Wednesday, April 06, 2011

வாழ்க்கையே.. உன்மீதெனக்கு கோபம் இல்லை..! ஆச்சர்யம் தான்!! - குல்ஜார் சாப் பாடல்கள்

சேகர் கபூரின் முதல் இந்தி படம் ‘மாசும்’. 


குழந்தைத்தனமான, அப்பாவியான, ஒரு விபரமும் அறியாத என்று அர்த்தப்படும்.


இதே படம் தமிழில் ‘பூ பூவா பூத்திருக்கு’ என்று கெடுத்தார்கள் மன்னிக்கவும் எடுத்தார்கள்.


படத்தில் வசனங்களும் பாடல்களும் குல்ஜார் சாபின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.


கதை சுருக்கம்:


மனைவி, இரண்டு அழகான வெள்ளை ரோஜா போன்ற பிள்ளைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் நசிருதீன் ஷாவிற்கு ஒரு தொலைபேசி நய்னிதால் என்ற ஊரிலிருந்து வருகிறது.


‘வந்து உங்க குழந்தைய கூட்டிட்டு போங்க..’ என்று


அதிர்கிறார் நசீர்.


பரிதாபத்துக்குறிய ஒரு பெண்ணின் அழுத்தமான ஏக்கத்தில் பங்கெடுத்த போது விளைந்த உயிர் ஒன்றை பற்றி மனைவி ஷபனா ஆஜ்மியிடம் பக்குவமாக சொல்கிறார்.


எவ்வளவு பக்குவமாக சொன்னாலும் எந்த மனைவியும் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக இயல்பாகவே இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி போகிறது.


குழந்தையை கூட்டிட்டு வந்து இங்கே சில நாட்கள் வைத்திருந்து விட்டு பிறகு நய்னிதாலிலேயே ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாக உத்திரவாதம் கொடுத்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார் நசீர்.


குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியாது.


தந்தையின் தற்போதைய மனைவி தன்னை ஏன் வெறுத்து ஒதுக்குகிறார் என்று புரியாமல் அந்த மகன் தவிக்கிறான்.


தான் பெற்ற குழந்தைகளோடு நெருக்கமாக இந்த மாற்றாந்தாயின் மகன் பழகுவதை விரும்பாத அவர் ஒரு கட்டத்தில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு மறுவேளை பார்க்கவும் என்ற உத்திரவு போடுகிறாள்.


குழந்தையை கூட்டிக் கொண்டு ஹாஸ்டலுக்கு வருகிறார் நசீர்..


ஆனால் குழந்தையோ ஹாஸ்டலில் தங்குவதை விரும்பவில்லை..


நசீருக்கு அந்த சமயத்தில் கூட வாழ்க்கையை வெறுக்க முடியவில்லை.. ஒரு கவிஞனை போல் ஆச்சர்யப்படுகிறார்... சந்தோஷமாக சிரித்து களித்தது எல்லாம் திருப்பி வாழ்க்கை கடனாக வசூல் செய்து விடுவதாக பாடுகிறார்.
---------------------
மகன்: அங்கிள், உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

தந்தை: அப்படியா? பேட்டே (மகனே..!) உன்னையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

ம: என் அப்பா... என் அப்பா வந்தாங்கன்னா கூட... நான் அவங்க கூட தங்க மாட்டேன்..

த: ஏன்...?

ம: நான் உங்க கூட தான் தங்குவேன்.. 
(சிறிய மௌணம்)
நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாம்மா..?
---------------------
Tujhse naaraz nahi zindagi
Hairaan hoon main
Ho..hairaan hoon main 

வாழ்க்கையே..! 
உன் மீது 
எனக்கொன்றும் 
கோவம் இல்லை 
ஆச்சர்யம் தான்.. 
ஆமாம்.. 
ஆச்சர்யம் தான்.. 

Tere masoom sawalon se
Pareshaan hoon main
Ho..pareshan hoon main 

உன்னுடைய 
வெள்ளந்தித் தனமான 
கேள்விகள் 
எனக்கு தர்மசங்கடத்தை 
ஏற்படுத்துகின்றன.. 
ஆமாம் 
குற்றஉணர்வை 
ஏற்படுத்துகின்றன..
---------------------
Jeene ke liye socha hi nahi
Dard sambhalne honge
Muskuraaye to muskuraane ke
Karz utaarne honge
Muskuraun kabhi to lagta hai
Jaise hothon pe karz rakha hai

ஒருபோதும் 
நினைத்ததில்லை
வாழவேண்டுமெனில்
துயரங்களை சுமந்துதான்
பழகவேண்டுமென்று

(நினைத்து கூட பார்த்ததில்லை)
சிரிக்க வேண்டுமெனில்
கடனாக தான் 
சிரிக்க வேண்டுமென்று

நீ கொடுத்த
ஒவ்வொரு
சிரிப்பின் போதும்
இதழ்கள் எனக்கு
நினைவூட்டுகிறது
இதற்குறிய
கடனை திருப்பி 
செலுத்தியே 
ஆக வேண்டுமென்று..
---------------------
Zindagi tere ghum ne
Humein rishte naye samajhaye
Mile jo humein dhoop mein mile
Chhanv ke thande saaye

துயரங்கள்
நிறைந்த
உன் வாழ்க்கை
நம் உறவுக்கு
புதிய அர்த்தங்களை 
தந்திருக்கிறது

மகிழ்ச்சியான தருணத்தில்
அனுபவித்த இன்பங்கள்
இப்போது தான்
வலிகளை காட்ட
ஆரம்பித்திருக்கிறது..
---------------------
(கதவை தாழிட்ட படியே)

த: தேங்க் யு... தேங்க் யு வெரி மச்....

ம: நான் இந்த ஹாஸ்டலில் தங்க மாட்டேன்..

த: ஹை... ஏன்..?

ம: எனக்கு இது புடிக்கவே இல்லை...

த: இங்கே தங்கலாம்.. நிறைய புள்ளைங்க இங்க தங்கி படிக்கிறாங்க..

ம: நான் டெல்லில தங்க முடியாதுல்ல..? 

த: இல்லை.. நீ இங்கே தான் ஹாஸ்டலில் தங்கிக்கணும்..

ம: நான் ஏன் உங்க கூட தங்க முடியாது...?
---------------------
Aaj agar bhar aayi hai
Boonde baras jaayengi
Kal kya pata inke liye
Aankhe taras jaayengi
Ho..jaane kab ghum hua kahan khoya
Ek aansoo chhupa ke rakha tha

இப்போது
குளாமாக 
காட்சி தரும்
எனது கண்கள்
வரண்டு போய் விடும்

யாருக்கு தெரியும்
நாளை
யாருக்காக ஏங்கும்
என்று

ஆனந்த கண்ணீர்
ஒன்றிரண்டை
சேமித்து வைத்திருந்தேன்
அது எங்கே
தொலைந்து போனது
என்ற சுவடு கூட
தெரியவில்லை..!
---------------------
தந்தை மகன் வரைந்த ஓவியங்களை பார்த்து விட்டு: வெரி குட், (ஒரு வயதானவரும் ஒரு சிறுவனும் இருக்கும் ஓவியத்தை பார்த்து விட்டு) அப்புறம், இது யாரு?


மகன்: இது நானும் என்னோட அப்பாவும்


த: ம்ஹீம்.. (என்று தலையை ஆட்டிவிட்டு) உங்க அப்பா கண்ணாடி போட்டிருப்பாரா?


ம: ஆமாம்

வாழ்க்கையே..! 
உன் மீது 
எனக்கொன்றும் 
கோவம் இல்லை 
ஆச்சர்யம் தான்.. 
ஆமாம்.. 
ஆச்சர்யம் தான்..  

(கண்ணாடியை கழட்டுகிறார்)

உன்னுடைய 
வெள்ளந்தித் தனமான 
கேள்விகள் 
எனக்கு தர்மசங்கடத்தை 
ஏற்படுத்துகின்றன.. 
ஆமாம் 
குற்றஉணர்வை 
ஏற்படுத்துகின்றன..
-------------------------
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அமானத் அலி என்பவர் ஜி டிவியின் சரிகமப எனும் நிகழ்ச்சியில் குல்சார் சாபின் மகளார் மேக்னா குல்சார் முன் பாடியது.

மிகவும் நெகிழ்வுடன் ரசிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை பாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

எல்லோர் கண்களிலும் கண்ணீர்...


5 comments:

அரபுத்தமிழன் said...

சகோ, முதல் வீடியோக்கான லிங்க் தந்தால் நலம்.
இங்கே அலுவலகத்தில் யூடியூப் தடுக்கப்பட்டுள்ளது.

nagoreismail said...

தம்பி, எனது அலுவலகத்திலும் யுடியுபை ரெஸ்டிரிக்ட் செய்து தான் வைத்துள்ளார்கள்.

வீட்டிற்கு சென்றது பார்த்து லிங்க் தருகிறேன்.

நன்றிகள்.

நிறைய பேர் இருப்பார்கள். மேக்னா குல்சாரின் முகத்தில் தான் அந்த வீடியோ காட்சி முற்றுப் பெறும்.

அவர் கையை ஒரு மாதிரி பணிவன்போடு பாராட்டுகிற மாதிரி கையை அசைப்பார்.

nagoreismail said...

http://www.youtube.com/watch?v=O2raPC1mYUc&feature=player_embedded#at=13

As requested, please find the above link which is for the first video

pichaikaaran said...

மிக சிறப்பான இடுகை...

ஆன்மிக கருத்துக்களுடம் இது போலவும் எழுதுங்கள்...

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

nagoreismail said...

நன்றிகள் பார்வையாளன்.. நான் இதை எதிர்பார்க்கவில்லை..