குரான் ஷரீஃப் வசனம்:
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
-ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) - 152 வது வசனம்
இந்த வசனம் ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வசனம்.
அதாவது யாகூர் நபி என்றழைக்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகளை பிர்அவ்ன் எனும் அரசன் அடிமையாக்கி தன்னையே கடவுளென வணங்கி வரும் படியும் ஏவினான். இறைவன் அந்த மக்களை மூஸா நபி மூலமாக காப்பாற்றி பிர் அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்த பிறகு இறைவனிடமிருந்து செய்தியை பெற தூர்சினாய்க்கு செல்கிறார்கள்.
மூஸா நபிய்வர்கள் 40 நாட்கள் தான் தன்னுடைய மக்களை விட்டு பிரிந்து போனார்கள், வேறு எங்கும் அல்ல, இறைவனைக் கண்டு கட்டளைகளை பெற்று வர தூர்சினாய்க்கு தான் சென்றார்கள்.
இறைவன் மூஸா நபியவர்களுக்கு உண்மையான இறை மார்க்கத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் போலியான இன்னொரு போட்டி மார்க்கத்தை சாமிரி என்பவர் உருவாக்கினார். எந்த மக்கள் இறைவனின் அத்தாட்சியை கண்கூடாக பார்த்தார்களோ அதே மக்கள் அந்த சாமிரி உருவாக்கின அந்த போட்டி மதத்தை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.
திரும்பி வந்து சாமிரியிடம் மூஸா நபியவர்கள் இது பற்றி ’உன் விஷயமென்ன?’ என்று கேட்டபோது அவன் அழகாக பதில் சொன்னான்.
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
-ஸூரத்து தாஹா - 96 வது வசனம்
அவர்கள் காணாத ஒன்றை சாமிரி கண்டு இருக்கிறார்.
எதில் கண்டு இருக்கிறார்?
தூதரின் காலடி மண்ணில்,
- சாமிரி பொய் சொல்லவில்லை என்று கொண்டால் (உண்மையும் அது தான்), இதிலிருந்து நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
1. தூதரின் காலடி மண்ணில் ஏதோ ஒரு அற்புதம் இருந்திருக்கிறது.
2. தூதரின் காலடியில் இருந்த ஏதோ ஒரு அற்புதத்தை சாமிரியும் கண்டு இருக்கிறார்.
3. மற்றவர்களுக்கு இந்த அற்புதம் விளங்கவில்லை, அவர்கள் இந்த அற்புதத்தை கவனிப்பாராகவும் இருக்கவில்லை.
4. மற்றவர்களை விட சாமிரியான இவர் மறைவான உண்மைகளை அறியக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்.
5. அந்த தூதர் காலடி பட்ட மண்ணுக்கு எந்த அளவுக்கு சக்தி இருந்தது என்றால் அதை சாமிரி எறிந்த போது காளைக் கன்றுக்கு சப்தம் (அதாவது உயிர் வந்தது போல்) தோன்றியது.
6. அப்படி போலியான போட்டி மதத்தை உருவாக்க தூதரின் காலடி மண்ணில் தான் பார்த்த அந்த மறைவான அற்புதத்தை பயன்படுத்திக் கொண்டார்.
7. அவ்வாறு அவர் உருவாக்குவதை அவரின் மனம் அவருக்கு அழகான செயலாக காட்டியிருக்கிறது.
நபிகளின் வரிசையில் முத்திரை முடிந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் நம்மிடம் எத்தனையோ சாமிரிகள் எத்தனையோ காளைகன்றை கொண்டு வந்து விட்டனர்.
சிலர் கேஸட், சிடி போட்டு உண்மைக்கு புறம்பானவற்றை கொண்டு வந்தார்கள்,
சிலர் அரசியல், பணம், பதவியை கொண்டு வந்தார்கள்.
சிலர் மந்திரம், தந்திரம் செய்து காட்டினார்கள்.
சிலர் தன்னை இறை தூதர் என்றே காதில் காதியானி சொன்னார்கள்.
இவ்வாறு தங்களின் மனம் அவர்களுக்கு எதையெல்லாம் அழகாக காட்டியதோ அந்த அழகிய பேச்சுக்களை எல்லாம் விற்பனை செய்து வந்தார்கள். மூஸா நபி இறங்கி வந்ததை போல் இமாம் மஹதி (றஹ்) அவர்கள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்...
"There are as many paths to God as there are souls on Earth." - ஹதீது

10 comments:
www.jafarla.blogspot.com
www.jafarla007.blogspot.com
திரு ஜாபர்லா கான் அவர்கள் சமூகத்திற்கு,
அல்லாஹ்வை தவிர வேறொரு அல்லாஹ் இல்லை.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களே இறுதி இறை தூதராக இருக்கிறார்கள்.
இதில் மாற்றுக் கருத்துக்கோ மறு பேச்சுக்கோ இடமே இல்லை...
அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரை அல்லாஹ்வுக்கு இணையாக்கவும் மாட்டோம்.
உயிரினும் மேலான் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களை தவிர்த்து வேறு எவரையும் தன்னை இறைவனுக்கு நெருக்கமானவராக காட்டிக் கொண்டாலும் இறைவனுக்கு தூதராக அறிவித்துக் கொண்டாலும் அவரை தூதராக நபியாக ரஸூலாக ஏற்க மாட்டோம்.
நபி (ஸல்) அவர்கள் விட யாரையும் நாங்கள் உயர்வானவர்களாக கருதவுமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களை இறுதி நபி என்று கூறுவது நபி (ஸல்) அவர்களை பெருமைபடுத்துவதா? அல்லது எல்லா நபி மார்களையும் விட சிறந்தவர் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களை பெருமைப்படுத்துவதா? நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு வேறு நபி இல்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்களின் கூற்றை மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
م أما بعد: روى الإمام أحمد عن حذيفة بن اليمان -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيّاً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ" ثم سكت.நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார். பஷீர் பின் சஃது என்பவரிடம் நான் கேட்டேன், உமராக்களைப் பற்றி எதாவது ஒரு ஹதீஸை நீர் மனனம் செய்து வைத்திருக்கின்றீரா? என்று, அந்த இடத்தில் (நேரத்தில்) ஹுதைஃபா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர் வழிய வந்து சொன்னார்கள். அன அஹ்ஃபலு ஹுத்பதஹு நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனனம் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். சொல்லிவிட்டு கூறினார்கள், தகூனு நுபுவ்வத்ஃபீகும் - உங்களிடத்தில் நுபுவாத் நிலைத்து நிற்கும், மாஷா அல்லாஹு அன் தகூன - எவ்வளவு நாளைக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அவ்வளவு நாட்களுக்கு நான் இருப்பேன் என்று கூறுகிறார்கள். ஃதும்ம யர்ஃபஉஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா அதை எடுக்க நினைக்கும் போது அதை அல்லாஹ் எடுத்துக் கொள்வான். (நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி கூறப்படுகிறது) ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - நுபுவ்வத்தின் அடிச்சுவட்டில் கிலாபத் நடக்கும். ஃபதகூனு மாஷா அல்லாஹு அன் தகூன - கிலாஃபத் எவ்வளவு நாட்களுக்கு என்று அல்லாஹ் நினைக்கின்றானோ அதுவரை இருக்கும் ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய்யர் ஃபஅஹா - அல்லாஹ் எடுக்க நினைக்கும் போது அதையும் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் அழ்ழன் - பிறகு கொடூரமான ஆட்சி ஏற்படும் பயகூனு மாஷா அல்லாஹு அன்ய்யகூன - அது எவ்வளவு நாங்கள் இருக்க வேண்டுமோ அது வரை இருக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - பிறகு எடுக்க நினைக்கும் போது அதையும் அல்லாஹ் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் ஜப்ரிய்யதன் - பிறகு இன்னும் அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படும், தகூனு மாஷா அல்லாஹு அன் தகூன -அல்லாஹ் எவ்வளவு நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறானோ அது கொஞ்சம் நாட்களுக்கு நீடிக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - எப்போது அதையும் எடுக்கவேண்டும் என்று நாடுகிறானோ அப்போது அதையும் எடுத்துவிடுவான். ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத் ஏற்படும். என்றும் கூறுகிறார்கள்.
இங்கு இறுதியில் கூறப்படும் வாசகத்தை கவனிக்க வேண்டும் 'பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத்' ஏற்படும் என்று தெளிவாக கூறப்படுகிறது.
(மேற்கண்ட ஹதீஸ் மிஷ்காத் என்னும் ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது)
நபி (ஸல்) அவர்களே இறுதியில் நபித்துவமும் நபித்துவத்தை தொடர்ந்து கிளபாத்தும் ஏற்படும் என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களை விட சிறந்த நபி வேறு யாருமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வரமுடியும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது
ஆஹா..
நீங்களும் ’ஆதாரம்’ காட்டுகிறீர்களா?
சாரி சார், நீங்க தவறான இடத்திற்கு வந்துட்டீங்க..
ஆதாரம் கேட்கிறது...,
ஆதாரம் காட்டுறது...,
கேள்வி - பதிலில் பிச்சு உதறுவது
இதெல்லாம் இங்கே எண்டர்டெய்னோ அல்லது என்லைட்டனோ பண்ணப் பட மாட்டாது.
ஒரே ஒரு விஷயம்..
நீங்கள் பெருமானாரை (ஸல்) அவர்களை இறுதியாக ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ.. உங்கள் மீது நிர்பந்தம் இல்லை.. ஆனால் மேலே எழுதியது என் தளத்தில் இறுதியானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அப்புறம்.. இறுதியாக..
யாரைப் பொறுத்த வரையிலும் அல்ல.. என்னை பொறுத்த வரையில் ‘இறுதி நபி’ என்று கூறுவது நிச்சயமாக பெருமைப்படுத்துவது தான். அதில் சந்தேகமே இல்லை.
நீங்க என்னா ஓட்டப் பந்தயம் மாதிரி முதலாவதா வருவது மட்டும் தான் பெருமையா இருக்கலாம் என்று நினைத்து விட்டீர்களா...?
ஒரு கட்டடத்தின் கடைசி செங்கல் அவர்கள் என்று சொல்லும் போது பெருமானாரின் (ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நாங்கள் பெருமையடைய தான் செய்கிறோம்.
அவர்களுக்கு அடுத்த படியாக நபியாக ஒருவர் வருவதென்றால் அதற்கு தகுதியானவர்கள் உமர் (றலி) அவர்களாகத் தான் இருக்க முடியும் என்ற அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்வதாலும் வேறு யாரையும் அதாவது நபி என்று கிளைம் பண்ணுபவர்களை நபியாக மட்டுமல்ல வேறு எதாகவும் சட்டை பண்ணப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு நீங்கள் சரியான இடத்திற்கு வரவில்லை என்பதனையும் உறுதி படக் கூறிக் கொள்கிறேன்.
ஃபுல் ஸ்டாப்.
ஆதாரம் காட்டவில்லைஎன்றால் எங்கே ஆதாரம் என்று கேட்கிறீர்கள். ஆதாரம் காட்டினால் நீங்களும் ஆதாரம் காட்டுகிறீர்களா என்று கேட்கிறீர்கள்? இறுதி செங்கல் என்ற ஒரு வார்த்தையைப் பயன் படுத்தி இருக்கிறீர்கள். ஒரு கட்டிடம் முழுமை பெற்றது என்பது ஷரியத் முழுமை பெற்றிருக்கிறது என்றே பொருள். நபி (ஸல்) அவர்கள் எங்கே எல்லாம் தன்னை இறுதி நபி நேற்று கூறுகிறார்களோ அங்கே எல்லாம் ஷரியத் கொண்டுவந்த நபி மார்களில் இறுதியானவர் என்ற பொருளிலேயே கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் நன்மாராயமான நுபுவத்தை தவிர மற்றைய நுபுவத்கள் முடிவுபெற்று விட்டது. :"லம் யப்க மினன் நுபுவத் இல்லல் முபஷ்ஷிராத்" நீங்கள் புரிந்து கொண்ட விதத்தில் தான் தவறு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி வேறு எந்த நபியும் தோன்ற மாட்டார்கள் என்றால் இதை அல்லாஹ் திருக்குரானில் தெளிவுபடுத்தியிருக்கலாமே. அதுமட்டுமல்ல ஒரு நபிக்கு பிறகு வேறு நபி இல்லை என்பதை வழிகெட்ட கொள்கை என திருக்குர்ஆன் கூறுகிறது; நபி (ஸல்) அவர்களே இறுதிகாலத்தில் நபித்துவமும் நபித்துவத்தை தொடர்ந்து கிலாபத்தும் இருக்கும் என்று கூறுகிறார்கள். மிஷ்காத், முஸ்னத் அஹ்மத் என்ற இரண்டு ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது
உங்களுக்கு ஃபுல் ஸ்டாப்புக்கும் அர்த்தம் தெரியாது, காத்தம் என்ற அரபி வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்கிறேன்.
நல்லா படிங்க...
ஆதாரம் எல்லாம் நான் கேட்டிருக்க மாட்டேனே..
அதுவும் உங்களைப் போன்ற ’இறுதி நபி’ பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களிடம்...
இந்த முறை இப்படி டிரை பண்ணி பார்க்கிறேன்..
முற்றுப் புள்ளி..
காத்தம் என்ற சொல்லுக்கு இஸ்லாமிய அறிஞ்சர்கள் கொடுத்த விளக்கம் இது. உங்களுடைய விளக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தவும்
அபூ தம்மாம் தாயீ என்னும் கவிஞ்சர் மரணமடைந்த போது ஹசன் பின் வஹ்ஹாப் என்ற கவிஞ்சர் எழுதிய ஒரு கவிதையில் அபூ தம்மாம் தாயீயை 'காத்தமுஷ்ஷூ அராயி கவிஞ்சர்களில் காத்தம் அதாவது சிறந்தவர் என்று வர்ணித்துள்ளார்கள். (வபாயத்துள் அய்யான், பாகம் ௧ பக்கம் )
தேவ்பந்து அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்லாமா முஹம்மத் காசிம் அவர்கள், ஷாஹ் அப்துல்லாஹ் அஸீயைப் பற்றி "ஹாத்தமுல் முஹத்திசீன் வல் முபஸ்ஸீரி (ஹத்யத்துஷ்ஷியா) என்றும்
சைஹுள் ஹிந்து மௌலானா மக்மூதுல் ஹசன், தமது 'மர்சிய்யா' என்னும் நூலில் மௌலானா ரஷீது அஹ்மத் அவர்களைப் பற்றி 'ஹாத்தமுல் அவ்லியா வல் முஹத்திசீன்' என்றும்
ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ்வைப் பற்றி ஷாஹ் அப்துல் அசீஸ் அவர்கள், தமது 'உஜாலா நாபியா' என்னும் நூலில் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்
மகாமத்தே ஹரீரி என்னும் நூலில் அதன் ஆசிரியர், அல்காசிம் பின் அலியை, 'காத்தமுல் புல்கா' என்றும்
'முஅத்தா' ஹதீஸ் நூலில் ஷரஹில் அல்லாமா முஹம்மது சர்க்கானியை காத்தமுல் முஹக்கிகீன்' என்றும்
'இத்கான்' என்னும் நூலின் ஆசிரியர் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தியை 'காத்தமுல் முஹக்கிகீன்' என்றும் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்
'புதுஹாத்தே மக்கிய்யா' என்னும் நூலின் 'ஷேக் முஹியித்தீனிப்னு அரபியை 'காத்தமுல் அவ்லியா' என்றும்
பத்ஹுல் முயீன் என்னும் நூலில், அல்லாமா இப்னு ஹஜரில் ஹைதமியை, 'காத்தி மத்துல் முஹக்கிகீன்' என்றும்
மின்ஹாஜூ சுன்னத்' என்னும் நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தீமிய்யா வை 'காத்திமத்துல் முஜ்தஹிதீன்' என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த லிங்கை கிளிக் செய்து காத்தம் என்பதன் அர்த்ததி அறிந்துகொள்ளுங்கள்.
http://jafarla007.blogspot.com/2010/05/blog-post_7829.html
Post a Comment