Sunday, July 24, 2011

அமைதி இல்லத்திலிருந்து.. அமைதியை வேண்டி.. நுஸ்ரத் சாபுடன் ஏ.ஆர்.ரஹ்மான்.


கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற “போறாளே பொன்னுத்தாயி..” என்ற இந்திய கறிக்குகொஞ்சம் பாகிஸ்தான் மசாலா கலந்து ஏஆர் ரஹ்மான் நுஸ்ரத்தோடு சேர்ந்து சமைத்த அறுசுவை...

இந்த பாடல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியிட்ட வந்தே மாதரம் தொகுப்பில் இடம் பெற்ற பாடல். அந்த தொகுப்பிலேயே இந்த வரிகளுக்காக எனக்கு மிகவும் பிடித்த பாடல்...





Chanda suraj laakhon taare hain jab tere hi yeh saare
சந்திரன் சூரியன்
இன்னும்
லட்சக்கணக்கான நட்சத்திரங்கள்
எல்லாம் உங்களுடையதே..!

Kis baat par hothi hai phir thakraarein

பிறகு நமக்கிடையே
என்ன காரணத்திற்காக
சர்ச்சை (சண்டை, கலவரம், குண்டு வெடிப்புகள்) ஏற்படுகிறது?
Keenchi hai lakeere is zameen pe par na keencho dekho

இந்த பூமியில்

உள்ள
எல்லைக் கோடுகளை
வரைந்து சென்றவர் யார்?
ஏன் அவ்வாறு செய்தனர்?
Beech mein do dilon ke yeh deewaarein

இது கடைசியில்
இதயங்களுக்கு இடையில்
அல்லவா
எல்லை கோடுகளாய்
இடையூறாய்
தடுப்புச்சுவராய்
வளர்ந்து நிற்கின்றது
Duniya mein kahin bhi, dard se koyi bhi…
Duniya mein kahin bhi, dard se koyi bhi
Ehsaas uske zakhmon ka ho ke
Thadpe to humko yahan pe
Apna bhi dil bhar bhar aaye roye aankhein

இந்த உலகில் எங்கேனும், யாருக்கேனும்
இந்த உலகில் எங்கேனும், யாருக்கேனும்
தடங்களுக்கு உள்ளானால்

எங்களுக்கும்
அந்த வலியை
இதயம்
ரணமாய் உணர்கிறது
கண்கள்
கண்ணீர் வடிக்கின்றது
What are you waiting for another day another dawn,
Somewhere we have to find a new way to peace
What are you waiting for another sign another call,
Somewhere we have to find a new way to peace!!!
நீங்கள் இன்னும் எத்தனை முறை தான்
இன்னொரு நாளுக்காக
இன்னொரு விடியலுக்காக
காத்திருப்பீர்கள்
நாம்தான்
எப்படியாவது
அமைதியை
கொண்டு வர
புதிய வழியை
கண்டுபிடித்தாக வேண்டும்..!!!
Doori kyon dilon mein rahe faasle kyon badhte rahe

ஏன் நம்
இதயத்திற்கிடையேயான
தூரம்
இன்னமும் இருக்கிறது
ஏன் இந்த
தூரம்
இன்னும் அதிகமாகிக் கொண்டே
இருக்கிறது

Pyaari hai zindagi hai pyaara jahaan

வாழ்க்கை அன்பு மயமானது
உலகம் அன்பு மயமானது
Rishte badi mushkilon se
ஒருவருக்கொருவர்
உறவாய் பழகுங்கள்
என்று சொன்னால்
அது
கடினமாக இருக்கிறது
ஆனால்
பிரிந்து விடுவதென்றால்
ஒரு கனம்
போதுமானதாய் இருந்து
தொலைக்கிறது..!

Ishq dava hai har ek dard ki



ஒருவருக்கொருவர்
அளவுக்கு அதிகமாக
நேசிக்க ஆரம்பிப்பதே
அனைத்து வலிகளுக்குமான
மிகச் சிறந்த மருந்து
Zanjeer ishq hai har ek rishte ki

அத்தகைய
நேசம் மட்டுமே

எல்லா உறவுகளையும்
கட்டி போடும்
சங்கிலி..!
Ishq saari hadhon ko tod daale

அத்தகைய
நேசம் மட்டுமே
அனைத்து எல்லைக் கோடுகளையும்
அழிக்க வல்லது..!
Ishq to duniya ko pal mein mita bhi de

அத்தகைய
நேசம் மட்டுமே
உலகத்தையே கேட்டாலும்
விட்டுக் கொடுக்க வைக்க
முடியக் கூடியது..!
Ishq hai jo saare jahaan ko aman bhi de

அத்தகைய
நேசமே
உலகம் முழுமைக்கும்
அமைதியை
கொண்டு சேர்க்க

போதுமானது

Rona ishq se hai saare aalam ki…
அத்தகைய
நேசத்திற்க்காக மட்டுமே
ஒட்டுமொத்த உலகமும்
ஏங்கி தவித்து
அழுது மடிகிறது..!

No comments: