Friday, December 09, 2011

எனது அழகான உடலை பறித்துக் கொண்டு - ‘பந்தினி’ பட குல்ஜார் சாபின் பாடல்

குல்ஜார் சாபின் முதல் பாடல்
பந்தினி (சிறைவாசம்) எனும் படம்
எஸ்.டி. பர்மன் இசை
லதா மங்கேஷ்கரின் குரல்

காட்சியில்: 
இந்தியாவின் அருமையான நடிகைகளில் ஒருவரான நுதான். கேன்சர் எனும் கொடிய அரக்கன் முடித்து வைத்தவர்களில் இவரும் ஒருவர்.

Mora gora ang lai le, mohe sham rang dai de
chhup jaungi raat hi mein, mohe pi kaa sang de de

எனது 
அழகான உடலை
பறித்துக் கொண்டு
மாலை இருட்டின்
நிறத்தை
என் மேனியில்
பூசி விடுங்கள்

இரவின் தனிமையில்
இருக்க விடுங்கள்
இதயம் நிறைந்தவனோடு
நடக்க விடுங்கள்

Ek laj roke paiyya, ek moh khinche baiyya
jau kidhar naa janu, humka koyi batayide

எனது நாணம்
கால்களை
கட்டி போடுகிறது
எனது ஆசையோ
கைகளை
பிடித்து இழுக்கிறது

நான் எங்கே
செல்வேன் -
ஒரே குழப்பம்
எனக்கு
யாரேனும்
வழிகாட்டுங்கள்

Badali hata ke chanda chupke se jhanke chanda
tohe rahu lage bairi musakaye ji jalayake

மேகத்தின் நடுவே
ஒளிந்து கொண்டு
இந்த நிலவு
என்ன செய்கிறது
பாருங்கள்..?

எனது இந்த 
நிலையை
எண்ணி
எள்ளி நகையாடுகிறது
நிலவே..!
பிடி சாபத்தை
இனி நீ
எப்போதும்
பிறையாகவே
இருந்து விடு..!

Kuchh kho diya hain payake, kuchh paa liya gawayake
kaha le chala hain manwa, mohe bawari banayake

எனது பாதியை
நான் 
தொலைத்து விட்டேன்
எனது மீதியை
நான்
கண்டு கொண்டேன்

என் மீது 
காதல் கொண்ட 
என் மனம்
எங்கே தான்
என்னை
அழைத்துக் கொண்டு
செல்ல போகிறதோ..?

No comments: