ஜட்ஜப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்
ஜட்ஜப்பா - பகுதி 2 ஐ இங்கே படிக்கலாம்
முதன் முதலாக சிகரெட் குடிக்கும் போது இருமல் வருகிறதல்லவா? அது வெறும் இருமல் அல்ல - உடல் நம்மிடம் சொல்கிறது, அதாவது ”ஏதோ ஒரு அந்நிய உடலுக்கு ஒவ்வாத பொருளை உள்ளே இழுக்கிறாய்” என்று.
நாம் இதற்கெல்லாம் அசராமல் “எங்களுக்கு தெரியும், நான் சொல்றதை நீங்க செய்யுங்க, பேசாம நான் பிடிக்கிற புகையை நீங்க உள்ளே அனுப்புங்க..” என்பது போல் தொடர்ந்து புகை பிடிக்க ஆரம்பிக்கவும் அது ஒரு பேச்சு பேசாமல் நாம் அனுப்புகிற கேடான புகையை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
இப்படி நம் உடல் பல இடங்களில் முன்கூட்டியே நமக்கு வர இருக்கும் நல்லதையோ கெட்டதையோ சரியாக சொல்லி விடும்.
இதே போல் தான் நம் வாழ்க்கையும், சிலரது வாழ்க்கையை பார்த்தால் அவர்களது சிறு வயது வாழ்க்கையிலேயே சில சம்பவங்கள் அவர்கள் யாராக வருவார்கள் என்று சொல்லி விடும்.
இது ஒரு வகை ஜோசியம் மாதிரி, முன் கூட்டியே அறிவிக்கக் கூடியது, முன்னறிவிப்பு செய்வதெல்லாம் மூடநம்பிக்கை அல்லது பாவம் என்று வகைப்படுத்துவது சரியல்ல, இஸ்லாத்தை பொறுத்த வரை மறுமை வாழ்க்கை உள்பட முன்னறிவிக்கப்பட்ட விஷயங்கள் நிறையவே உள்ளன.
முன்னர் சொன்ன செய்திக்கு வருகிறேன், நம் வாழ்க்கையில் கூட சிறு வயதில் நடந்த சில சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கான அஸ்திவார கம்பிகளையும் கற்களையும் காண முடியும். அது நல்லதை குறித்தாலும் சரி, அல்லதை குறித்தாலும் சரியே.
வக்த் என்ற இந்தி படத்தில் ஜோசியக்காரர் ஒருவர் பால்ராஜ் சாஹ்னியின் (பழைய இந்தி நடிகர்) கையை பார்த்து “நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்” என்பார்.
அதற்கு பால்ராஜ், “அதை ஏன் கையை பார்த்து சொல்றீங்க..? அதை விட என் முதுகை பார்த்தா இன்னும் தெளிவா சொல்லலாம்” என்று சட்டையை உயர்த்தி முதுகை காட்டுவார், அதில் அவர் மூட்டைகளை தூக்கி சுமந்ததற்கான வடுக்கள் இருக்கும்.
அதே போல் ஜட்ஜப்பாவின் வாழ்க்கையிலும் இரண்டு சம்பவங்கள் அவர்கள் யாரென்று முன்னரே ஜோசியம் சொல்லுகிறது.
முதல் சம்பவம்:
ஜட்ஜப்பாவின் சொந்தங்கள் ஒருவர் பின் ஒருவராக சீயத்துக்கு சென்று விட்ட படியால் எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்த வீட்டு வேலைகளை அவர்கள் மட்டுமே தனியாக பார்க்கும் படி ஆனது.
அத்தகைய வேலைகளில் ஒன்று கிணத்திலிருந்து தண்ணீர் இறைத்து மாடுகளை குளிப்பாட்டுவது, மாட்டு கொட்டிலை துப்புரவு செய்வது, பால் கறப்பது என இப்படி எல்லா வேலைகளையும் வெட்கப் படாமல் செய்ய வேண்டும்.
அப்படி ஒருமுறை ஜட்ஜப்பா பசுமாட்டை குளிக்க வைத்து கொண்டிருந்த போது மாடு முட்டி விட்டது. இதனால் காயம் ஏற்பட்டு வலி தாங்காமல் ஒரு கம்பை எடுத்து மாட்டை அடிஅடியென்று அடித்து விடுகிறார்கள்.
அதோடு விட்டுட்டு போக வேண்டியது தானே, அவர்கள் யோசித்து பார்க்கிறார்கள், ”மாட்டை போய் அடிக்கிறோமே, அதுக்கு என்ன பகுத்தறிவா இருக்கிறது” என்று - அந்த யோசனையின் முடிவாக அதே கம்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்கிறார்கள்.
இது யாருமே பொதுவாக செய்யாதது. யார் மீதும் கோபம் வந்தால் ஏசுவோம், அடிப்போம். ஆனால் அது தவறு என்று உணர்ந்து விட்ட பிறகு நம்மை நாமே ஏசிக் கொள்வதோ அல்லது அடித்து கொள்வதோ கிடையாது.
இவர்கள் என்னடா என்றால் யோசித்து பார்க்கிறார்கள், தவறை உணர்கிறார்கள், அத்தோடு நிற்காமல் தனக்கு தானே தண்டனையும் கொடுத்து கொள்கிறார்கள்.
சிறு வயதிலேயே அவர்களிடம் இருந்த தவறுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இருந்த இத்தகைய குணம் தான் பிற்காலத்தில் அவர்கள் நீதி தவறாதவர் என்ற அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது.
இரண்டவது சம்பவம்:
நாகூர் மியா தெருவும் குஞ்சாலி மரைக்காயர் தெருவும் தைரியமாக சந்தித்து கொள்ளும் தெரு முனையில் இருந்த “நாகூர் முனிசிபல் முகம்மடன் பாய்ஸ் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்” என்ற பள்ளிகூடத்தில் தான் அவர்களது நா அனா ஆவன்னா பழகியது.
அப்போது அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் சென்னை ராஜதானி கவர்னராக இருந்த வெள்ளைக்கார துரை அப்போதைய வழக்கப்படி பதவிக்காலம் முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் நாகூரின் மியா தெரு வழியாக போக போகிறார் என்றதும் பள்ளிகூடத்தில் இருந்த அத்தனை பிள்ளைகளையும் எதிரே இருந்த ஒரு வீட்டின் திண்ணை மீதேற்றி அந்த வழியாக போக இருக்கும் கவர்னரை பார்க்க காத்திருக்க வைத்தனர் ஆசிரியர்கள்.
அப்போது ஒரு ஆசிரியர் ஜட்ஜப்பாவை பார்த்து, ‘இப்படி தான் இஸ்மாயிலும் ஒரு நாள் கவர்னராகி பெரும் புகழ் அடைவான்” என்று கூறியிருக்கிறார்.
அவர் சொன்ன மாதிரியே இல்லை இல்லை அவர் கற்பனை செய்த மாதிரியே 1980ம் வருடம் அக்டோபர் மாசம் ஜட்ஜப்பா தற்காலிக கவர்னராக பொறுப்பேற்கிறார்கள்.
அப்போது நாகூரில் எங்க வீட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுக்கு வர வேண்டிய கட்டாயம் ஜட்ஜப்பாவுக்கு வந்தது.
அவ்வளவு தான், என்னுடைய தாயாரின் தந்தை சேத்தப்பா (கவுஸ் சேட் என்ற பெயருடைய இவர்களும் ஜட்ஜப்பாவும் தான் வீட்டு வேலைகளை ஒன்றாக பார்த்தது அதுவும் தவிர இவர்களின் தந்தையின் பூர்வீக சொத்தை தான் அப்துல் அஜீஸ் நிர்வகித்து வந்தது) எங்களது வீட்டிலிருந்து மியா தெரு பள்ளிகூடம் வரைக்கும் பந்தல் போட்டார்கள். வருகின்ற அத்தனை பேருக்கும் தங்க உண்ண குடிக்க என்று அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
அந்த வழியாக ஜட்ஜப்பா வருகிறார்கள், அவர்கள் படித்த பள்ளிகூடத்தை கார் கடக்கிறது, பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் நின்ற திண்ணையை பார்க்கிறார்கள். அவர்கள் கண் முன் சிறிய வயதில் அவர்கள் நின்ற காட்சி கண்ணுக்கு தெரிகிறது.
அவர்களின் ஆசிரியர் சொன்னதை நன்றியுடனும் இறைவனின் அருளை எண்ணித் தாழ்மையுடனும் நினைத்துக் கொண்டதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
மேலே நான் சொல்லும் போது ஆசிரியர் சொன்ன மாதிரி இல்லை கற்பனை செய்த மாதிரி என்று எழுதியிருந்தேன். பேசிய ஆயிரம் மொழிகளை விட பேசாத நினைவுகளுக்கு அதிக சக்தி உண்டு என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல பேசுகின்ற மொழியில் உணர்வுகளும் கற்பனைகளும் கலந்திருந்தால் பேசாத மொழிகளை போன்றே சக்தி உண்டு என்றும் நான் நம்புவதால் தான் அப்படி சொன்னேன்.
-------------------------------------------------------------------------------
நான் பாட்டுக்கு வூட்டு வாசல்ல ஒக்காந்து இருந்தேன், ஜட்ஜப்பா உள்ளக்கேயிருந்து வாசலுக்கு வந்தாஹா, கார்ல ஏறுனாஹா, ‘நீயும் ஏறிக்க’ன்னு எண்ட்ட சொன்னாஹா.
நான் மறு பேச்சு பேசாம ஏறி ஒக்காந்த ஒடனே, ‘சுல்தான் தைக்காவுக்கு போவணும். வழி சொல்லு” என்று என்னிடம் சொல்ல அவர்களின் மகனார் காசிம் காரை தெரு முனைக்கு கொண்டு வந்து விட்டார்.
எனக்கு ஒரே குழப்பம் “எந்த சுல்தான் தக்கா..? தெரியாதுன்னு சொன்னாக்கா ஏச்சு உழுவுமோ” என்று பேய் முழி முழித்துக் கொண்டு எச்சில் முழுங்கினேன்....
பகுதி 4 ல் தொடரும்
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Thursday, December 17, 2009
Friday, December 11, 2009
குரான் ஷரீஃபின் சவால்
இந்த பதிவு மரியாதைக்குரிய திரு கோ.வி.கண்ணனின் குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல் என்ற எனது பதிவில் பின்னூட்ட கேள்விகளுக்கு பதில் எழுதும் முயற்சியாக எழுதப்படுகிறது.
கேள்வி 1.
குரான் ஷரீஃபில் வரும் ‘இது போல் இன்னொரு குரான் ஷரீஃபை கொண்டு வருவது’ என்ற சவால் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமிய அன்பர்கள் (பிறரை) ஏளனம் செய்வது பற்றிய என் கருத்து என்ன?
கேள்வி 2
குரான் ஷரீஃபில் வரும் மேலே கூறப்பட்ட அந்த சவால்கள் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுவதை பற்றி நான் என்ன நினைக்கிறேன்.
கேள்வி 3
அளவற்று (அல்லது எக்ஸ்ட்ராவாக) என்னை புகழுங்கள் என்று அல்லா கூறியதாக குரான் ஷரீஃபில் எங்காவது வசனம் உள்ளதா?
-----------------------------------------------------------------
இந்த பதிவில் முதல் இரண்டு கேள்விகளும் ஒரே திசையில் பயணிப்பதால் அதற்கு மட்டும் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கிறேன்,
அதுவும் தவிர முதல் இரண்டு கேள்வியில் எனக்கு பிடித்த விஷயம் நான் என்ன நினைக்கிறேன் என்று என் கருத்தை கேட்டது, இது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்னை போய் கருத்து கேட்கிறீர்களே நான் பெரிய ஆளாயிட்டேன் என்ற பெருமிதத்தால் நிச்சயமாக அல்ல,
மாறாக, குரான் ஷரீஃபை மொழி பெயர்க்கும் போது கூட ‘குரான் ஷரீஃப் இப்படி சொல்கிறது அப்படி சொல்கிறது’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ’தோராயமாக குரான் ஷரீஃப் என்ன சொல்கிறது என்றால்’ 'an approximation of the meaning of what the Quran says is ..' என்று தான் ஆரம்பிப்பார்கள்,
அதாவது நான் புரிந்து கொண்டதை என் கருத்தாக எழுதுகிறேன், ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் என் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல - மற்றவை உங்கள் கருத்து.
-------------------------------------------------------------------------
முதல் இரண்டு கேள்விகளிலும் ஒரு விஷயம் பிராதனமாக சொல்லப்படுவது என்னவென்றால் குரான் ஷரீஃபில் வரும் சவால் பற்றியது.
அந்த சவால் என்ன என்று விபரமாக அறிவதுடன் அது எந்த கட்டத்தில் வருகிறது என்பதையும் அலசுவது அவசியமாகிறது.
அரபுக்காரர்கள் சிலைகளை வணங்கினார்கள், செத்ததை தின்று கொண்டிருந்தார்கள், உறவுகளை துண்டித்தார்கள், அண்டை வீட்டுக்காரரை துன்புறுத்தினார்கள், பலவான்கள் பலவீனமானவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த காலகட்டத்தில் 40 வயதை கடந்த ஒருவர், எழுத படிக்க தெரியாதவர், ஒரு கவிதை கூட எழுதாதவர், ஒரு சொற்பொழிவை கூட ஆற்றாதவர், அல்-அமீன் (நேர்மையின் இருப்பிடம்), ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) (-முஹம்மது நபிகளை வசைக் கவிதைகள் இயற்றும் போது கூட அல்-அமீன் என்றே இயற்றினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) என்ற பெயருடைய ஒருவர் தன்னை இறைவனின் தூதர் எனவும் தனக்கு இறைவனால் வேத வசனங்கள் இறங்கப்படுகிறது எனவும் கூறுகிறார்.
தேவ தூதர் என்றால் அது யூத குலத்தில் தான் பிறக்கும் என்றும் யூதர்கள் மட்டும் தான் அறிஞர்கள் என்றும் (நம் நாட்டு கதை மாதிரி இருக்குல்ல..! உயர் ஜாதியிலிருந்து பெரியார் வரைக்கும் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்களே..!) மூட நம்பிக்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்கள் வேத வசனங்கள் என்று சொல்லுகின்றவற்றை பின்பற்றுவதில் பிரச்சினை இருந்தது.
அப்படி என்ன சொன்னார்கள் என்றால் சிலை வணக்கத்தை கைவிட சொன்னார்கள், பேச்சில் உண்மை, வாக்கை காப்பாற்றுவது, வர்க்க வேறுபாடுகளை கலைவது, அமானித பொருள்களுக்கு (நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்) துரோகம் செய்யாமல் இருப்பது இப்படி பலவற்றை எடுத்து கூறினார்கள்.
இதை எல்லாம் எந்த கூட்டத்திடம் சொல்கிறார்கள் தெரியுமா..?, உதாரணமாக ஒரு சம்பவம் சொல்கிறேன், இம்ரவுல் கைஸ் என்று ஒருவன் இருந்தான், அவனது தந்தையை இன்னொருவன் கொன்று விட்டான். பழிக்கு பழி வாங்க (இந்தி, தமிழ் சினிமாவை போல்) அந்த கால வழக்கப்படி கடவுள் சிலையின் முன்னர் மூன்று அம்புகளை போட்டான், அதில் ஒன்றில் ‘சரி’ (-அதாவது கொல்லவும்) என்றும், இன்னொன்றில் ‘வேண்டாம்’ என்றும், மூன்றாவதில் எதுவும் எழுதாமலும் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு மூன்று முறை எடுத்தும் ‘வேண்டாம்’ என்று வரவே கடவுள் சிலையை பார்த்து, ‘உங்க அப்பனை கொன்னிருந்தால் இப்படி தான் வேண்டாம்னு சொல்லுவியா?’ என்று கேட்டுவிட்டு அம்புகளை உடைத்து அந்த கல்லுருவத்தின் முகத்தில் எறிந்து விட்டு சென்றான்.
சமூக வாழ்க்கை இன்னும் மோசம், இஸ்லாம் அந்த மக்களிடையே தோன்றியதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகளில் நூற்று முப்பத்திரெண்டு போர்கள் நடந்து ரத்தம் சிந்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் போய் ஒருத்தர் இதெல்லாம் கூடாது நான் தான் இறைவனின் தூதர் என்று சொல்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய சுமையை இறைவன் முஹம்மது நபிகளின் மீது இறைவன் விதித்தான்.
இத்தனை காலம் கஃபாவில் இருக்கும் கடவுள் சிலையால் இருந்த மதிப்பும், கடவுள் குடும்பத்தினர் என்ற மரியாதையும் போய் விடுமோ என்ற பயமும் (நம்ம ஊர் கதை தான்) பணக்காரன் ஏழை என்ற வர்க்க பேதங்களை ஒழிந்து போவதையும் அந்த அரபுகள் விரும்பவில்லை.
இதன் காரணத்தால் நபிகள் நாயகம் போகும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து சென்று வசைக் கவிதைகள் பாடுவது, பைத்தியக்காரன், பிசாசு பிடித்திருக்கிறது என்பது அவர்கள் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவர்கள் பேச்சு யார் காதிலும் விழாமல் இருக்க கத்தி கூச்சலிடுவார்கள். கல்லால் அடித்தார்கள், குப்பைகளை கொட்டினார்கள்.
அவர்கள் செய்த இன்னொரு முயற்சி பதவி தருகிறேன், அதிகாரம் தருகிறேன், அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறேன் இப்படி ஆசை வார்த்தை காட்டியது.
முஹம்மது நபிகள் திடமாக நின்றார்கள், ‘ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் சேர்த்து தந்தாலும் என்னுடைய கொள்கையை விடமாட்டேன்..’ என்று அந்த கொள்கை பிடிப்போடு பிடி கொடுக்காமல் இருந்தார்கள்.
அவர்களை தொல்லைகள் கொடுத்து பார்த்து எதுவும் சரிபட்டு வராமல் போகவே, அரேபியர்களின் அடுத்த கட்ட முயற்சியாக ‘அவர் சொல்வது எல்லாம் அவரே சொல்வது தான்’ என்றும் ‘அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என்றும் குற்றம் சுமத்தி தோற்கடிக்க பார்த்தது தான்.
இப்போது தான் வருகிறது அந்த சவால் செய்தி, இப்படி சவால் விடுவது வழக்கமாக நபிமார்களுக்கு வரும் பிரச்சினை தான்.
உதாரணமாக மூஸா நபி காலத்தில் தந்திரங்கள் செய்வது பிரபலமாக இருந்தது (excelled at magical trickery). மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் நடந்த சவாலை பற்றி டென் கமாண்ட்மேண்ட்ஸ் படங்களை பார்த்திருக்கலாம். அதுவும் இறைவனால் அந்த கால மக்களுக்கு விடப்பட்ட சவால் தான்.
மூஸா நபியவர்களுடன் போட்டியிட்ட அந்த மந்திரவாதிகள் கட்டையை தூக்கி எறியும் போதும் பாம்பு வரத்தான் செய்தது, ஆனால் என்ன மூஸா நபி எறிந்த கட்டையிலிருந்து வெளிப்பட்ட அந்த பாம்பு மந்திரவாதிகளின் பாம்பையே விழுங்கி விட்டது.
அதே போல் ஜீஸஸ் என்று கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் ஈஸா நபியவர்களின் கால கட்டத்தில் மருத்துவம் பிராதனமாக இருந்தது (excelled at matters of medicine). அதனால் தான் எல்லோரையும் மிகைக்க கூடிய அளவுக்கு அவர்கள் இறந்தவர்களை உயிர்பிப்பது வரை செய்து காட்டினார்கள்.
இதன் அடிப்படையில் முஹம்மது நபிகளின் கால கட்டத்தில் இலக்கியம் பெரிதும் மதிக்கப்பட்டது. ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் போது அவரால் கவிதைகள் படைக்க முடியுமா என்று பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களிடம் தான் இறைவன் மற்ற நபிமார்களின் கால கட்டத்தில் அந்த காலத்துக்கு தேவையான சவால்கள் உருவானதோ அதே மாதிரி தான் இலக்கியத்திலேயே சவாலை விடுத்தான்.
அந்த சவால் நியாயமானது தான், உதாரணமா ஒரு கம்ப்யூட்டர் புரொகிரமர் கிட்டே போய் இந்தாப்பா உலகத்துல இல்லாத ஒரு புது கெமிக்கல் பார்முலா எழுதி கொண்டு வா என்று கெமிஸ்ட் கிட்டே வைக்க வேண்டிய சவாலை அது வைக்கவில்லை.
கவிதையில் சிறந்தவர்களிடம், இலக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டதற்காக தங்களை தாங்களே கௌரவப் படுத்தி கொண்டவர்களிடம் அந்த சவாலை வைத்தது. அதுவும் தவிர, அப்படி சவாலை வைத்ததும் முஹம்மது நபியல்ல, இறைவன் தான்.
முதல் சவால்:
ஆகவே (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்... நேரான வழியை அறிவிக்கக் கூடிய (மிக்க மேலானதொரு) வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என்று நீர் கூறும்
சூரா கஸஸ் 28:49
இது அல்லாஹ் கிட்டேயிருந்து வரவில்லை, அவரே தான் சொல்கிறார் என்று சொன்னார்களா..? அதற்காக அப்படி உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து வேதத்தை கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது.
