தனது தாயாரை ஒரு மருத்துவ மாணவர் கல்யாணம் செய்வதாக சொல்லி வாக்கை கொடுத்து விட்டு பதிலாக தனது தாயாரின் மனதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
சொன்ன வார்த்தை தவறி வர மறந்த அந்த மாணவ காதலனின் நினைவிலேயே இருந்ததால் மனமிழந்த அவள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புத்தியையும் இழக்கிறாள். காதலனை போல் தனது மகளை மருத்துவளாக்குவேன் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கூறுகிறாள்.
ஆமாம், இதற்கிடையில் அவளது உடலுக்கு கல்யாணம் செய்து குழந்தையும் பிறந்திருக்கின்றது. தந்தையும் இறந்து விடுகிறார். மகள் ஆளாகி நிற்கிறாள்.
தந்தையின் தம்பி ஆளாகி நிற்கும் அண்ணனின் மகளை அடைய நினைக்கிறார். நல்லவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலே கெட்டவனாவான் எனும் போது இந்த கொடியவனுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவே நினைத்ததை அடைகிறான்.
அவளை இழுத்துக் கொண்டு போய் விபச்சார விடுதியில் உடல் வியாபாரம் செய்ய விட்டு விடுகிறான். கஷ்டங்களையே அனுபவித்த அவளுக்கு அந்த விபச்சார வாழ்க்கை இப்போது பழங்கதை.
தாயாருக்கு மாதாமாதம் பணம் அனுப்பி வைக்கிறாள். மருத்துவ மாணவனை காதலித்த நோய்க்கு மருந்துகள் இல்லாமல் மரணம் எய்துகிறாள் அவளது தாயார். பணம் அனுப்புவதை நிறுத்துகிறாள். உடல் விற்கும் வாழ்வை தொடர்கிறாள்.
இந்த நிலையில் தான் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் அவள் மீது மிகுந்த அன்பு காட்டி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து மறந்து போயிருந்த அவளது பழைய வாழ்க்கையை நினைவூட்டுகிறார். மரத்து போயிருந்த அவளது உடல் உணர்ச்சிகளுக்கு உயிரூட்டுகிறார்.
அவர் தான் தனது தாயாரின் காதலனான மருத்துவ மாணவன் என்றும் வாழ்க்கை அமைத்து கொடுத்திருந்த சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது வாக்கை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக தாயாரிடம் மன்னிப்பு கேட்க வந்த அவர் இப்போது தாயார் இறந்து விட்ட நிலையில், விபச்சாரியான தன்னை மீண்டும் அந்த தாயாரின் மகளாக்கி மன்னிப்பு கேட்டு பெறவே தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்பதும் தெரியாமலே அவர் மீதே அன்பு கொள்கிறாள்.
குல்ஜார் சாபின் வரிகளுக்கு மதன் மோகனின் இசைக்கு லதாவின் உருக்கமான குரல்...

Ruke ruke se kadam, ruk ke baar baar chale
Qaraar leke tere, dar se bekaraar chale
வாழ்க்கையின்
வழிதடங்களில்
எத்தனையோ
தடை நிறுத்தங்கள்
தொடர்ந்து
செல்ல செல்ல
தொடரும்
தடை நிறுத்தங்கள்
சில நேரங்கள்
தடையின்றி
அமைதியாக செல்கிறது
சட்டென்று
மீண்டும்
பழையநிலைக்கே திரும்புகிறது -
அமைதி (நம்பிக்கை) இழக்கின்றது
Subah na aayee, kaeye bar nind se jaage
Thee ek raat kee yeh jindagee, gujaar chale
இரவின்
பல சமயங்களில்
எத்தனையோ முறை
விழித்து எழுந்து
பார்த்துவிட்டேன்
விடியல் குழந்தை
பிறந்ததேயில்லை
என் வாழ்க்கை
அந்த
ஒற்றை இரவிலேயே
தான்
பன்நெடுங்காலமாய்
கழிந்து கொண்டிருந்தது
Uthaaye firate the ehsaan dil ka sine par
Le tere kadamo me yeh karja bhee utaar chale
எனது
ஆழ் மனதில்
உனது உயர்குணமும்
செய்த உதவிகளும்
இரகசியமாய்
மறைந்தும் நிறைந்தும்
உயர்ந்தும் நிற்கின்றது
என் காலம்
முழுவதும்
உனது பாதையில்
நடந்து
அந்த நன்றிக்கடனை
எப்படியும்
அடைத்து விடுகிறேன்
No comments:
Post a Comment