Thursday, December 08, 2011

தொலைதூரத்திலிருந்து மீண்டும் ஒரு மேகம் - ‘நம்கீன்’ பட குல்ஜார் சாபின் பாடல்

அவளது தாயார் ஒரு நடனக்காரர். தந்தையோ நாட்டிய நாடகத்தை நடத்தும் நிர்வாகி. தாயாருக்கு நாடக வாழ்க்கையின் மோக வேஷம் கலைந்து விடவே குடும்ப வாசம் பெற எண்ணுகிறார்.

நாடக நிர்வாகியின் மனைவியாகி குடும்ப வாழ்க்கையில் முத்தான மூன்று முத்துக்களை ஈன்றெடுக்கிறார். தந்தை முத்துக்களை மேடையேற்ற முயல்கிறார். தாயாருக்கு மனமில்லை, நடனத்துக்கு இடம் தரவில்லை.

இரண்டாவது மகளை தந்தை கடத்துகிறார், துன்புறுத்துகிறார், நாடகத்தில் நடிக்க வேண்டியே இத்தனை இன்னல்களும். அதிர்ச்சியில் ஊமையாகிறாளே தவிர  இசைக்கு நடனமாட இசையவில்லை.

பேரதிர்ச்சியிலேயே வாழ்ந்து வரும் அவளுக்கு அவளின் கவிதை சற்றே ஆறுதல். அப்போது தான் வருகிறார் ஒரு வாகனமோட்டி. சில காலம் அங்கே அவருக்கு அவளது வீட்டில் அறைவாசம். அவரை அவள் தனது சிறைவாசத்தில் தீர்பெழுத நாடுகிறாள்.

அவரோ எங்கிருந்து வந்திருக்கிறார்..? தெரியாது..?
சில காலம் தான் இருப்பார். பிறகு பறந்து போய்விடுவார்.
எல்லாம் தெரிந்தும் மனம் மட்டும் ஒன்றுமே தெரியாத அவனை வேண்டி கவிபாடுகிறது.

காதலியின் கவிதையில் காதலன் மேகமாய் மாறுகிறான்.




Phir Se Aaeeyo, Badaraa Bidesee
Tere Pankho Pe, Motee Jadoongee
Bhar Ke Jaaeeyo, Humaaree Talayyaa
Mai Talayyaa, Kinaare Miloongee
Tuze Mere Kaale Kamaleewaale Kee Saundh


தொலைதூரத்திலிருந்து 
மீண்டும் ஒரு மேகம்
வந்திருக்கிறது..

மேகமே..!

உனது இறக்கையில் 
நான் விலைமதிப்பற்ற

முத்துக்களை
கட்டி விடுகிறேன்

என்னுடைய ஏரியில் 
பூக்களை கொண்டு
நிரப்பிவிடு



நான் ஏரிக்கரையின்
ஓரமாக
உன்னை
சந்திக்கிறேன்

நான் ஒரு 
பழைய சூஃபியின்
பொருட்டால் 
மன்றாடி கேட்டுக் 
கொள்கிறேன்..


Tere Jaane Kee Rut Main Jaanatee Hoo
Mood Ke Aane Kee Reet Hain Ke Nahee
Kaalee Daragaa Se Poochhoongee Jaa Ke
Tere Man Mein Bhee Pareet Hain Ke Nahee
Kachchee Puliyaa Se, Ho Ke Gujareeyo
Kachchee Puliyaa Kinaare Miloongee


உனது புறப்பாடு
என்ன விளைவுகளை
ஏற்படுத்தும் என்று
நான்
அறியாமலில்லை


சென்ற நீ
திரும்பி 
வருவது
இயற்கையான
நிகழ்வு 
தானே..?


சூஃபியின் 
தர்காவில்
வைத்து
உன்னிடம் 
கேட்கின்றேன்


நான் உன்
மனதில்
இருக்கின்றேனா?
இல்லையா?


பாலம் 
வழியாக
வந்து விடு


அங்கே வைத்து
உன்னை
நான்
சந்திக்கின்றேன்


Too Jo Ruk Jaaye, Meree Atareeyaa
Mai Atareeyaa Pe, Zaalar Lagaa Doo
Daaloo Chaar Taabeej Gale Se
Apane Kaajal Se, Bindeeyaa Lagaa Doo
Chhoo Ke Jaaeeyo, Humaare Bagiche
Mai Pipal Ke Aade Miloongee



என் வீட்டு
கூரை வழி
செல்லும் போது
சற்று நின்று
ஓய்வெடு


நான் உனக்காக
ஒரு விளக்கை
ஏற்றி வைக்கிறேன்


கழுத்து சங்கிலி
அணிந்து கொள்கிறேன்


கண்ணுக்கு மையிட்டு
கொள்கிறேன்


நெற்றியில் பொட்டு
வைத்துக் கொள்கிறேன்


வீட்டுவாசல் பக்கமாக
வந்து விடு


அங்குள்ள அரசமரம்
அருகே வைத்து
உன்னை 
நான் 
சந்திக்கின்றேன்

No comments: