Sunday, April 10, 2011

தேர்தல் சிறப்பு காட்சி - குல்ஜார் சாபின் ஹூ தூ தூ (கபடி) படத்திலிருந்து ஒரு காட்சி





நானா:
சபாஷ்..! சபாஷ்..!

எதுக்காக இப்படி போட்டு இடுப்பை வளைக்கிறே...!

ஏய்.. தம்பி..! இந்த் சாப்பாட்டை கொண்டு போய் உள்ளே வைப்பா..!

வந்து உட்கார்..!

(கோழியிடம்..) இரு..இரு.. கத்துறதுனால எந்த பலனும் இல்லை..!  உனக்கும் எனக்கும் ஒரே எதிர்காலம் தான்..!

தபு: அப்டின்னா..?

நானா:
இரண்டு பேரோட தலையும் ஒரு நாளைக்கு வெட்டுபட தானே போவுது..?

தபு: உங்களுக்கு பயமாவே இல்லையா?

நானா:
யாரை பார்த்து? அசைவம் சாப்பிடறவங்கள பார்த்தா?

தபு: (அவங்ககிட்டேந்து) இல்லை,

நானா:
அப்புறம்..

தபு: அரசியல்வாதிகிட்டேர்ந்து.. (உங்களுக்கு பயமா இல்லையா?)

நானா:
அட..! அவங்க கிட்டே எனக்கு என்னா பயம்.. அவங்களே பாதுகாப்பில்லாம இருக்காங்க.. அவங்க இதே தான் (கபடி ஆட்டத்தை காட்டி) செஞ்சிகிட்டு இருக்காங்க.. அங்கே பாரு.. இது என்ன இது..? உனக்கு தெரியுமா?.. ம்...

தபு: தெரியும்.. கபடி..

நானா:
ஆமா..! நாங்க ”ஹூ தூ தூ” என்று தான் சொல்வோம்.. அரசியல்வாதிங்க இதே தான் விளையாடிட்டு இருக்காங்க..  தூக்குறது... எறியிறது.. இழுக்கிறது.. காயப்படுத்துறது.. அடுத்தவங்கட காலை புடிச்சு இழுக்குறது.. கையை முறிக்கிறது.. அவங்களை உட்கார வைக்கிறது.. இவங்களை நிற்க வைக்கிறது... (சிரித்து விட்டு) இது தான் நம்முடைய தேசிய விளையாட்டா இருக்கணும்.. நீ என்னா நினைக்கிறே..?

தபு: உண்மை தான்

நானா:
ஆமாவா.. எவ்வளவு அருமையான ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்..

(கபடியை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கை தட்டுகிறார்கள்)

நானா தொடர்கிறார்:

இந்த கிராமத்துக்காரங்க மாதிரியே தேசம் முழுவதும் உட்கார்ந்து இந்த கபடி ஆட்டத்தை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க.. ஒரு வார்த்தை பேசாம..  ஊமையா..

(எழுந்து)

50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம தேசம் மந்திரிகளையும் மினிஸ்டர்ஸ்களையும் மட்டும் தான் உருவாக்க முடிஞ்சிச்சு.. ஒரே ஒரு.. தலைவரை கூட உருவாக்க முடியலை..

தபு: அத எப்படி உருவாக்கிறது..?

நானா:
உண்மை, நம்பிக்கை..  நீ எதை செய்றீயோ அதுல உனக்கு நம்பிக்கை இருக்கணும்.. (You must believe in what you do)

2 comments:

pichaikaaran said...

உங்கள் ஆன்மீக கட்டுரைகளை போல , பொது கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன

இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் - முகமது இஸ்மாயில்

nagoreismail said...

எனக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி பார்வையாளன்.
------------------
இன்றைக்கு ஒரு வீடியோ ஃபேஸ் புக்கில் பார்த்தேன்.

அதில் ஒரு நண்பர் அரை கால் சட்டையுடன் ஏதோ ஃபுட் பால் விளையாட வந்தவர் போல் பள்ளிவாசலில் போய் நின்று கொண்டு தொழுகைக்கான அழைப்பொலி பாங்கு சொல்லி கொண்டிருந்தார்.

அந்த காணொளியில் அந்த சிறிய அறை போல் இருந்த இடத்தை சுற்றிலும் கேமராவை திருப்பி காட்டி கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு போர்டும் உள்ளது. அந்த போர்டில் டி.என்.டி.ஜெ. என்று எழுதப்பட்டு இருந்தது.

அதாவது தமிழ்நாடு தௌஹீது ஜமாத்தின் (???) பள்ளிவாசல் அது.

இதை ஒருவர் விமர்சித்து இருந்தார்.

அதற்கு நண்பர் ஒருவர் ‘அரை கால் சட்டை போட்டுகிட்டு பாங்கு சொல்ல கூடாது என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.. அப்புறமா நாம ரெண்டு பேருமா சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கலாம்” என்பது போல் பதிகிறார்.

இவர்களுக்கு ஒண்ணு ஒண்ணுக்கா ஆதாரம் காட்டிகிட்டே இருக்கணும்..
கோவணம் கட்டிகிட்டு பாங்கு சொல்ல கூடாது, வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு பயான் சொல்ல கூடாது இப்படியாக சொல்லி கொண்டே போகலாம்..

இதெல்லாம் பார்த்த உடனேயே தெரிய வேண்டாமா எவ்வளவு பெரிய அதபு (மரியாதை) குறைச்சல் என்று..

ஆனால் இடங்களுக்கு இவர்கள் கொடுத்த மரியாதையை தெரிந்து கொண்டேன்.
-----------------
நாகூரில் இந்து முஸ்லீம் கலவரம் நடந்தது. அப்போது முஸ்லீம்களை சிறையிலிருந்து வெளியிலெடுத்த ஒரு இந்து வக்கீல் எங்கள் ஹஜ்ரத்திடம், ‘நான் முஸ்லீமல்ல..’ என்றார்...

எங்கள் ஹஜ்ரத் சொன்னார்கள், ‘எனக்கு மனுஷனா இருந்தா போதும்..” என்று..

இஸ்லாம் அல்லாத நீங்கள் என் தளத்தை படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்..

மனிதனாக இருக்க முயற்சி செய்வோம்..

இஸ்லாம் மார்க்கம் எவ்வளவு அமைதியானது, அழகானது, கவித்துவமானது, புனிதமானது, எல்லாத்துக்கும் மேலே சிம்பிளானது என்பதை சூஃபியச வழிமுறையை கடைபிடிக்காமல் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளவே முடியாது என்பது எனது அழுத்தம் திருத்தமான கருத்து.

மீண்டும் நன்றிகள்..