Wednesday, July 13, 2011

கவ்வாலி நேரம் - மாலிக்குல் முல்க் - மர்ஹும் உஸ்தாத் நஸ்ரத் ஃபதேஹ் அலி கான் சாஹேப்

நான் இறைவனை பாடும் போது, நான் இறைவனின் பொருத்தத்தோடு , இறை இல்லமாம் கஃபதுல்லாஹ்விலே மக்கமா நகரிலே, இறைவனின் முன்னிலையிலேயே பாடுவதாக தான் உணர்கிறேன், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி பாடும் போது, மதினா நகரிலே அன்னாரின் மஜாரின் அருகிலேயே அமர்ந்து, பாடுவதாக உணர்வதோடு, அன்னாருக்கு மரியாதை செலுத்தி அவர்களின் செய்திகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாகவும் உணர்கிறேன்.

- நஸ்ரத் ஃபதேஹ் அலி கான்




-------------------------------------

அல்லாஹ்(ஜல்)வை புகழ்ந்து பாடும் பாடலுக்கு ’ஹம்து’ என்று வழங்கப்படுகிறது.

ஹஜ்ரத் பெருமானார் (ஸல்) அவர்களை புகழ்ந்து பாடும் பாடலுக்கு புனையும் கவிதைக்கு ‘நாத்’ என்று பெயர்.

கீழே கேட்க இருப்பது ஹம்து வகையை சேர்ந்த அற்புதம்.

------------------------------



http://www.youtube.com/watch?v=Sr6CNejcFRQ&feature=player_embedded
------------------------------
மாலிக்குல் முல்க்
லா ஷரீக்க லஹு
வஹ்தஹு
லா இலாஹா இல்லா ஹு
ஷம்ஸ் தப்ரேஜ் கர் ஹுதா தலபி
குஷ்புகுவான் லா இலாஹா இல்லா ஹு

ஆட்சி செய்யும் பேரரசன் 
(ஆட்சி - குரான் ஷரீஃபில் 67 வது அத்தியாயம்)
அவன் இணை துணை இல்லாதவன்
அவன் தனித்தவன்
இறைவன் என்று யாருமில்லை அல்லாஹ்வை தவிர
இறைவனை தேடிய ஷம்ஸ் தப்ரேஸ் 
(ஷம்ஸ் தப்ரேஸ் (றஹ்) என்பவர்கள் மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் ஆசிரியர் ஆவார்கள் - மேலும் சூஃபியாக்களை பொறுத்தவரை புனிதராக போற்றப்படுபவரும் ஆவார்கள்)
பரப்பிய பூவின் நறுமணம்
வேறு யாருமல்ல அல்லாஹ்வை தவிர


தெரே ஹி நாம் ஸே ஹர் இப்திதாஹே
தெரே ஹி நாம் தக் ஹர் இந்திஹாஹே
தெரி ஹம் தோ ஸனா - அல்ஹம்துலில்லாஹ்
கெ து மெரே முஹம்மத் (ஸல்) கா ஹுதா ஹே

உனது பெயர் கொண்டே அனைத்தும் துவங்குகிறது
உனது பெயர் கொண்டே அனைத்தும் முடிவுபெறவும் செய்கிறது
உனது புகழ் போற்றப்படக் கூடியது - எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
நீயே எனது உயிரினும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைவன் ஆவாய்..!

அல்லாஹீ அல்லாஹூ ... (திக்ர் - நினைவு கூர்வது)

யெ ஜமின் ஜப்னா தி
யெ ஜஹான் ஜப்னா தா
சாந்த் சூரஜ்னா தி
ஆஸ்மான் ஜப்னா தா

பூமி என்று ஒன்று இல்லாதிருந்த போது
உலகம் என்று ஒன்று படைக்கப்படாதிருந்த போது
இன்னும் சந்திரனும் சூரியனும் 
ஆகாயமும் இல்லாதிருந்த போது

ராஜே ஹக் பி கிஸி பர் அயான் ஜப்னா தா
தப்னா தா குச் யஹான்
தப்னா தா குச் யஹான்
தா மகர்
து ஹி து

ஹக் எனும் பேருண்மை ஒருவருக்கும் அறிவிக்கப் படாதிருந்த போது
ஒருவருக்கும் அறிவிக்கப் படாதிருந்த போது
ஒருவருக்கும் அறிவிக்கப் படாதிருந்த போது
ஒருவரும் இல்லை
உன்னை தவிர 

அல்லாஹு அல்லாஹு  ... (திக்ர் - நினைவு கூர்வது)


பஹுன்ச்சே மெஹ்ராஜ் மெய்ன் அர்ஷ் தக் முஸ்தஃபா
ஜப் நா மாபுத்-ஒ-பந்தே மெய்ன் பர்தா ரஹா

எப்பொழுது முஸ்தபா அவர்கள் (தூய்மையானவர்கள் என பொருள்படும் -பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர்) இறைவனது அர்ஷ் இருக்கும் இடத்திற்கு மெஹ்ராஜ் அன்று சென்றார்களோ 
எப்பொழுது அரசனுக்கும் (அல்லாஹ்) அடிமைக்கும் (ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்)) இடையில் இருந்த திரை விலக்கப்பட்டதோ 

தப் மலாயிக் னெ ஹஜ்ரத் செ ஜுக் கர் கஹா
சாரி மக்லூக் மெய்ன் ஹக் நுமா து ஹி து

அப்பொழுது மலாயிகத்மார்கள் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மரியாதையோடு தலைகுனிந்து சொன்னார்கள்
அனைத்து படைப்புகளிடத்திலும், பேருண்மை என்பது இறைவன் மட்டுமே - அது நீயே!

கியுன் பியா இப்னு ஹைதர் னெ ஜாம்-எ-ஃபனா?
க்கால் கிச்வா யி தப்ரேஜ் னெ கியுன் பலா?

ஏன் ஹைதரின் மகனார் ஃபனா (இறை பாதையில் தன்னை அழித்துக் கொள்வது) குவளையை பருகினார்கள்?
ஏன் (ஷம்ஸ்) தப்ரேஜ் உயிரோடு தோல் உரித்து அழிந்து போக சம்மதித்தார்கள்

தார் பர் சர்ஹ் கர் மன்சூர் னெ கியா கஹா?
சப் ஃபனா கெ கிலோனெ ரஹா து ஹி து

(மன்சூர்) ஹல்லாஜ் அவர்கள் தூக்கு மேடையில் என்ன உரைத்தார்கள்?
இந்த அனைத்து உயர்ந்தவர்களும் ஃபனாவாகி (அழிந்து) போனார்கள், ஆனால் என்றென்றும் நிலைத்து நிற்பவன் நீயே 

(ஹைதரின் மகனார்: இப்னு ஹைதர் - ஹைதர் என்றால் சிங்கம் என்று பொருள்படும் - இது ஹஜ்ரத் அலி (றலி) அவர்களின் மற்றொரு பெயர் - ஹஜ்ரத் ஹஸன் (றலி) அவர்களை குறிக்கும்)

(தப்ரேஜ் - ஷம்ஸ் தப்ரேஜ் - மவ்லானா ரூமி (றஹ்) அவர்களின் மார்க்க குருவும் ஆவார்கள்)

(ஹல்லாஜ்  - மன்சூர் ஹல்லாஜ் - மாபெரும் சூபி ஞானி: )


பாடல் தொடர்கிறது.....

இணைப்புகள்:





2 comments:

மு மாலிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்மாயில், உங்களது பழையப் பதிவில் (2-3 வருடங்களுக்கு முன்பிருக்கும்) இதேப் பாடலை ஏற்றி இருந்தீர்கள். அப்போதுதான் எனக்கு நுஸ்ரத் ஃபத்தே அலிகான் அவர்களின் கவ்வாலி எனக்கு அறிமுகம். அதற்கு முன்பு "deadman walking" என்ற திரைப்பட அளவில் மட்டுமே. மீஸ்பதிவுக்கு நன்றி

nagoreismail said...

வ அலைக்கும் ஸலாம்..

-------------------------

எங்கே ரொம்ப நாளா எழுதவே இல்லை..

ரொம்ப நாள் கழித்து ரீ எண்ட்ரி கொடுத்து ஒரு அதிரடி பதிவை வெளியிட்டு இருக்கிறீர்களே..!?

---------------------------

ஆமாம்.. அது நுஸ்ரத் அவர்களை பற்றிய பதிவு..

ஆனால் அதில் பாடலுக்கு முன்பு தொடங்கும் வரிகள் இடம் பெற்றிருக்காது.

நுஸ்ரத் அவர்களின் “யாதே நபி கா குல்ஷன் மெஹகா..” -பிறகு பதிவிடுகிறேன்..

-