் மறந்து போய் பாக்யலட்சிமியாகி தனது பெற்றோருடன் புகை வண்டியில் சென்னைக்கு திரும்புகையில் சீனு தான் காதலித்த விஜியை நினைவு படுத்த கர்ணம் போட்டு நினைவிற்கு கொண்டு வர முயற்சிக்க புகைவண்டி அவனது வாழ்க்கையில் வந்த விஜியை போலவே மறைந்து போகிறது.
மூன்றாம் பிறை இறுதி கட்டம்:
எல்லோரும் பார்த்து ரசித்த மூன்றாம் பிறை படத்தை இந்தியில் சத்மா (அதிர்ச்சி) என்று எடுத்தார் பாலுமகேந்திரா. ஒரு நாள் இரவு தூர்தர்ஷனில் நானும் எனது தம்பியும் இந்த படத்தை பார்த்தோம்.
பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மூன்றாம் பிறையில் எடுக்க நினைத்து விடுபட்டதை எல்லாம் சத்மாவில் எடுத்திருக்கின்றோம் என்று.
அப்படி விடுபட்டவை வந்து விடாதா என்று விழித்திருந்து பார்த்து ஏமாற்றமடைந்தோம். எங்களுக்கு எங்கள் மொழி என்பதால் தமிழ் மூன்றாம் பிறை தான் பிடித்திருந்தது என்பதில் எந்த வித சத்மாவும் இல்லை.
சத்மா கிளைமேக்ஸ் சீன்..
ஆனாலும் எங்களுக்கு இந்த இந்தி படத்தில் ‘ஏ ஜிந்தகி’ பாடல் மனதை என்னவோ பண்ணியது. இதோ அந்த பாடல்..
Ae zindegi gale laga le!Hum ne bhi, tere har ik gham ko,
Gale se lagaya hai - Hai na?
வாழ்க்கையே..!
என்னை
இறுக்கமாக
அணைத்துக் கொள்..!
(அதாவது ஆதரவாக ஆரத் தழுவிக் கொள் அல்லது என்னை முழுமையாக ஏற்றுக் கொள் என்ற பொருள்கள் அடங்கி கிடக்கிறது)
வழங்கிய
ஒவ்வொரு
துயரத்தையும்,
துக்கத்தையும்
நான்
அணைத்துக்
கொண்டு விட்டேன்..
இல்லையா..?
(அதாவது வாழ்வில் கிடைத்த துயரங்களையும் சோகங்களையும் அனுபவித்து சுகமாக நினைத்து ஏற்றுக் கொண்டு அதிலே பழகியும் விட்டேன்.. அதே போல் வாழ்க்கையே என்னையும் நீ ஏற்றுக் கொள் என்று வாழ்க்கையிடம் முறையிடுகிறான் இந்த அற்புத கவிஞன்.. கவிஞர்களை தவிர வேறு யார் தான் இப்படியெல்லாம் முறையிடுவார்கள்..)
-------------
Hum ne bahane se, chhup ke jamane se
Palkon ke, parde mein, ghar bhar liya.
Tera sahaara mil gaya hai zindegi
ஏ வாழ்க்கையே..!இறக்கையை விரித்து
உலகத்திலிருந்து மறைத்துஇமைகளின் பர்தாவினுள்
என் இல்லத்தினை
கட்டி வைத்தேன்..
(அப்படி பொத்தி பொத்தி வைத்து எனக்காக ஒரு இல்லத்தினை எழுப்ப..)
உன்னுடைய உதவியும்
கிடைத்தது..
என் அருமையான
வாழ்க்கையே..!
(வாழ்க்கையோடு என்ன ஒரு அருமையான உரையாடல்..! -
குல்ஜார் சாப்.. ஹேட்ஸ் ஆஃப்..)
la la lala la la lala la la la...
Tera sahaara mil gaya hai zindegi!
Humne do boondon se maan bhar liya
Humko kinaara mil gaya hai zindegi
சிறிய நிழல்
விழியோரம் வந்தது
இரண்டுசொட்டு கண்ணீரில்
மனம் நிறைந்தது
நான்
என் கரையை
கண்டு கொண்டேன்
வாழ்க்கையே..!
La la lala la la lala la la la..
Humko kinaara mil gaya hai zindegi!நான்
என் கரையை
கண்டு கொண்டேன்
வாழ்க்கையே..!--------------------------------------------------------------------------------------------------------
இதே பாடல் தமிழில்..
---------------------------------------------------------------------------------------------------------
இசைஞானி ’ஏ ஜிந்தகி’ டியுனை முதன் முதலில் பயன்படுத்திய ’தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் ’என் வாழ்விலே’ பாடல்..

நீ வாரி வாரிவழங்கிய

--------------
Chhota sa saaya tha, aakhon main aaya thaHumne do boondon se maan bhar liya