Tuesday, December 06, 2011

கர்பலா

இதையும் படிக்கலாம்: http://nagoreismail786.blogspot.com/2010/12/blog-post.html

"Truly, Allah does not remove Sacred Knowedge by taking it out of servants, but rather by taking back the souls of Islamic scholars [in death], until, when He has not left a single scholar, the people take the ignorant as leaders, who are asked for and who give Islamic legal opinion without knowledge, misguided and misguiding
(Fath al-Bari, 1.194, hadith 100).

இன்றைக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்வதில் இருப்பதன் மிகப் பெரிய சவாலே அதனை தூய வடிவில் சொல்லி தருவதாக கூறி கூட்டத்தை கூரு போட்டுக் கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களால் தான்.

அத்தகையோர் அவர்கள் கருத்தியலை சாராத மக்களை எவ்வளவு அலட்சியமாக ஆதங்கத்தோடும் மேதாவித்தன திமிரோடும் ஒரு மார்க்க தலைவருக்கு இருக்கக் கூடாத தகுதிகளை பரிபூரணமாக நிரப்பி பேசி வருகிறார்கள் என்பது வேதனைக்குறியது.
எரிகின்ற கொல்லிக்கு எண்ணெயாய் என்னமாய் எண்ணமதை போதிக்கிறார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி பேருரையில் “.. எனக்கு பிறகு நீங்கள் இணை வைத்து விடுவீர்களோ என்று கூட நான் அஞ்சவில்லை... ஆனால் எங்கே ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிரிந்து விடுவீர்களே என்றே நான் அஞ்சுகிறேன்..” என்று கூறினார்கள். 
பெருமானார் (ஸல்) அவர்களுக்கே இல்லாத அதிகபிரசிங்கித்தன அக்கறையும் அச்சமும் இவர்களுக்கு எந்த ஷைத்தான் விதைத்து விட்டு போனதோ தெரியவில்லை. 

தகவல் பரிமாற்ற வழிமுறையின் (Communication Process) படி பார்த்தால் தகவல் பரிமாற்றத்திற்கு (Communication) முக்கியமாக ஒன்று தேவைப்படுகிறது. அது தான் தகவல், சொல்ல வேண்டிய செய்தி (Message). அந்த தகவலை (Message) குறியீட்டாக்கி (encode) செய்து ஒரு ஊடகர் அல்லது ஊடகத்தை (Medium) தேர்ந்தெடுத்து - இதனை சரியாக தேர்ந்தெடுத்தால் தான் செய்தி சரியானபடிக்கு போய் சேரும் - பிறகு அந்த செய்தியை திரும்பவம் பெறுநருக்கு (Receiver) புரிகிற மாதிரி மாற்றம் செய்து (Decode) சொல்ல வேண்டும். 

தகவலை பெறுநர் எவ்வளவு தூரம் புரிந்து கொள்கிறார் (the degree of understanding) என்பது பல்வேறு காரணிகளை பொறுத்து அமையும், உதாரணமாக அவரின் கேட்கும் திறன் (We have two ears and one mouth so that we can listen twice as much as we speak - Epictetus, Greek Philosopher), பொதுவான அறிவு, காட்டும் விருப்பம், முக்கியமாக பொறுமை இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

குரான் ஷரீஃப் சொல்ல வந்த தகவல்களில் செய்திகளில் இறைவனை பற்றிய செய்திகள், முந்தைய வரலாறுகள், சத்தியம், மறுக்கப்பட வேண்டியவைகள், கடைபிடிக்கப்பட வேண்டியவைகள், இப்படி எண்ணற்ற தகவலை கொண்ட செய்திகளை உடையதாக இருக்கின்றது.

இதில் நான் சொல்ல வரும் செய்திக்கு ’வரலாற்றை’ பற்றி அதை எப்படி சொல்கிறது, விவரிக்கின்றது என்று புரிந்து கொள்வதிலிருந்து சில உண்மைகளை விளங்கி கொள்ள முடியும்.

ஹஜ் செய்வது என்பது உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் இனம், மொழி, நிறம், வர்க்கம் என எந்த பாகுபாடுமின்றி ஓரிடத்தில் ஒரே முழக்கத்தோடு இணைவது எப்படி ஒரு சமூக தௌஹீதை உருவாக்குகிறதோ அதே போல் குரான் ஷரீஃபில் கூறப்பட்ட வரலாற்று சம்பவங்கள் ஒரு வரலாற்று தௌஹீதை உருவாக்குகிறது.
முன்சென்றவர்களின் வரலாற்றை குறிக்கும் ஒரு வரலாற்று குறிப்பு புத்தகமாக குரான் ஷரீஃபை பார்க்க முடியாது, மாறாக அதில் ஒரு தத்துவம், ஒரு அடிப்படை ஒழுங்கு இதனை கற்பிக்க கூடியதாக வாழ்க்கைக்கு என்றைக்கும் உதவக் கூடிய கொள்கைகளை, கோட்பாடுகளை விளக்கக் கூடிய ஒரு வடிவம் (Pattern) இருப்பதை விளங்கி படித்தவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் குரான் ஷரீஃபில் ஹிஜ்ரத் அதாவது ஒரு குறிப்பிட்ட குறிகோளுக்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்வது பற்றி குரான் ஷரீஃபில் வரும் வரலாற்று குறிப்புகளில் ஒரு முக்கிய இடம் (key Concept) வகிக்கிறது.

கிட்டதட்ட எல்லா நபிமார்களின் வாழ்விலும் இவ்வகையான ஹிஜ்ரத் நடந்தேறியுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் செய்த நாளை தான் நாம் ஆண்டு கணக்காக கொண்டாடி வருகிறோம். 

(இதில் அன்னை மர்யம் (அலை) அவர்களின் குமாரர் நபி ஈஸா (அலை) அவர்களின் ஹிஜ்ரத் கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு Horizontal ஆக Mobile ஆக ஹிஜ்ரத் செய்வது பயணப்படுவது என்று அல்லாமல் Elevated ஆக உயர்த்தப்பட்ட வகையில் அமைந்ததை காண முடிகிறது)

மேலே சொன்ன தகவல் பரிமாற்ற வழிமுறையின் படி வரலாற்று தகவலை அனுப்புனரான அல்லாஹ் தகவலை வஹி எனும் குறியீடாக்கி பெருமானாரின் (ஸல்) இதயத்தில் இறக்கி வைத்தான். நான் புரிந்த வரையில் எப்பொழுது அவன் இறக்கி வைத்தானோ அந்த குரான் ஷரீஃபின் பொருளாகவே அவர்கள் மாறினார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனிடம் இருந்து வந்த செய்தியை மாற்றம் செய்து மக்களுக்கு புரியும் படி அரபியில் எடுத்து கூறினார்கள். 

இத்தோடு தகவல் பரிமாற்றம் முடிவுறவில்லை, வேண்டுமானால் ஒரு பகுதி முடிந்து விட்டது என்று கொள்ளலாம், அதாவது ”தன்ஜில்” முடிந்து விட்டது.

தன்ஜில் என்றால் குரான் ஷரீஃபின் வாக்கியங்கள் இறைவனிடமிருந்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறங்கி அதன் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களின் வாய் வழி மக்களுக்கு வந்தடைவதை குறிக்கும்

ஆக இந்த தகவல் பரிமாற்றத்தின் இன்னொரு பகுதியான ‘தவில்’ என்று ஒன்று உள்ளது. அதாவது அதன் நீட்சி (extension). இது வந்து ஒரு வட்டம் போல், வந்த தகவல்களை சரிவர புரிந்து கொண்டு வாழ்வில் அதற்கு அர்த்தம் (தப்ஸீர்) கொண்டு வந்து மீண்டும் எங்கிருந்து தகவல் வந்ததோ அந்த மூலத்தையே புரிவது, அறிவது, உணர்வது. இது தான் வந்த தகவலை விளங்கிக் கொண்டதற்கான ஏற்றுக் கொண்டதற்கான உறுதி பத்திரம் (Confirmation)

இந்த குரான் ஷரீஃபின் தகவல்களை புரிந்து கொள்வதை என் போன்ற பாமரருக்கு எளிது படுத்த தப்ஸீர் எனும் அர்த்தங்களை விளக்கங்களை கிதாபில் நிறைய பேர்கள் எழுதினார்கள் என்றால் பெருமானாரின் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் எனப்படும் அஹ்லுல் பைத் என்ற கண்மணியானவர்கள் தங்களது வாழ்விலேயே தப்ஸீரை எழுதினார்கள். 

அதில் மிக மிக முக்கியமான குரான் ஷரீஃபின் தப்ஸீர் எனும் விளக்கவுரை தான் கர்பலா. அதுவும் ரத்தங்களால் கர்பலா மண்ணில் எழுதி விட்டு சென்றார்கள். 

