’ஆன்ந்தி’ - இந்த படத்தை பற்றி ஏற்கனவே எனக்கு தெரிந்த அளவுக்கு இங்கே ஒளறி கொட்டி களறி முடித்து இருந்தாலும் இந்த படம் பாதித்த அளவில் பாதி எழுதியதாக கூட ஒத்துக் கொள்ள முடியாது. சரியாக ஒளற (எழுத) தெரியவில்லை என வேண்டுமென்றால் உண்மையை ஒப்புக் கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்தை பற்றி நான் மறுபடியும் இங்கே எழுதுவதற்கு காரணம் இந்த படத்துக்கும் எனக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. எப்படியெனில்..
இந்த படத்தில் ஒரு கட்டத்தில் சுசித்ரா சென், ‘என்னா இது.. இஸ்மாயில் பாய்.. இஸ்மாயில் பாய்..’ என்று கூறுவார். கேமரா கொஞ்சம் பின்னுக்கு செல்லும் போது சஞ்சீவ் குமார் கையில் கேமராவுடன் சுசித்ரா சென்னை புகைப்படம் எடுக்க வேண்டி ‘இஸ்மாயில் பாய் இல்லை ஸ்மைல் பாய்’ என்று செல்லமாக சிரிக்க சொல்லி கொஞ்சி கொண்டு இருப்பார்.
இந்த வகையில் சுசித்ரா சென் ’இஸ்மாயில் பாய்’ என்று என் பெயரை சொல்லி எனக்கும் இந்த படத்திற்கும் ஒரு சம்மந்தத்தை ஏற்படுத்தி விட்டார். நான் என்ன செய்ய..?
'தேரா பினா ஜிந்தகி சே கோயி.. ' என தொடங்கும் இந்த பாடலை ஏற்கனவே மொழி பெயர்த்து எழுதியிருந்தாலும் (அரை குறையாக தான்)இங்கே பாடலை மட்டும் தனியாக எழுதி விட அடி மனதில் ஆசை வந்து விட்டது. ஆகையினால்.. இந்த பதிவு..
அரசியல் கட்சியின் தலைவியான ஆர்த்தி தேவி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக வெளியூர் சென்று ஒரு ஓட்டலில் தங்குகிறார். அந்த ஓட்டலின் எம்.டி கம் மேலாளர் தனது கணவர் என்று தெரிய வருகிறது.
முன்னர் ஆர்த்தி தேவி அரசியலில் ஈடுபடுவதை விரும்பாத காரணத்தினால் எழுந்த கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து இருவரும் பிரிய நேரிடுகிறது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.
இறுதி கட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ‘இனி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டு வீட்டில் குடும்பத்தை குழந்தையை கவனித்து கொள்கிறேன்’ என்று கூறுகிறார்
முன்பு அரசியலில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்த்த கணவரோ, ‘உன் சேவை கட்சிக்கும் நாட்டுக்கும் இப்போது அவசியம் தேவைப்படுகிறது, நீ வீட்டிலேயும் சரி.. நாட்டிலேயும் சரி.. தோல்வி அடைவதை நான் விரும்ப மாட்டேன். நீ போய் வா.. நான் எப்போதும் உன் கூட இருப்பேன்’ என்று அனுப்பி வைத்து கதையை தொடங்கி முடிப்பார்.
இந்த கதையை மிகவும் உணர்வு பூர்வமாக குல்சார் அவர்கள் ‘ஆன்ந்தி’யில் எடுத்திருப்பார்கள்.
ஒரு தியேட்டரில் 'See The Prime Minister of India' என்று விளம்பரப்படுத்தியதை பிலிம்ஃபேர் பத்திரிக்கையில் வெளியிட்டவுடன் இந்த படம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக முடிவு செய்து இந்த படத்துக்கு ஒரு முடிவு கட்டினார்கள்.
அதன் பிறகு சுசித்ரா சென் இந்திரா காந்தியின் ஆதரவாளர் போல் ஒரு காட்சி தனியாக எடுக்கப்பட்டு பிறகு சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் படம் முழுக்க ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் தான். அவர் தான் சுசித்ரா சென். அவரை தவிர்த்து படத்தில் வரும் அத்தனை பேரும் ஆண் கதாபாத்திரம் தான்.
ஜே.கே, ஆர்த்தியின் மகளான 'மன்னு' கூட சிறுமியாக இருக்கும் போது மட்டும் தான் காட்டுவார்கள் பெரியவளானதும் காட்ட மாட்டார்கள். அவளை சிம்லாவில் படிக்க அனுப்பி விடுவார்கள்.
ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் தான் என்றாலும் படமே அவரை சுற்றித் தான் அவர் இல்லாமல் இந்த படமே இல்லை. சுசித்ரா சென்னை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் அந்த கதையை குல்சாரே டைரக்ட் செய்ய வேண்டும் என்று குல்சார் சாபிடம் கதையை சொல்லிய போது,
குல்சார் சொன்னாராம், ‘இந்த கதைக்கு எதுக்கு சுசித்ரா ஜி.. இந்த கதையை தான் டைரக்ட் செய்யணும்னு சொன்னா இதுக்கு யார வேணும்னாலும் நடிக்க வைக்கலாம்.. ஆனால் சுசித்ரா ஜியை தான் நடிக்க வைக்கணும்னு சொன்னா நான் ஒரு கதை சொல்றேன்..’ என்று ஆன்ந்தி கதையை சொன்னாராம்.
அந்த அளவுக்கு சுசித்ரா ஜிக்காகவே எழுதப்பட்ட கதை. அவரும் இருக்கின்ற ஃபிலிம் இன்ஸ்டிடியுட்டுக்கு காம்பெட்டிட்டர் மாதிரி ஒரு நடிப்பு இன்ஸ்டிடியுட்டே நடத்தியிருப்பார் படத்தில்.
ஆனால் அதே சமயத்தில் சஞ்சீவ் குமாரையும் சும்மா சொல்லி விட முடியாது, சில ஹீரோக்கள் தங்களது புதுப்படம் வெளியாகும் போது 'நான் இந்த படத்தில ரொம்ப வித்தியாசமா நடிச்சிருக்கேன்..' என்பார்கள். கடைசியிலே படத்த பார்த்தா கேரக்டர் பேரு மட்டும் தான் வித்தியாசமா இருக்கும். 'தமிழ்படம்' படத்தில் மச்சத்தை வைத்து வேறொரு ஆள் என்பது போல் காட்டியிருப்பார்களே அந்த அளவுக்கு கூட வித்தியாசம் இருக்காது.
ஆனால் 'மாவ்சம்' என்ற படத்திலும் 'ஆன்ந்தி' என்ற படத்திலும் கிட்டதட்ட ஒரே மாதிரி மேக்கப், ஒரே மாதிரி காஸ்ட்யூம் என்றாலும் சஞ்சீவ் குமார் எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்திருப்பார்.
'குல்சார்', 'ஆர்.டி.பர்மன்', சஞ்சீவ் குமார்' காம்பினேஷனில் புதியதொரு படம் பார்க்க நிச்சயமாக நடக்காதுன்னு தெரிந்தும் மனம் ஒரு தலை ராகமாய் ஏங்கிக் கொண்டே இருக்கிறது.
பெரிய காரணம் ஏதுமில்லாமல் பிரியமான தம்பதிகள் பிரிந்த பின்பு இருவருமாக - தேர்தல் நேரம் என்பதால் இதை வைத்து எதிர்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் என்று பயந்து - யாருக்கும் தெரியாமல் இரவின் தனிமையில் சந்தித்து தத்தமது மனங்களை பேச விட்டு பிரிவுகளின் துயரங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
மரணித்த மௌணங்களும் செதுக்கிய சொற்களுமாய் நிரம்பிய அந்த சோக கனங்களின் ஒரு பதிவு தான் இந்த பாடல்...
(டிரில்லியன் தடவை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல்.. an ultimate song..)
மனைவி:
barson baad, yun ghumne nikli hoon ... aise lagta hai
ரொம்ப வருஷமாச்சு.. இப்படிலாம் வெளியே வந்து.. இது எப்படி இருக்குன்னா...!
கணவன்:
kiya?
என்ன..?
மனைவி:
jaise wo kisi sadi ki baath thi
ஒரு யுகத்தையே கடந்து வந்த மாதிரி இருக்கு
கணவன்:
huhn.., shaayad un dinon ki baath hogi.. jab yeh imaarath abhi ujdehi nahin thi..
(ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை சுட்டிக்காட்டி)
ஹும்.. இந்த கட்ட்டம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அநேகமா.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு..
மனைவி:
huhn.., pichle kisi janam ki bath hi tho laghti hai na?
ஹும்.. இன்னொரு தடவை பொறந்து வந்த மாதிரி இருக்கு.. இல்லை?
கணவன்:
ek kaam karein.., jab thak thum yahan ho.., roz ghar pe kaane keliye tho aaya hi karogi.. khaane ke baad, ghoom ne nikal aya kareinge.. kum-se-kum, yeh imaarath, kuch dinon keliye tho bas jaayegi
ஒரு வேலை செய்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும்.. ஒவ்வொரு நாளைக்கும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரியாவது இருந்துட்டு போவட்டும்..
thumhaare shawl kahan?
ஒன்னோட ஷால் (shawl) எங்கே?
மனைவி:
um, hahn hahn, bhool gai, hahn, ah, ah, na, na,
ம்.. ஆமா.. ஆமா.. நான் மறந்துட்டேன்.. இல்லை.. இல்லை.. (ஷாலை கணவர் போர்த்தி விட) வேண்டாம்.. வேண்டாம்.
கணவன்:
thum nahin badaloge, lo
நீ இன்னும் மாறவே இல்லை.. இத போர்த்திக்க..
பல்லவி:
பெண்:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை
Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை
வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை
Tere bina zindagi se koyi, shikwa, to nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும் குறைகளேதும்
இல்லை
சரணம் 1:
Kaash aisa ho tere qadmo se, chun ke manzil chale, aur kahi, door kahi
என் சேரிடம்
உன் பாதங்களின்
வழியாக
இருந்திருக்க வேண்டும் -
அது அல்லாமல்
வழிமாறி சென்றுவிட்டது
தூரமாக சென்றுவிட்டது
Tum gar saath ho, manzilo ki, kami to nahi
நீ என்னுடன்
இருந்தால்
என் சேரிடம்
குறைவில்லாமல்
இருந்திருக்கும்
வசனம்:
கணவன்:
Suno Aarti.., ye jo phoolon ki belen nazar aati hain na,
ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..?
darasal ye belein nahin hai, arabi main aayaten likhi huyi hain.
அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள் (எழுத்துக்கள்)..
Ise din ke vaqt dekhna chahiye.., bilkul saaf nazar aati hain.
நீ பகல்ல பார்த்தா.. நல்ல தெளிவா தெரியும்
(எதிரே கையை நீட்டி)
Din ke vaqt ye paani se bharaa rahataa hai.
இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..
(வேறொரு பக்கம் கையை காட்டி)
Din ke vaqt.., jab ye fuwhare...
பகல்ல இங்கே.. இங்கே துளித்துளியா இருக்கும் போது..
(என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)
மனைவி:
Kyon din ki baaten kar rahe ho
ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க..
Kahaan aa paaungi main din ke vaqt?
நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..
கணவன்:
Ye jo chaand hai na, ise raat main dekhnaa... Ye din main nahin nikaltaa ..
இந்த நிலா இருக்குல்ல.. இது ராத்திரியில மட்டும் தான் தெரியும்.. பகல்ல தெரியறிதில்லை..
மனைவி:
Ye to jaroor nikaltaa hogaa
இது தான் எப்போதும் தெரியுதே
கணவன்:
Haan.., lekin beech mein amaavas aa jaati hai...Waise to amaavas pandra dinon ke hothi hai, lekin is baar bahut lambi thhi
ஆமா தெரியும்.. ஆனா இடையில.. அமாவாசை வந்துடும்.. உண்மையில.. எப்போதும் அமாவாசை 15 நாளைக்கு பிறகு தான் நிலா வரும்.. ஆனா இந்த தடவை ரொம்ப நாளாயிடிச்சு..
மனைவி:
Nau baras lambi thhi naa ?
9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..?
சரணம் 2:
பெண்:
Jee mein aata hai, tere daaman mein, sar jhuka ke ham, rote rahe, rote rahe
உன்னுடைய
தோளில்
சாய்ந்து கொண்டு
அழுது
தீர்க்க வேண்டுமாய்
மனம் உந்துகிறது
Teri bhi aankho mein, aansuo ki, nami to nahi
உன்னுடைய
கண்களிலும்
அழுது தீர்த்த
தடங்கள்
தெரிகிறது..
ஆண்:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை
Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை
வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை
சரணம் 3:
ஆண்:
Tum jo keh do to aaj ki raat, chaand doobega nahi, raat ko rok lo
நீ மட்டும்
ஒரு வார்த்தை
சொன்னால்
இந்த நிலவின்
இரவுகள்
நீடித்திருக்கும்..
இரவை அப்படியே
நிறுத்திவிடு..!
Raat ki baat hai, aur zindagi baaki to nahi
இருவருக்குமான
இந்த இரவு
நீடித்து விட்டால்
இரவை தவிர்த்து
வேறு வாழ்க்கையே
பற்றிய பேச்சில்லை
பல்லவி:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை
Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை
வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை
என்னுடைய இண்டர்பிரடேசனும் குல்சார் சாபுடைய இண்டர்பிரடேசனும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சொல் குற்றம் பொருள் குற்றம் ஏதுமிருந்தால் பரிசுத் தொகையில் கழித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment