படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர்
படம் வெளியான ஆண்டு: 1977
இசை: ஜெய் தேவ்
இயக்கம்: பீம்செய்ன்
கதை: டாக்டர் சங்கர் சேஷ்
குருவி சேர்ப்பது போல் காசை சேர்த்து காதலியோடு சேர்ந்து வாழ வீடு கட்ட ஆசைப்பட்டான் ஒருவன். வீட்டை கட்டி கொடுப்பவர் பாதி வீடு கட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள வீடும் பணமும் காணாமல் போகிறது.
அந்த கட்டத்தில் எடுத்த சில தவறான முடிவுகளால் காதலியும் கை விட்டு போகிறாள்.
வாழ்க்கையை தொலைத்து விட்டு இனி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாத தனிமையில் அவன்.
அறிமுகமானவர் என்று யாருமில்லாத மும்பை போன்ற பெரிய நகரத்துக்கு வந்து தனிமை எனும் கொடுமையில் விழி பிதுங்கி நின்றால்...
இதோ குல்சாரின் பேனாவின் இலக்கிய'மை' இசையோடு கலக்கிறது..
Ek Akela is Seher Mein
Raat mein aur do-pehar mein
Aab-o-daana dhoondta hain...
Aashiyaanaa dhoondth hain...
இந்த நகரத்திலே
தனிமையிலே ஒருவன்..
இரவும் பகலும்
வாழ்வாதாரம் தேடுகிறான்...
வசிப்பிடம் தேடுகிறான்...
Din Khaali Khaali Bartan Hai
Aur raat hai jayse Andhaa Kuaan
In sooni andheri aankhon mein....
Aansoo ki jagah aata hai dhuaan
Jeene ki wajaah to koi nahin...
Marne ka bahaana dhoondta hai..
பகல் இங்கே
காலியான பாத்திரம்
(அதாவது பசித்தவனுக்கு காலியான பாத்திரம் என்ன பயன்படுமோ அதுவே இங்கே பகல் வாழ்க்கை)
இரவு இங்கே
ஆழமான கிணறு
(அதாவது பக்கத்தில் இருப்பவர் கூட யாரென்று தெரியாத மிகவும் ஆழமான இருள் நிறைந்த பள்ளத்தாக்கு)
தனித்துவிடப்பட்ட
கருமைநிற கண்களில்
கண்ணீரும்
வெறும் புகையானது..!
(அதாவது வைரமுத்து 'வெள்ளை புறா ஒன்று' பாடலில் அருமையாக எழுதியிருப்பாரே 'நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழையானதே' என்று அதே போல் தனிமையில் அழுதழுது கண்கள் ஏழையாகி இனி அவன் அழும் போது கூட வெறும் புகை மட்டுமே வருகிறதாம்)
இனி அவன்
வாழ்வதெற்கென்று
ஒரு காரணமும்
இல்லை..!
அதனால்
சாவதற்கு
ஒரு சாக்கு
(அதாவது காரணம்)
தேடுகிறான்..!
In umr se lambi sarhkon ko
Humne to Theherte dekha nahin
Bas Daurhti phirti rehti hain..
Manzil tak pahunchte dekha nahin
Is ajnabi se shehar mein..
Jaana Pehchaana dhoondta hai
இங்கே சாலைகள்
கூட
வாழ்க்கையை
விட
நீளமாக இருக்கிறது..!
அதை பயன்படுத்துபவர்கள்
ஓரிடத்தில் நிற்பதை
நான் பார்த்ததே
இல்லை..!
மாறாக
ஒடிக் கொண்டே
இருக்கிறார்கள்..!
அவர்கள் சேரிடம்
சேர்ந்ததையும்
பார்த்ததே
இல்லை..!
(அதாவது நகரத்து வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் சாலையிலே பாதி வாழ்க்கையை கழித்து வருவதோடு அவர்கள் போய் சேர வேண்டிய எல்லையையும் அடையாமல் 'ஏதோ ஓடுகிறது' என்பது போல் வாழும் வாழ்க்கையை பற்றி பேசுகிறது)
இத்தகைய
அறிமுகமில்லாத
விநோதமான ஊரில்
தெரிந்தவரையும்
அறிந்தவரையும்
தேடுகிறேன்..!
No comments:
Post a Comment