இந்த வசனத்தில் இருக்கும் அழகு சும்மா எதையாவது கொண்டு வந்து இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி விட கூடாது என்பதற்காக நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்ற அந்த வார்த்தை. எப்படி..?
இரண்டாவது சவால்:
நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும்: இதைப்போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமான யாவரையும் (இதற்காக) அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். (மெய்யாகவே இது கற்பனையென்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!)
சூரா ஹூது 11:13
இந்த இரண்டாவது சவாலில் கற்பனை செய்து பார்த்து பத்தே பத்து அத்தியாயத்தை கொண்டு வாருங்கள் என்கிறது.
மூன்றாவது சவால்
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (நீங்களும்) அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (உங்களுக்கு உதவியாக) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க் கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை அமைத்துக் கொண்டு வாருங்கள்
சூரா பகரா 02:23
அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இஸ்லாத்தை பொய்யென புரட்டென கூறி ஒழித்து கட்ட துடித்து வாய்ப்பை எண்ணி காத்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பல்லவா இது..?
வலிய வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முயற்சி செய்தும் பார்த்தார்கள்.. முந்தைய நபிமார்களிடத்திலே அவர்களின் எதிரிகள் எவ்வாறு படுதோல்வி அடைந்தார்களோ அதே போல் தான் இவர்களும் படுதோல்வி அடைந்தார்கள். இது நபிமார்களின் வரலாறுகளில் காணப்படாத செய்தி அல்ல.
நான் என்னா சொல்றேன், அதுவும் தவிர, இன்றைக்கு அரபிங்கறது செத்த மொழி அல்ல, வாழும் மொழி தான், இன்னமுமா அந்த சவால் இருக்கிறது என்ற கேள்வியை விடுத்து இதோ இருக்கிறதே என்று ஒரு அத்தியாயத்தையேனும் காட்டுவது அல்லது புதிதாக எழுதி கொண்டு வந்து வாதிடுவது தான் அறிவுடைமை என்கிறேன்.
எப்படி கொண்டுட்டு வரணும் தெரியுமா..?
இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்!
சூரா அல்கவ்ஸர் 108: 1-3
இப்படிப்பட்ட அழகும் ஆழமும் எழிலும் கருத்தேற்றமும் மிக்க வசனத்திற்கொப்ப அரபிப் பெரும் புலவர்களை எல்லாம் துணையாக அழைத்துக் கொண்டு உண்மையாளர்களாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று நான் அல்ல இறைவன் சவால் விடுகிறான்.
அது முஸ்லீம்கள் ஏளனமாக கேட்பதாக கூறுகிறீர்கள்? முதலில் இது முஸ்லீம்களின் சவாலே அல்ல, இது இறைவனின் சவால், அதுவும் தவிர, இது இறைவேதம் அல்ல என்று ஏளனம் செய்தார்களே அவர்களுக்காக சொல்லப்பட்டது.
என் பார்வைக்கு உட்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கிறேன். உங்களின் கேள்விக்கு ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.
------------------------------------------------------------------------
உங்களின் மூன்றாவது கேள்வி அதாங்க உருவகம், உருவம், இணைவைத்தல், பாவம், அப்புறம் எக்ஸ்ட்ரா புகழ்ச்சி இதெல்லாம் தனிப் பதிவு.
-----------------------------------------------------------------------
ஒரு கேள்வி கேட்டா ஆதம் காலத்து கதைலேந்து ஆரம்பிப்பான் என்று இந்த கொடுமையே போதும் என்று நீங்கள் சொன்னாலும் சரியே!

Thursday, December 10, 2009
சில டைரி குறிப்புகள்..
செப்டம்பர் 11 சம்பவத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பட்ட அவமானங்கள் சொல்லில் அடங்காது.
ஒரு முறை என் அலுவலக மேசை மேலே ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் ஒருவர் முகமூடி அணிந்து கையில் கத்தியுடன் காணப்பட்டார்.
அதை கண்ணுற்ற எனது நண்பர் ஒருவரின் வாயில் அவரையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தை, 'டெரரிஸ்ட் குரூப்பா.. பள்ளிவாசல்ல கொடுத்தாங்களா..?' என்று
எனக்கு எரிச்சலாய் இருந்தது, 'நல்லா பாருங்களேன்..' என்றேன்
கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு (என்னமோ கண்ணாடியில் மட்டும் தான் அழுக்கு என்று நினைத்து கொண்டு) உற்றுப் பார்த்தார், அது ஒரு மருத்துவரின் படம்.
இனி அவர் துடைக்க வேண்டியது 'மனதை' தான் - என்று தோன்றியது.
நான் உடனே எனது நோட்டில் இப்படி எழுதினேன்..
ஷஹாதா
சொன்னால் கூட
ஜிஹாதா
என்று கேட்கிறார்கள் -
(குறிப்பு: ஷஹாதா என்றால் 'அல்லாஹ் (இறைவன்) ஒருவன்' என்று சாட்சியம் கூறுவதை குறிக்கும்)
---------------------------------------------------------------------------------
ஏற்கனவே அரியர் வைத்த பரீட்சையை இன்று தான் எழுத போகிறேன்.
வாப்பா, ‘நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா..?’
நான் பயந்து கொண்டே, ‘ம்.. பண்ணியிருக்கேன்..’ பரீட்சையை விட வாப்பாவின் பயம் அதிகம்
‘பாஸ்ட் கொஸ்டின்ஸ் கிடைச்சுடுச்சா..’ விடுற மாதிரி இல்லை
‘ம்.. கிடைச்சிடுச்சு..’ ஒன் வேர்ட் ஆன்சர்ஸ் தான்
‘ஒரு கேள்வியை கூட விட்டுடாதே.. ஒழுங்கா எழுது..’ - வாழ்த்து
‘சரி எழுதிடுறேன்..’
‘டைம் ரொம்ப முக்கியம்.. கடைசில டைம் இல்லைன்னா.. பாய்ண்ட் ஃபார்ம்ல எழுதிடு’ - எக்ஸாம் டிப்ஸ் அல்லது டெக்னிக்ஸ்
‘சரி..’
‘ஹால் டிக்கெட் எடுத்துக்க.. நல்ல பேனா.. நான் கொடுத்தேன்ல.. அது எழுதுதுல்ல..’ - கவலை
‘நல்லா எழுதுது..’
’சரி.. அல்லா தவக்கல்..’
சைக்கிளை மிதித்து பாலிடெக்னிக் வந்து சேர்ந்தேன்.. இதைவிட சோர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
விறுவிறு என்று நோட்டீஸ் போர்ட் பக்கம் போய் எங்கே பரீட்சை ஹால் என்று பாக்கலாம்னு பாத்தா பேரதிர்ச்சி
நான் எழுத வேண்டிய பரீட்சையை பற்றிய தகவலே இல்லை.
சம்மந்தப்பட்ட நபரிடம் போய் விபரம் சொல்லி கேட்டதற்கு அவர் அலட்சியமாக சொன்னார்,
‘அந்த பரீட்சை நேத்தைக்கே முடிஞ்சிடுச்சே..’
எங்க வாப்பா ஏசவே இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க
----------------------------------------------------------------------------------
நான் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் ரசிகன். இங்கே சிங்கப்பூரில் ஒரு முறை பாகிஸ்தான் நியுசிலேந்துடன் நடந்த ஆட்டத்தை நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.
அதிலும் அஃப்ரிடி என்ற அதிரடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனது இந்திய நண்பர் ஒருவர், 'அதெப்படி நீங்கள் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாம்..?' என்று கேட்டார்
அத்தோடு நிற்காமல், 'இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை வந்தால் நீங்க எந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க' என்றும் கேட்டார்
எனக்கு அவரின் இரண்டாவது கேள்வி சன் டிவி பழைய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் அருமையாக கேள்விகள் கேட்டு அசத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த சீதர் என்று நினைக்கிறேன் அவரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது சீதர் என்பவர் ரபி பெர்னாட்டிடம், 'இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் யாருக்கு சப்போர்ட் பண்ணுவீர்கள்' என்ற சுழலுகிற நாற்காலியில் சுற்றிக் கொண்டே கேட்டார்.
ரபி பெர்னாட், 'என்ன ஒரு அபத்தமான கேள்வி' என்பது போல் பதில் சொன்னார்.
என் ஞாபகங்களை வாங்கி கொண்டு நான் எனது நண்பருக்கு இப்படி பதில் சொன்னேன், 'பங்களாதேஷ் நாடு கிரிக்கெட் டீமுக்கு கோச்சாக மொஹிந்தர் அமர்நாத் என்ற இந்தியரை நியமித்தார்கள், அப்போது இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்று வையுங்கள், மொஹிந்தர் அமர்நாத் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்..' என்று கேட்டேன்.
----------------------------------------------------------------------------

குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல்
1
முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மேலும், முஹம்மது நபிகளை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள்.
அதே போல், குரான் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிகளுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.
இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது.
ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என குரான் ஷரீஃபே சொல்கிறது.
ஆனால், குரான் ஷரீஃபை ஆராய்வதற்காகவோ அல்லது இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவோ அல்லது குரான் ஷரீஃப் இறைவனின் வேதமே அல்ல என்று எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ அது நல்லதோ கெட்டதோ குரான் ஷரீஃபுடைய பல வசனங்களை எடுத்து கொண்டு 'இது அறிவியல் பூர்வமானதா?' என்ற கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------
2
அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன்னர் அவர்கள் குரான் ஷரீஃபை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குரான் ஷரீஃப் எப்படி அதன் முதன்மையான பெறுநர்களை (இங்கே முதன்மையான பெறுநர்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த கால அரேபிய மக்களை) அணுகியது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
குரான் ஷரீஃப் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப அருளப்பட்டது. சில வாசகங்களை கவனித்தீர்கள் என்றால், 'அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்..' என்று ஆரம்பிப்பதை கவனித்திருக்கலாம்.
குரான் ஷரீஃபானது அந்த கால அரேபியர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்து கொண்டிருக்கவில்லை, அது விஞ்ஞான புத்தகமுமன்று. ஆனால் அந்த கால அரேபியர்களின் கேள்விகளுக்கோ அல்லது அவர்களின் வாதங்களுக்கோ பதிலளிக்குமுகமாக சில வசனங்களை சொல்லும் போது விஞ்ஞான செய்திகள் கலந்திருக்கலாம்.
ஆனால் அந்த வசனங்களில் விஞ்ஞானம் பிரதானமாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.
அடுத்து, அப்படி கூறப்படும் விஞ்ஞான செய்திகளில் தற்போதைய கண்டுபிடிப்புகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது தவறுதலாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், குரான் ஷரீஃப் இறங்கிய காலகட்டத்தில் அரேபியர்கள் இலக்கியத்தை பெரிதாக மதித்தார்கள். அரேபிய மொழியை பேசாதவர்களை 'வாயே இல்லாதவர்கள்' என்று ஏளனமாக பார்த்தார்கள். அவர்களின் குரானின் சொல்நயம் பொருள்நயத்தையும் பார்த்து விட்டு 'இது மனிதனின் சொல்லன்று' என்று சரண்டர் ஆகுமளவுக்கு அதன் இலக்கிய இலக்கண தன்மை அமையப் பெற்றிருந்தது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
3
மேலே நான் சொன்ன கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
குரான் ஷரீஃபின் 'ஸூரத்துத் தாரிக் (விடிவெள்ளி)' என்ற 86 வது அத்தியாயத்தின் 5, 6, 7, 8 வசனங்களை பார்ப்போம்
86:5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்
86:6 - குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்
86:7 - முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது
86:8 - இறைவன் மீட்டும் (restore) சக்தியுடையவன்
மேலே காணப்படும் வசனத்தில் விஞ்ஞான செய்திகள் அதாவது மனிதன் எதிலிருந்து உருவாகிறான் என்பது இருந்தாலும் இங்கே அதன் முதன்மையான பெறுநர்களுக்கு சொல்ல நினைப்பது விஞ்ஞானத்தை பற்றிய உண்மையை அல்ல. மாறாக, இறைவன் கூற நினைப்பது இறந்து மண்ணோடு மண்ணாகி போன மனிதனை இறைவன் மீண்டும் படைக்க சக்தியுடையவன் என்பதை தான்.
------------------------------------------------------------------------------------
4
அந்த கால அரேபியர்களிடம் முஹம்மது நபிகள் சொல்கிறார்கள், 'நியாய தீர்ப்பு நாள் ஒன்று இருக்கிறது, அது வந்தே தீரும், அப்போது இறைவன் முன்னே மக்கள் அனைவரும் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் செய்த நல்லவை தீயவை யாவும் நேரான நீதியான தராசில் அளக்கப் பட்டு அவர்கள் செய்ததற்குறிய பிரதிபலனை பெற்று கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.
அதற்கு அந்த கால அரேபியர்கள், 'அதெப்படி, நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு எங்களை இறைவன் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்..?' என்று கேட்கிறார்கள்.
அதற்கு இறைவன் பதிலளிக்கும் போது தான்,
மனிதன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவன் கவனிக்கட்டும், அப்படி கவனித்தான் என்றால் அவன் ஒண்ணுமே இல்லாமல் முதுகு தண்டிற்கும் விலா எலும்பிற்கும் நடுவிலிருந்து குதித்து வெளிப்படும் நீரிலிருந்து தான் அவன் படைக்கப்பட்டிருக்கிறான், அப்படியிருக்க மண்ணோடு மண்ணாகி போனவனை உயிர்ப்பிக்க இறைவனால முடியாதா..? அவ்வாறு மீட்டெடுக்க இறைவன் சக்தியுடையவன் தான்' என்பது போல் அமைகிறது அந்த இறை வாக்கியம்.

5
ஆக, இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன
1. அந்த கால அரேபியர்களுக்கு 'இறந்த பிறகு மீண்டும் படைக்க முடியுமா' என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது தான் அந்த வசனம்.
2. விஞ்ஞான உண்மையை அதாவது விந்து எங்கிருந்து உருவாகிறது என்ற விபரத்தை அந்த முதன்மையான பெறுநர்களுக்கு எடுத்து கூற அல்ல
3. அதுமட்டுமல்லாமல், அந்த கால அரேபியர்களின் சந்தேகமான 'இறைவனால் இது சாத்தியமாகுமா..?' என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக தான், 'மனிதர்கள் அவர்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன வெறும் அற்பமான குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து வெளிப்பட்டவர்கள் தானே, ஒண்ணுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து அவர்களை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனை மறுபடியும் உருவாக்குவதில் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.' என்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூடவே தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை மறந்த மனிதர்களின் திமிரான வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவ்விதம் கூறுகிறான்.
4. அப்போது இறைவன் குறிப்பிடுகையில் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையில் என்று ஏன் குறிப்பிட வேண்டும், குழப்பமாக இருக்கிறதே, நேரடியாக 'இங்கிருந்து' வெளியாகும் 'விந்து' என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம், இங்கே நீங்கள் அரேபிய இலக்கியத்தை பத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
A. உதாரணமாக, குமரி முதல் இமயம் வரை என எழுதுகிறார்கள் என்று வையுங்கள், 'ஏன் அது என்னா குமரி முதல் இமயம் வரை - இந்தியான்னு சொல்ல வேண்டியது தானே' என்று நீங்கள் கேக்க கூடாது? -
B. அதுவும் தவிர, குமரியிலிருந்து இமயத்திற்கு ஹைவேல நேர்கோடு ஒன்றை வரைந்து இந்த பகுதியை மட்டும் தான் குறிக்கும், இந்த கோட்டில் அடங்காத ஊர்களெல்லாம் அடங்காது என்று சொல்லக் கூடாது.
முதலாவது 'குமரி முதல் இமயம் வரை' என்பது இந்தியா முழுவதையுமே குறிக்கும்
இரண்டாவது குமரியிலிருந்து நேர் கோட்டில் எந்த ஊர்கள் வருகிறதோ அந்த ஊரை மட்டும் அது குறிக்காது
ஆக, இங்கே இறைவன் குறிப்பிட விரும்புவது முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையே என்று குறிப்பிடுவது அந்த இரண்டிற்கும் நேர் கோடு ஒன்றை வரைந்து அங்கிருந்தா விந்து வெளியாகிறது என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது, ஏனெனில் அது (பேர் சொல்லகூட அருகதையில்லாத) உடலிலிருந்து குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதை குறிக்கிறது.
5. அதுவும் தவிர, 'இந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நடுவில்' என்பதை அப்படியே நேராக நீங்கள் பார்க்க கூடாது. அதற்கு காரணம் இன்னொரு குரான் ஷரீஃபின் வசனத்தையே நீங்கள் கவனிக்கலாம்.
குரான் ஷரீஃபின் 60வது அத்தியாயம்
'அல்-மும்தஹினா' வின் 12வது வசனத்தில் '... தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் அவர்கள் எதனை கற்பனை செய்கிறார்களோ.." என்று வரும் வாக்கியத்தில் கைகளுக்கும் கால்களுக்கும் நடுவே உள்ள உறுப்பை பற்றி குறிப்பிடவில்லை என்பது அந்த வசனத்தை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு விளங்கும்.
குரான் ஷரீஃபுக்கு குரான் ஷரீபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
-----------------------------------------------------------------------------
கடைசியாக குரான் ஷரீஃப் மனித குலம் முழுமைக்குமான் வேதம் தான் என்றாலும் அது பயபக்தியுடையவர்களுக்கு மட்டும் தான் நேர்வழி காட்டும்.

Thursday, December 03, 2009
போபால் விபரீதம் - ஒரு தொழிற்சாலை பேரழிவு
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ந் தேதிக்குள் 3ந் தேதி புகுந்து கொண்டிருந்த நேரம். அன்று இரவு எப்போதும் உறங்க போன அந்த அப்பாவி பொதுமக்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், 3ந் தேதி காலையிலே நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாக, ஆமாம் ஒரு வீட்டின் அறையின் உள்ளே அம்மா, அப்பா இருவரும் இறந்து கிடக்க ஹாலில் பிள்ளைகள் இறந்து கிடக்க, அதாவது பிள்ளைகள் இறந்தது பெற்றோர்களுக்கு தெரியாது, பெற்றோர்கள் இறந்தது பிள்ளைகளுக்கு தெரியாது, இப்படி உடனடியாக இறந்த ஆயிரக்கணக்கான பேரையும் சேர்த்து 3000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து கிடந்தனர்.
இவ்வளவு பெரிய பாதக செயலுக்கு காரணமாக எந்த வகையிலாவது பெரியண்ணன் (நன்றி: ஆபிதீன் நானா) சம்மந்தப்பட்டிருக்கணுமே என்ற கணிப்பை ஏமாற்றாமல் யுனியன் கார்பைட் என்ற அமெரிக்க நிறுவனத்திலிருந்து கசிந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் என்ற இரசாயனமே அந்த பேரழிவுக்கு காரணமானது.
யுனியன் கார்பைட் என்பது அமெரிக்க இரசாயன தயாரிப்பு ஆலை, இது பலவேறுபட்ட இந்திய முதலீட்டாளர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டு மெதில் ஐசோ சயனைட் எனும் பூச்சி கொல்லி மருந்தை தயாரித்து வந்தது.
இரசாயனங்கள் பொதுவாகவே பல்வேறு தேவைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் அது மனிதனின் உடலுள்ளே சென்று விட்டால் நமக்கு ஆபத்தையும் தீங்கையும் ஏற்படுத்தும்
இரசாயனமானது மனிதனின் உடலின் உள்ளே மூன்று வழிகளில் உள்ளே செல்கிறது
1. வாய் வழியாக
நம்முடைய உடலை ஒரு வீடு என்று வைத்து கொண்டால் வாயை வாச கதவு என்று சொல்லலாம் மருத்துவர்கள் கூட இதனை gate way of the body என்று தான் சொல்வார்கள்.
யாரும் வேண்டுமென்றே இரசாயனத்தை வாயில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை, தெரியாமல் உள்ளே போய் விடும், சில தொழிற்சாலை ஊழியர்கள் தண்ணீர் குடிக்கிற பாட்டிலில் தின்னரை (- இது ஒரு பெட்ரோ இரசாயனம்) ஊற்றி வைக்கிறார்கள், அப்போது தெரியாமல் தண்ணீர் என நினைத்து வாயில் ஊற்றி கொண்ட சம்பவங்கள் உண்டு.
இது தவிர, வேலை பார்த்து விட்டு முறையாக கை கழுவாமல் சாப்பிட்டாலும் வாய் வழியாக உள்ளே நுழைந்து விடும்
2. தோல் வழி
இரசாயனங்கள் தோலில் பட்டால் நம் தோலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத வியர்வை துவாரங்கள் வழியாக உள்ளே நுழைந்து விடும், சாயம் அடிக்கிற வேலை பார்த்து விட்டு கையில் சாயம் இருந்தால் தின்னரை வைத்து துடைப்பதை பார்த்திருக்க்கிறேன். தின்னரானது மேற்கூறிய துவாரம் வழியாக உள்ளே நுழைந்து விடும்
3. சுவாச வழி
இது ரொம்ப ஆபத்தானது, தொழிற்சாலையிலேயே வேலை பார்க்காத போபால் வாசிகள் சுவாசம் வழியாக தான் இரசாயனத்தை உள்ளே இழுத்தார்கள் அதுவும் தூங்கி கொண்டிருக்கும் போது.
அப்படி உள்ளே இழுக்கப்பட்ட அந்த இரசாயனமான மெதில் ஐசோ சயனைட் என்பது நச்சுத்தன்மையுடைய வாயு. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு தண்ணீரோடு கலந்தால் அது எதிர்வினை (reactive) தரக்கூடியதுமாகும்
பேரழிவு சம்பவம் நடந்த தினத்தன்று அப்படி தான் அந்த மெதில் ஐசோ சயனைட் சேமித்து வைக்கும் தொட்டியில் தண்ணீர் தவறுதலாக கலந்து விட்டது. அந்த தொட்டியில் அனுமதிக்கப்பட்ட சேமிப்பு கொள்ளளவை விட அதிகமான அளவில் அந்த இரசாயனம் இருந்ததால் பாதுகாப்பு மூடியை உடைத்து கொண்டு வெளியே வந்து ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.
டைட்டானிக் சம்பவம் நடந்த போது கப்பலை உடைத்து கொண்டு தண்ணீர் உள்ளே புகுந்தது தெரிந்தும் முதல் இருபது நிமிடத்திற்கு ஆட்டமும் பாட்டமுமாய் தான் இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன், ஆனால் போபால் சம்பவத்தில் ஊர் அபாய எச்சரிக்கை ஒலியே ஒரு மணி நேரம் கழித்து தான் ஒலித்ததாம்.
ஹென்றிக் என்பவர் 1950ல் ஒரு தியரியை அறிமுகப்படுத்தினார், அதற்கு பெயர் ஹென்றிக் டொமினோ தியரி என்று பெயர். அந்த தியரியில் விபத்துகளின் அடிப்படை காரணம் - basic cause (முதல் மூலக் காரணம் - root cause அல்ல) என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார்.
1. பாதுகாப்பற்ற செயல்
2. பாதுகாப்பற்ற சூழல்
ஆனால் பொதுவாக எல்லா பாதுகாப்பற்ற சூழலும் பாதுகாப்பற்ற செயல்களினாலேயே விளைகிறது. அதாவது மனித தவறுகளே - human failing காரணமாக இருக்கிறது.
இந்த மனித தவறுகளுக்கும் காரணமாக மூன்று சொல்லப்படுக்கிறது
1. அலட்சியம் - carelessness
2. திறனின்மை - incompetence
3. அறியாமை - ignorance
ஆனால் ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பவர்களுக்கு அறம் சார்ந்த, மனித நேய மிக்க சமூக பொறுப்புகள் உள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரி தனக்கு பொறுப்பு இல்லை என்று தன்னை சட்டப்பூர்வமாக விடுவித்து கொண்டார் என்று அறியும் போது என்ன தான் முடிவு?
படிக்க: http://www.bookrags.com/research/bhopal-case-este-0001_0001_0/
நேற்றோடு சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிறது.
மனதில் பதிந்து விட்ட அவர்களின் நினைவாக இந்த பதிவு

Labels:
நியாயம் வேண்டி,
வேலையிட விபத்துகள்
Wednesday, December 02, 2009
பரிச்சே - பழைய இந்தி பட விமர்சனம்
பரிச்சே - அடையாளம் அல்லது அறிமுகப்படுத்துதல் என்று அர்த்தம் - ராய் சாஹேப் என்பவரின் கதை. ராய் சாஹேப் கண்டிப்பும் அன்பும் சம அளவில் கலந்த உருவம்.
அவருக்கு ஒரே மகன் நீலேஷ். நீலேஷ் இசையில் அதீத ஆர்வம் உடையவர். நீலேஷுக்கு அவர் வீட்டில் வேலை பார்க்கும் நாராயணன் மூலமாக பெண் பார்க்க போக இருப்பது தெரிய வருகிறது.
பெண் பார்க்க புறப்பட இருக்கும் சரியான நேரத்தில் ராய் சாஹேப் நீலேஷின் அறைக்கு வருகிறார், நீலேஷ் இன்னமும் தயாராகாமல் இருப்பதை கண்டு, 'நாராயணன் உன்னிடம் சொல்லவில்லையா..?' என்று வினவுகிறார்.
'இல்ல பாபுஜி.. நான் என்னுடைய குருநாதரோடு இன்றைக்கு கச்சேரி பண்ண இருக்கிறேன்.. இப்ப கிளம்பி விடுவேன்.." என்கிறார்
ராய் சாஹேபுக்கு கடும் கோபம் வருகிறது, 'நான் அங்கே முதலில் செல்கிறேன், நீ சரியாக வந்து விட வேண்டும்..' என்று கூறி விட்டு கோபமாக சென்று விடுகிறார்
அப்பாவை போலவே பிடிவாதமுடைய நீலேஷ் வீட்டை விட்டு வெளியேறி கச்சேரிக்கு செல்வதோடு தன்னுடைய குருநாதரின் மகளையே மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
ராய் சாஹேபின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மருமகளுக்கு ஆசி வழங்கி விட்டு நீலேஷிடம் 'உள்ளே அழைத்து கொண்டு போ" என்கிறார்
ராய் சாஹேபை சந்திக்க நீலேஷ் வருகிறார், 'பாபுஜி.. கூப்பிட்டீங்களா..?' என்று கேட்கிறார்
'சாப்டியா." - அப்பா
'ம்' - மகன்
'பஹூ..' என்று மருமகள் சாப்பிட்டாச்சா என்று கேட்கிறார்
'ம்..' என்று சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார் மகன்
'அவங்க அவங்க வாழ்க்கைய அமைச்சுக்க அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு..' என்பதோடு இரும்பு பெட்டியின் சாவியை கொடுத்து, 'எனக்கு பெத்த கடமை இருக்கு.. இதுல எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்க.. நான் எப்படி என் இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டேனோ.. அதே மாதிரி நீயும் வெளியே போய்.. உனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கைய அமைச்சுக்க..' என்கிறார்
தன்மானமும் பிடிவாதமும் நீலேஷுக்கு பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடவே தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்
2 பெண் பிள்ளைகள் 3 ஆண் பிள்ளைகள் என்று வரிசையாக பெற்று மனைவி இழந்த நிலையில் கடும் வறுமையில் வாடுகிறார். வறுமையோடு அதன் கூட பிறந்த சகோதரரான வியாதியும் ஒட்டிக் கொள்ளவே தனது முடிவு நெருங்குவதை உணர்கிறார்.
தனது அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறார், 'பாபுஜி, நீங்கள் சொன்ன மாதிரியே என் வாழ்க்கையை நான் அமைத்து கொண்டேன், இப்ப கூட நான் எனக்காக இந்த கடிதத்தை எழுத வில்லை, எனக்கு முடிவு நெருங்கி விட்டதாக உணர்கிறேன், உங்களை விட்டால் என் குழந்தைகளுக்கு ஆதரவில்லை..' என்று
கடிதம் வந்த போது ஊரில் இல்லாமல் கடிதம் பார்த்ததும் உடனே கிளம்பி சென்று 5 பேர பிள்ளைகளையும் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிலேயே படிப்பு சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், பிடிவாதத்திலே ராய் சாஹேப் கூட இந்த 5 குழந்தைகளுக்கு பேரன் தான், அவ்வளவு கோபம் ராய் சாஹேப் மீது, அதாவது ராய் சாஹேப் தான் தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணம் என்று நம்பும் குழந்தைகள் ராய் சாஹேபுக்கும் அவரின் தங்கை சாதி தேவிக்கும் அடங்காமல் தொல்லைகள் கொடுத்து கொண்டும் கொடுக்கும் தண்டனைகளை 'சாப்பாடு கிடையாது', 'இங்கேயே ராத்திரி முழுக்க தூங்காமல் நிக்க வேண்டும்' என்று அனுபவித்து கொண்டும் வருகிறார்கள்.
இந்த 5 பிள்ளைகளில் மூத்தவளான ரமா தான் வழிகாட்டி. அவளுக்கு கட்டுப்பட்டு தான் அத்தனை பிள்ளைகளும் ராய் சாஹேபின் கடும் டிசிபிளினுக்கு வளையாமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரவி என்பவர் வேலையில்லாத பட்டதாரி, ஒரு வேலைக்கு இண்டர்வியு செல்வார், அங்கே இவருக்கு ஒரு வயதான நபரை கூப்பிட்டு ரவிக்கு என்னென்ன வேலை என்று சொல்லி கொடுக்கும்படி முதலாளி கூறுவார்.
அந்த வயதான நபர் ரவியை அழைத்து சென்று, வேலையை பத்தி சொல்லி கொடுத்து விட்டு, 'முதலாளி ரொம்ப நல்லவர், என் மகள் கல்யாணத்துக்கு நான் கேக்காமலே பணமெல்லாம் கொடுத்தார், இப்ப அவர் என்ன ஒண்ணும் சொல்லல.. நான் தான் போறேன்னு சொல்றேன்.. எனக்கு வயசாயிடுச்சு.. கண்ணு சரியா தெரியலை.." என்று கண்கலங்க அந்த வேலையை ஒத்துக் கொள்ள ஏனோ மனமில்லாமல் வந்து விடுகிறார்.
இப்படி வேலையில்லாமல் இருக்கும் ரவி தன்னுடைய மாமா வீட்டிற்கு வருகிறார். அவர் ராய் சாஹேபிடம் அந்த 5 பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறார்.
அந்த குழந்தைகளுக்கு பாடமும் புத்தியும் சொல்லி கொடுக்க வந்தவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தால் 'பேய் போல் வருவது..', 'ஆமை முதுகில் மெழுகுவர்த்தி கொளுத்து இருட்டில் வாத்தியார் ரூமுக்கு போக விடுவது' இப்படியாக செய்ய போக துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட ஆரம்பிப்பார்கள்.
அந்த வேலைக்கு ரவி வருகிறார், ரவியிடமும் குழந்தைகள் குறும்பு தனங்கள் செய்ய ரவிக்கு நெற்றியில் அடிபட்டு விடுகிறது, இதை சாதி தேவி கண்டுகொண்டு, 'இது குழந்தைகளின் வேலை தான்..' என்று கூறும் போது, 'இது குதிரை வண்டியில் அடிபட்டது..' என்று பொய் சொல்லி குழந்தைகளை அன்றைய தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார்.
ராய் சாஹேபுக்கு ரவி மீது நம்பிக்கை வருகிறது, 'குழந்தைகள் செய்திருந்தாலும் அதை குழந்தைகளை காட்டி கொடுக்காமல் இருந்தீர்களே..' என்று ரவியிடமே சொல்கிறார்.
இந்த சூழலில் குழந்தைகளில் குறும்புதனமும் நின்றபாடிலை, ராய் சாஹேபும் சாதி தேவியும் வெளியூர் கிளம்புகிறார்கள்.
ரவி எப்படி குழந்தைகளை திருத்தி அவர்களது தாத்தாவுக்கு பேரப் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளுக்கு தாத்தாவையும் அறிமுகம் செய்து வைக்கிறார் (பரிச்சே) என்பதை உணர்வுப் பூர்வமாக சொல்லி இருப்பார் குல்ஜார் சாப் இதற்கிடையே ரமா, ரவியின் கவித்துவமான காதல் வேறு.
குல்ஜார் சாபின் படங்கள் என்றாலே பிளேஷ் பேக்கில் தான் கதை சொல்வார். இந்த படமும் விதிவிலக்கல்ல.
ரவியாக ஜிதேந்திரா, ரமாவாக ஜெயபாதுரி, ராய் சாஹேபாக பிரான், நீலேஷாக சஞ்சீவ் குமார், ரவியின் மாமாவாக ஏ.கே.ஹங்கால் மாமியாக லீலா மிஷ்ரா, அப்புறம் அந்த மற்ற 4 குழந்தைகள் யாவரும் நம் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள்.
ஆர்.டி.பர்மன், குல்ஜார் சாப், கிஷோர் குமார் முக்கோணங்கள் இணைந்தால் காற்று, எரிபொருள், வெப்பம் இணைந்தது போல் இசைத்தீ பரவிக் கொள்ளும்.
நீலேஷ் தன் மனைவியை இழந்து வறுமையில் வாடும் போது தனது மகள் ரமாவுடன் சேர்ந்து 'பீட்டி நா பிதாயி ரெய்னா..' என்ற பாடலை இங்கே பாருங்கள்
ரவி வேலை கிடைக்காமல் முஸாஃபிர் போல் அதாவது நாடோடி போல் வேலையில்லாமல் அலைந்து திரிந்து தனது மாமாவின் கடிதம் பார்த்து மாமாவின் ஊருக்கு வரும் போது வரும் , 'முஸாஃபிர் ஹுன் யாரோ..' என்ற இசை அற்புதங்களை இங்கே காணலாம்
பறவை கிளையில் உட்கார்ந்து ஆடி விட்டு பறந்த பிறகும் ஆடும் கிளையை போலே இந்த படத்தை எப்போதோ பார்த்த பிறகும் இன்னமும் இந்த படத்தை பற்றிய பாத்திரங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது

இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்
Sunday, November 29, 2009
தமிழன் டிவியில் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களின் ஹஜ் பெருநாள் சொற்பொழிவு
அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.
என்னுடைய குர்பான் பதிவின் இறுதியில் ஹமீது ஜாபர் நானா அவர்களின் பதிவில் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களின் தமிழன் டிவியில் ஒளிபரப்பான பேச்சை பற்றி படிப்பதற்கு இணைப்பை கொடுத்திருந்தேன். அது எனக்கு போதவில்லை. அவர்களிடம் என் வலையில் பதிய சம்மதம் கேட்டிருந்தேன். அதே போல் ஆபிதீன் நானா அவர்களின் இந்த பதிவின் மூலமாக தான் அந்த பதிவிற்கு சென்றேன், ஆகையால் அவர்களிடமும் சம்மதம் பெற்று விட்டேன் (யாரும் தமிழன் டிவியிடமும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களிடமும் சம்மதம் வாங்கி விட்டீர்களா? என்று கேட்டு விடாதீர்கள்)
நன்றிகள்:
இனி அந்த கட்டுரை.. படியுங்கள்.. பயன்பெறுங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.
நன்றிகள்:
- ஆபிதீன் நானா
- ஹமீது ஜாபர் நானா
- தமிழன் டிவி
- இஜட்.ஜபருல்லாஹ் நானா
-------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.
ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.
ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை)
தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.
அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும்.
அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள்.
அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.
பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)
குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம்.
தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது.
இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.
அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.
மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று.
குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது.
ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும்.
***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி
***
சுட்டி : ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)
Labels:
ஆபிதீன் நானா,
இஜட்.ஜபருல்லாஹ்,
ஹமீது ஜாபர் நானா,
ஹஜ்
Thursday, November 26, 2009
குர்பான்
முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் ஒரு இடத்திற்கு செல்வது என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான 'கஅபா' என்ற இறையில்லத்தை நோக்கி செல்வதை இது குறிக்கும்.
'கஅபா' என்ற இறையில்லம் அகிலத்தின் அருட்கொடை ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு மட்டும் சம்மந்தப்பட்ட இடமல்ல. நாயகம் அவர்களுக்கு முன்னால் தோன்றிய பல நபிமார்களுக்கும் அது தொடர்புடைய இடமாகும். குறிப்பாக இப்ராஹீம் நபி (ஸல்) மற்றும் இஸ்மாயில் நபி (ஸல்) அவர்களோடும் சம்மந்தப்பட்ட இடமாகும்.
இப்ராஹீம் நபியவர்கள் அவர்களுடைய எண்பத்தாறாவது வயதில் இஸ்மாயில் என்ற பிள்ளை கனியமுதை பெற்றெடுக்கிறார்கள். முதுமை பருவத்தில் பிறந்த குழந்தையின் மீது தந்தையின் பாசமானது எப்படி இருந்திருக்கும் என்று எதுவும் எழுதாமலே எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியும். அந்த பிள்ளையை தவிர வேறு ஒரு உவப்பான பொருள் எதுவும் எந்த தந்தைக்கும் இருக்க முடியாது என்பது தெளிவு.
இந்த கட்டத்தில் தான் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஒரு மிகப் பெரிய சோதனை காத்திருந்தது. நெஞ்சை உலுக்கும் அந்த சோதனை இறைவனிடமிருந்து சமிக்ஞை மூலமாக இப்ராஹீம் நபியவர்களுக்கு வருகிறது. அதாவது தனது அருந் தவப் புதல்வனை ஆருயிர் செல்வனை குழந்தை இஸ்மாயிலை அறுத்து பலியிட வேண்டும் என்பது தான் அது.
இந்த இடத்தில் சற்று உணர்ந்து சிந்தித்தல் நல்லது. இப்ராஹீம் நபியவர்கள் உள்ளம் எப்படி இருந்திருக்கும்..? நினைத்து பார்க்கையில் ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது.
இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர வேறு எதையும் நாடிராத இப்ராஹீம் நபியவர்கள் இறைவனின் செய்தியை இஸ்மாயிலிடம் வெளியிடுகிறார்கள். குணக்குன்றான இஸ்மாயில் அவர்கள் சொன்னார்கள், 'இறைவனின் கட்டளையை தயக்கமின்றி நிறைவேற்றுங்கள்.. அல்லாஹ் அருள் கூர்ந்தால் அவற்றைப் பொறுத்து கொண்டு உறுதியாக இருப்பவனாகவே என்னைக் காண்பீர்கள்..' என்று. இப்ராஹீம் நபியவர்கள் திருவாயிலிருந்து, 'அல்ஹம்து லில்லாஹி ஹம் தன் கதீரா..' என்ற நன்றிமொழி வெளிவந்தது.
இஸ்லாமிய ஆண்டின் கடைசி மாதமாகிய துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் இறைவனுடைய கலீல் என்பதற்கு பொருத்தமான இப்ராஹீம் நபியவர்களது கூரிய வாள் மினா எனுமிடத்தில் கழுத்தை உறுதி படக் காட்டிக் கொண்டிருந்த தமது அருமை மைந்தன் இஸ்மாயிலை குறி பார்த்தது.
அப்போது தான் வல்ல இறைவன் கூறினான், 'இப்ராஹீமே! நீர் கண்ணுற்றதை மெய்ப்பித்து காட்டி விட்டார். நல்லவர்களுக்கு யாம் இவ்வாறே வெகுமதி அளிப்போம் திட்டமாக் இஃது ஒரு தெளிவான பெரும் சோதனையாகும்!' என்று.
அதன் பிறகு இறைவன் இஸ்மாயில் அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இதை தனது திருமறை குரானில் 'மகத்தான பலியின் மூலம் அவரை மீட்டோம். அவருடைய புகழை அவருடைய வழித்தோன்றல்களின்கண் நிலைத்திடவும் செய்தோம். இப்ராஹீமுக்கு சாந்தி உண்டாவதாக!' என்று மிக அழகிய சொற்களால் எடுத்துரைக்கின்றான்.
'மகத்தான பலி' என்றால் சினம் கொண்ட கடவுளின் கோபத்தை தணிப்பதற்கு கொடுக்கப்படும் பலி என்றோ அல்லது இகபர உலகில் நாடியது நிறைவேற வேண்டி கடவுளை களிப்பூட்டவோ செய்யப்பட்ட பலி அல்ல என்பது தான்.
'முஸ்லீம்' என்றால் இறைவனுக்கு முற்றிலும் வழிபடுதல் என்று பொருள். எனவே இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட ஒரு உண்மை முஸ்லீமின் உலகம் போற்ற வேண்டிய உன்னத தியாகமே இந்த மகத்தான பலியாகும்.
இந்த 'மிருக பலியான' குர்பான் எனப்படுவது புறச் சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது. உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து ஊன் உருக, உளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும்.
இதை தான் இறைவன் தனது அற்புத திருமறையில் '(இவ்வாறு குர்பான் செய்த போதினும்) அதன் மாமிசமோ அதன் இரத்தமோ இறைவனை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சமே அவனை அடையும்' என்று அத்தியாயம் 22 வசனம் 37ல் மிக அற்புதமாக விளக்குகின்றான்.
திருமறையின் இந்த வசனங்கள் இஸ்லாமிய தியாகத்தின் தத்துவத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் விளக்கி விடுகின்றன.
இப்ராஹீம் நபியவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி தியாகத்தை நெஞ்சில் நிறுத்திடவும் நிறுத்திய தியாகம் நிலைத்திடவும் வல்ல அல்லாஹ்(ஜல்)விடம் பிரார்த்திப்போம்
பின் குறிப்பு:
ஹஜ்ஜு பெருநாள் பற்றிய நாகூர் கவிக்குரிசில் இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்களின் தமிழன் டிவி ஒளிபரப்பிய சொற்பொழிவை இங்கே படிக்கலாம். ஹமீது ஜாபர் என்பவர்களின் வலை தளத்தில் மேற்கண்டதை படிப்பதோடு இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் ஹஜ் பெருநாள் பற்றிய பாடலின் இணைப்பும் உண்டு
உலக முஸ்லீம் சகோதரர்கள் அனைவருக்கும் (ஈத் முபாரக்) தியாக திருநாள் வாழ்த்துகள்

இஸ்லாம்,
ஹஜ்
Wednesday, November 25, 2009
நம் கையில் என்ன இருக்கிறது?