இமாமவர்களும் ஒரு கொள்கை, ஒரு லட்சியத்திற்காக ஹிஜ்ரத் செய்கிறார்கள். இஸ்லாமிய நாடானது பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டிய இஸ்லாத்திலிருந்து வெகு தூரம் விலகி சென்றிருந்த காலமது, அதுவும் இஸ்லாமிய முகமூடியை அணிந்து கொண்டே தான் விலகியிருந்தது.

இமாமாக உள்ளவர்கள் உலக ஆதாயத்திலும் பூமி கிடைத்த அதிகாரத்திலும் தன் குறைகளையும் தன் எல்லைகளையும் பார்க்க முடியாத குருடர்களாய் இருந்தார்கள்.

குரான் ஷரீஃபில் சூரா கஸஸ் எனும் 28ம் அத்தியாயத்திலே - 5வது வசனம் -

ஆயினும் பூமியில் பலஹீனப்படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களை தலைவர்களாக்கிவிடவும் (இமாம்) அவர்களை வாரிசுகளாக்கவும் நாடினோம்

மேலே கண்ட இந்த வாக்கியம் கர்பலாவின் இடத்திற்கும் மிகச் சரியாக பொருந்தி வருகிறது. பல பகையில் விடுபட்டு போன சிறு நெருப்பு பொறி தன்னை தானே கலிபாவென பிரகடனப்படுத்திக் கொண்டு கண்மனியான பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களையே அந்நியர்களாக கைதிகளாக அகதிகளாக தனித்து விடப்பட்டனர்கள்.

ஹிஜ்ரி ஆண்டு 61ல் முதல் பத்து நாள் நடந்த சம்பவங்கள் எந்த அடிப்படை கொள்கை பெருமானார் (ஸல்) அவர்களின் பாதையிலிருந்து விலகி சென்றதோ அதை நேர்கோட்டுக்கு சிந்திய இரத்தங்களால் இழுத்து வரப்பட்டது. 

இந்த நிகழ்வை பற்றி பல சாரார் பல மாதிரி சொல்லி வருகிறார்கள். அதில் ஒரு கூட்டத்தார் இமாம் ஹீஸைன் பதவிக்காக கர்பலா நோக்கி பயணம் செய்ததாக நா கூசாமல் கொஞ்சம் கூட இறைவன் பற்றிய பயமே இல்லாமல் கூறி வருகிறார்கள். இவர்களின் பேச்சை கேட்டாலே ஒரு தெனாவட்டு, தான் தோன்றித்தனம், கடைந்தெடுத்த திமிர், மரியாதைக்கும் இடமில்லாத மரியாதை எல்லாம் தான் கொட்டிக் கிடக்கிறது.

ஒருவர் இறைநேசர் தானா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? என்ன சான்று? என ஒருவரை நல்லவர் என்பதற்கு குரான் ஹதீஸ் ஆதாரம் கேட்கும் இந்த சொல் சாதுரியர்கள் ஒருவரை பதவி ஆசை உள்ளவர் என்று சொல்ல மட்டும் ஒரு வகையில் நல்லவர் அல்ல என்று அடையளப்படுத்த மட்டும் குரான் ஹதீஸ் ஆதாரங்களை வேண்டுவதில்லை, கிடைத்த வரலாற்று குறிப்புகளை தவறான புரிந்து கொள்ளலை மட்டுமே முதலாக வைத்துக் கொண்டு வார்த்தை வியாபாரம் செய்ய துணிந்து விடுகிறார்கள், நாளை இதே வியாபாரம் பாரமாக இவர்களின் தலையிறங்கி தரை தொடலாம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

இணைப்புகள்:

http://kiliyanur.blogspot.com/2010/12/blog-post_5721.html அல்லது

http://this-is-truth.blogspot.com/2010/12/blog-post_17.html

காணொலி:

http://www.youtube.com/results?search_query=Shaheedhe+karbala&oq=Shaheedhe+karbala&aq=f&aqi=&aql=&gs_sm=e&gs_upl=963l5706l0l5929l17l17l0l9l9l0l182l1006l2.6l8l0

2 comments:

Sha said...

Salam Brother,

Good Article... look forward to see more from you apart from the Sufi songs.

Shahul

nagoreismail said...

Wassalaam Brother Sha,

Thanks for the appreciation.

Insa Allah I will.

But I also write about Sufi Songs also. (for my sake)

Mohamed Ismail