நம்ம தமிழ் படத்தின் ஹீரோக்கள் வில்லனிடம், 'இனிமே என் வாய் பேசாது என் கை தான் பேசும்..' என்று மிரட்டுவார்கள்
ஒரு ஹிந்தி படத்தில் சன்னி தியோல் சொல்வார், 'ஏ ஹாத் தாயி கேஜி ஹேய்ன்.. அகர் முக்கா படேகா தோ.. உட் நஹி.. ஜாவோகே.. ' (தவறிருக்கலாம்)
அதாவது இந்த கை இரண்டரை கிலோ இருக்கும், ஒரு குத்து உட்டேன்னா எந்திருக்க மாட்டே அப்படியே (இறந்து) போயிடுவே" (அதாவது நான் அடிச்சா நீ செத்துடுவே.. அந்த கான்செப்ட்)
வெண்ணிற ஆடை மூர்த்தியின் கையை (ஜோசியம்) பார்த்து சுஹாசினி 'உங்களுக்கு நல்லது நடக்க போகிறது' என்கிற ரீதியில் சொல்ல 'அப்படியா?' என்று ஆச்சர்யமாக கேட்பவரிடம், சுஹாசினி சொல்வார், 'கை பேசுதே..' என்று
அதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படி பதில் சொல்வார், 'அது பேசுதுங்க, ஆனா காதுல தான் விழ மாட்டேங்குது..' என்று
- மகேந்திரன் இயக்கத்தில் மோகன் சுஹாசினி பிரதாப் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே என்ற அருமையான படத்தில் வரும் வசனம் தான் மேற்கண்டது.
நம்ம கை ரொம்ப ஆச்சர்யமான விஷயம், மனுஷனை தவிர எந்த இனத்துக்கும் கைகள் என்பதே இல்லை என்று தான் நினைக்கிறேன்.
உங்க கையை அப்படியே எடுத்து செத்த நேரம் பாருங்க.. ஒரு கையை மட்டும் வீசி பாருங்க.. ரெண்டு கையும் ரொம்ப முக்கியம், கை தட்ட மட்டுமல்ல.. வாழ்க்கையை ஓட்டவும்..
ஊர்ல ஆட்டோவில், 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று எழுதி வைத்திருப்பார்கள்.
இந்தியாவில் காங்கிரஸின் தேர்தல் சின்னம் கை தான்
'உழைக்கும் கைகளே..' என்ற எம்ஜிஆர் நடித்து வாயசைத்த பிரபலமான பாடலும் உண்டு
சின்னப்பூவே மெல்லபேசு படத்தில் காலேஜ் காட்சியில் பேராசிரியர் 'கை.. கை' என்று நிறைய கையை பத்தி பேசுவார், அதை பார்த்து சின்னி ஜெயந்த அழுவார்.
அதற்கு அந்த பேராசிரியர், 'ஆனந்த கண்ணீரா.. என் கிட்ட இந்த மாதிரி கை கைன்னு நிறைய கை இருக்கிறது.. எதுகை.." என்பார்
சின்னி ஜெயந்த், 'நீங்க வேற சார்.. எங்க பிரண்ட் ராஜாவ ரௌடி பசங்க அடிச்சு போட்டதால .. இப்ப ஆஸ்பத்திரில இருக்கான்.. டாக்டர் கைய எடுக்கணும்னு சொல்லிட்டார்.." என்பார்
பேராசிரியர், 'எக்கையை..?' என்று கேட்பார்
'வலக்கையை..' என்பார் சின்னி..
'உலக்கை போல் வலக்கை..' என்று 'உச்..' கொட்டிவிட்டு 'இது தான் வாழ்க்கை..' என்பார் பேரா..
இப்படி சுவாரஸ்யமான வசனம மறைந்த பிரபல வசனகர்த்தா பிரச்சன்னகுமாருடையது
கை சம்மந்தமான முல்லா கதை கூட ஒன்றுள்ளது..
முல்லா மீது 'அவர் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி விடுகிறாரே.. அவரை மட்டம் தட்ட வேண்டும்..' என்ற பொறாமை எண்ணம் கொண்ட சிலர் ஒரு பறவையை புடிச்சு கையில பின்னாடி கட்டி மறைச்சி வைத்து கொண்டு முல்லாவிடம் வந்தார்கள்
வந்தவர்கள், 'முல்லாவே.. என் கையில் ஒரு பறவை இருக்கிறது, அது உயிரோடு இருக்கிறதா? இல்லை செத்து போய் விட்டதா?' என்று கேட்டார்கள்.
அதாவது அவர்களது திட்டம் என்ன என்றால், முல்லா பறவை உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அந்த பறவையில் கழுத்தை நெறித்து கொன்று விட வேண்டியது.
அந்த பறவை இறந்து விட்டது என்று சொன்னால் பறக்க விட்டு விட வேண்டியது, இது தான் திட்டம்
இதனை விளங்கி கொண்ட சூஃபி முல்லா, 'அந்த பறவை உயிரோடு இருப்பதும் இறந்து போறதும் உன் கையில் தான் இருக்கிறது' என்று சொன்னாராம்.

பொட்டி சோறு - 2 (சிறு கதை - இரண்டாவது இறுதி பகுதி)
பொட்டி சோறின் முதல் பந்தி இங்கே பரிமாறப்படுகிறது
பூட்டி கெடந்த வூட்டை பாத்து கலவரமாகி போனான் சலீம். ரெண்டு விஷயம் மண்டைக்குள்ள நஹரா கொட்டியது. ஒண்ணு 'ம்மா வூட பூட்டிட்டு எங்கே, எப்போ போனாஹா..?' ரெண்டு, 'இந்த நிஜாம் பய வந்து சோத்த குடுத்துட்டானா, இல்லையா..?' -
அந்த சிறுமி 'இப்ப என்னா செய்றது..? எனக்கு அந்த சோறு வேணுமே..?' என்றாள்.
'வேணும் தான், தெரியுமே.. இப்ப ம்மா ஜேபா மாமி வூட்டுக்கு தான் போயிருப்பாஹன்னு நெனைக்கிறேன்.. நான் போய் பாத்துட்டு வந்துடறேன்,' என்று சொல்லி முடிக்கங் காட்டியும்
'நானும் உங்க கூட வர்ரேன்..' என்றாள்
'வாணா.. வாணா.. நீ வர வாணா.. நான் போய்ட்டு வர்ரதுக்கெடைல நிஜாம் சோற கொண்டுகிட்டு வந்துட்டாண்ணா நீ வாங்கி வச்சுக்க.. நான் இந்த ஓடியாந்துடுறேன்..' என்று ஓட்டமும் நடையுமாக நாலு தெரு தள்ளியிருந்த ஜேபா மாமி வீட்டுக்கு ஓடிநடைனான்
ஜேபா மாமி வீட்டு வாச கதவு உள்ளக்க பூட்டியிருந்ததால சலீம் வாச பில்லை அடிச்சான்
உள்ளே ஜேபா மாமி பேசும் சத்தம் கேட்டது, 'இந்தாம்மா ரஜியா.. வாச கதவ யாருன்னு கேட்டு தொறங்க..' என்றார்கள்
ரஜியா ஓடியாந்து 'யாரு?'ன்னு கேட்டுட்டு கதவை தொறந்து வுட்டு, 'சலீம் நானா..' என்று சொல்லி விட்டு ஓடிப் போய் அடுப்பங்கறையில் மறைந்து போனாள்.
'சலீமு.. வாயேன்.. ' என்றார் ஜேபா மாமி
'வூட்டு சாவி இங்கேயா இருக்கு.. ' என்று எப்போதும் சாவி இருக்கும் சாவி மாட்டுற கூடத்தறை வாச பக்கம் பார்வைய திருப்பி அங்கே இருந்த வூட்டு சாவிய பாத்ததும் 'அப்பாடா.' என்று எடுத்து திரும்பினான்..
'ம்மா.. நாவப்பட்டிணம் போயிருக்காஹா.. வூட்டுவொல்வோக்கு போயிட்டு கடத்தெருவுக்கும் போயிட்டு தான் வருவேண்டாஹா.. கூட பாத்திமா சபுரா போயிருக்கா..' என்றார் ஜேபா மாமி
'சரி.. நான் வூட்டுக்கு போயிட்டு வர்ரேன்.' என்று கெளம்பியதும்
'உட்காரு.. இப்ப தானே வந்தா.. அதுக்குள்ள கால்ல நெருப்ப அள்ளி கொட்டிகிட்டு எங்கே கெளம்புறா..? இங்கே சாப்புடேன்.. தர்ஹா சோறு கொஞ்சம் இருக்கு.. தொட்டுக்க மூளை இருக்கு.. முட்டை இருக்கு.. அப்டியே கடுவ பெரட்டிகிட்டு சாப்டா ரொம்ப ஜோரா இக்கும்.. ஒனக்கு புடிக்குமே.. சாப்டேன்..' என்றார்.
'தர்ஹா சோறா..?.. ம்மா எடுத்துட்டு வந்ததா..?' பதறினான்
'இல்ல.. இல்ல.. இப்ப தான் தர்ஹால இருப்பான்ல நிஜாம் அவன் வந்து கொடுத்துட்டு போனான்.. நம்ம வூட்டுக்கு எப்பவும் வரும்ல.. அதனால பரவால்லா.. நீ சாப்டேன்.. வச்சு தரவா..?' என்று கேட்டு முடிப்பதற்குள் போன் அடித்தது..
'செத்த போன எடும்மா..?' என்றார் ஜேபா மாமி
போன எடுத்து, 'ஹலோ.' என்றான் சலீம்
'யாரு சலீமா.. இங்கே தான் இக்கிறியா.. நல்லதா போச்சு.. அதான் சொல்லாம வந்துட்டேனேன்னு தான்.. ' என்றார் சலீமின் தாயார் ரஹ்மத்
'ஏம்மா.. எங்கேந்து பேசுறீங்க..' என்றான்
'நா ஹலிமா மாமி வூட்லேந்து தான் பேசறேன்.. காசிம் சொன்னாரா..?' என்று கேட்டார் சலீமின் தாயார்.
'நான் காசிம பார்க்கவேயில்லையே.. ஏன் என்னா சொல்வார்?' என்று கேட்டான் சலீம்
"ஒண்ணுமில்ல.. தர்ஹாலேந்து பொட்டி சோறு வந்துச்சு.. மேச மேல தான் துத்திப்ப போட்டு மூடி வச்சிருக்கேன்.. நான் கொஞ்சம் தப்ரூக்க வாயில போட்டுகிட்டேன்.. எஜமாண்ட தலைக்கு மேல.. வாப்பாக்கும் தம்பிக்கும் கொஞ்சம் தப்ரூக் எடுத்து வச்சுட்டு நீயும் சாப்புடு.. அப்புறம் வூட்லேயே இருந்துக்க காசிம் ஒரு சாமான் கொண்டு வந்து கொடுப்பார்.. வாங்கி அலுமாரில வச்சுடு..' என்று படபடன்னு பேசிட்டே போவ சலீம், 'ம்மா.. ம்மா..' ன்னு இழுத்து விஷயத்தை சொன்னான்.
ம்மா விஷயத்தை பொறுமையா கேட்டுட்டு 'ம்'ன்னு சொன்னவொடனே சாவிய எடுத்து சட்ட ஜோப்புல போட்டுகிட்டு ஜேபா மாமிட்ட 'கதவ கொலுக்கு போட்டுகுங்க.. இந்த வந்துடறேன்னு..' சொல்லிட்டு தெரு வாச பக்கம் தலை தெறிக்க ஓடினான்.
மூச்சு முட்ட, வேர்வை சொட்ட, கண்ணு கட்ட, காலு கடுக்க ஓடி வந்தான்.
வாசல்ல இருந்த படில ஓரமா ஒக்காந்துட்டு ஓடி வர்ரத பாத்து எந்திரிச்சு நிக்கிற அந்த சிறுமியிடம், 'இன்னும் ஒரு நிமிஷத்துல ஒன் கைல பொட்டி சோறு.. எங்கே சிரி..' என்று சொல்லி விட்டு ஜோப்புல கைய வுட்டான்.. சாவிய காணோம்..
'அல்லாஹ்வே.. இது என்னா இது.. அதாபு.. எங் கூடவே அலையுது.. சாவிய எங்கே போட்டேன்..' என்று கீழே பார்த்தான்.. வாச படி கிட்டே கீழே இறங்காமலே பார்வையை நீட்டி அலைய விட்டான்.
'சாவிய எடுத்துட்டே வரலயா..?' கவலையோடு கேட்டாள்
'இல்ல.. எடுத்து ஜோப்புல வச்சேன்.. நல்லா தெரியும்.. வழில தான் எங்கேயோ வுழுந்திருக்கணும்.. ஒன்னும் பிரச்சனையில்ல.. நான் போய் தேடி பார்க்கிறேன்..' என்று வாசல வுட்டு எறங்கிய விநாடி 'டுப்..' கரண்ட் கட்டாயிடுச்சு..
'அல்லாஹ்வே.. இந்த இருட்டுல எங்கேந்து போய் சாவிய தேடுறது..கொஞ்சம் பொறு.. இப்ப கரண்ட் வந்துடும்.. எங்கேயும் போயிருக்காது நான் போய் எடுத்துட்டு வந்துடறேன்..' என்று இருட்டில் நின்ற அந்த சிறுமியை பார்த்து பேசினான்
போன கரண்ட் செத்த நேரத்துலேயே அதிசயம் ஆனால உண்மையாக வந்து விட்டது. 'இங்கேயே இரு.. சாவியோட வர்ரேன்..' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்த திசையையே வெறிச்சு வெறிச்சு பார்த்துக் கொண்டிருந்த அவளை, 'யாரும்மா நீ.. என்னா வேணும்..? இங்கே ஏன் ஒக்காந்து இருக்கிறே..?' - என்று ஒரு குரல் கேட்டு திரும்பினாள்.
அவள் பதில் சொல்ல வாயெடுத்த விநாடி சலீம் வந்து விட்டான் சாவியோடு 'இங்க பக்கத்துல தான் விழுந்திருக்கு..' என்று கூறிக் கொண்டு.
'சலீமு.. யாரிது?' - என்று கேட்டார் காசிம் என்ற பெயருடைய அவர்
'நமக்கு தெரிஞ்ச புள்ள தான்.. அது இருக்கட்டும்.. ம்மா ஏதோ சாமான் கொடுப்பியோம்னு சொன்னாஹலே..' என்றான்
'ஆமா.. இந்தாரும்..' என்று அந்த பையை எடுத்து தந்து, 'இத அப்டியே பத்தரமா வச்சுடும்.. நான் வந்து ம்மாட்ட பேசிக்கிறேன்..' என்று போய்ட்டு ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்ப வந்து, 'சொல்ல மறந்துட்டேனே.. ம்மா சொல்ல சொன்னுச்சு.. பொட்டி சோறு மேசைல இருக்காம்.. கொஞ்சம் தப்ரூக் எடுத்துக்கிட்டு வாப்பாக்கும் தம்பிக்கும் வக்க சொன்னுச்சு.. நா வரட்டுமா..?.. சாமான் பத்தரம்..' என்று போய் விட்டார்
சலீம் கதவை திறந்தான். 'உள்ளே வா..' என்று அவளையும் கூப்டுகிட்டு உள்ளே போய் வெளக்க அடிச்சு வுட்டு மேச மேல இருந்த பொட்டி சோற எடுத்து அந்த சிறுமி கைல கொடுத்து, 'அப்பாடா..! இப்ப சந்தோஷமா..? இது ஒன்னோட ரிஜ்க்' என்று கையில் கொடுத்தான்
அந்த சிறுமி அப்படியே நின்றாள், 'ஏன்.. அப்டியே நிக்கிறே? போய் உங்க ம்மா கூட சாப்டேன்.. தேடிகிட்டு இருப்பாஹல்ல..' என்றான்
'உங்க ம்மா வந்தா திட்டுவாங்க..' என்றாள்.
'நான் ம்மாட்ட டெலிபோன்ல சொல்லிட்டேன்.. நீ எடுத்துட்டு போ..' என்றான்.
'இல்லை.. நான் போறேன்..' என்று பொட்டி சோறை மேச மேலேயே வச்சுட்டு விறுவிறுவென திரும்பி பார்க்காமல், 'நில்லு..' ன்னு சலீம் கூப்ட்டு கத்துவதை காதுல வாங்காமல் ஓடிப் போய் மறைந்து போனாள்.
சலீம் 'ப்ச்ச்..' என்று அலுத்து கொண்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு , பிறகு காசிம் கொடுத்த சாமானை அலமாரியில் வைத்தான்.
திரும்பவும் பள்ளிக்கு தொழுவ போவலாம்னு வாச கதவ பூட்டி தர்ஹாக்கு வந்தான். அலங்கார வாச கிட்டே வந்ததும் நவாப் சிரித்து கொண்டே தர்ஹா உள்ளேயிருந்து வெளியே வந்தான்.
'ஏன்.. என்னா அது.. ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..' என்றான் சலீம்
'இப்ப தான்.. உம்பர் கூட வந்துச்சுல்ல அந்த புள்ளைய பாத்து பொட்டி சோற கொடுத்துட்டு வர்ரேன்..' என்றான் நவாபு
'அப்டியா..?.. உம்பர்க்கு ஏது..? உங்க வூட்றேயா?' - என்று ஆச்சர்யம் மேலிடவும் மகிழ்ச்சி பொங்கவும் கேள்வியையும் பதிலையும் கேட்டான் சலீம்
'ஆமா.. நீம்பர் கொடுக்க சொன்னதா சொல்லி கொடுத்துட்டேன்.சரி.. நான் ஹாரீஸ் நானா கடைக்கு போறேன்.. வர்ரீயமா..?' என்றான் நவாப்
'ம்.. வர்ரேன்.. இந்த போய் இஷா தொழுவிட்டு வந்துர்ரேன்..' என்று சொல்லிவிட்டு நவாப் பள்ளி என்கிற பெரிய ஹொத்துவா பள்ளில உள்ளே பூந்து செருப்பை வச்சிட்டு சட்டை கைல உள்ள பொத்தானை விடுவித்து கையை மடிச்சு வுட்டுகிட்டே ஹௌதை நோக்கி ஒலு செய்றதுக்காக போன போது பள்ளில இருந்த போர்ட்ல சாக்பீஸால் எழுதியிருந்த ஹதீஸ் சலீமின் கண்களில் பட்டது
'உங்களில் எவர் பெரியவர் மீது மரியாதையும் சிறியவர் மீது அன்பும் பாராட்டவில்லை அவர் என்னை சேர்ந்தவர் அல்ல.. - நபிமொழி"

Monday, November 23, 2009
பொட்டி சோறு - 1 (சிறு கதை - இரண்டு பகுதிகளாக வரும்)
பெரிய ஹொத்துவா பள்ளில மஹ்ரிபு தொழுவைய முடிச்சிட்டு வெளியே வந்து மனாராக்கு கீழே சாஞ்சு ஒக்காருரது தான் சலீமுக்கு வழக்கம். பருவே இல்லாத பளிங்கு முகம் அவனுடையது. தலையில அஜ்மீர் தொப்பி. வெள்ளை கைலி, ஊதா கலர்ல பிளேய்ன் சட்டை சகிதமாக மருவண்டி உடுற ராவண்ணக்கி ஒக்காந்திருக்கிற மாப்பிள்ளை மாதிரி உக்காந்திருந்தான்
அவன நாகூர்காரங்க பாத்தா 'வெளியூரா?..' ன்னு கேப்பாஹா..ஏன்னா வெளி தெருவு பழக்கம் அதிகமில்ல.. ஒரே ஒரு கூட்டாளி நவாபுன்னு பேரு.
வெளியூர் காரங்க பாத்தா நாகூரான்னு கேப்பாஹா.. மடிப்பு கலையாம கைலி உடுத்துர அழகும் ஒரு காரணம்.
தாழிச்ச சோறின் வாசம் காத்துல கலந்து வந்து பசியை கெளப்பி விட்டது சலீமுக்கு. தர்ஹால எப்போதும் யாரு பேர்லயாவது பாத்திஹா ஓதி சோறு கொடுத்துகிட்டே தான் இருப்பாஹா. ஒண்ணு தர்ஹாலயே சோறு ஆக்கி போடுவாஹா. இல்ல தர்ஹாக்கு வர்ர பக்தர்கள் யாராவது சோறு ஆக்கி போடுவாஹால்வோ. வருஷம் பூரா இப்படி தான், சோத்து மழை தான் பெய்யும்.
சோறை பொட்டில போட்டு பவுந்துகிட்டு இருந்தாஹா. அதுக்கு பொட்டி சோறுன்னு அல்லது தர்ஹா சோறுன்னு பேரு.
சின்ன புள்ளைல்வோலேந்து பெரிய மனுஷர் வரைக்கும் பெரும் கூட்டம். நான் நீன்னு கையை நீட்டிகிட்டு முண்டியடிச்சிக்கிட்டு நிக்க கூகூன்னு சத்தத்துக்கு நடுவே அந்த கூட்டத்துலேயே சின்னதா இருந்த அந்த சிறுமியை கிட்டேயே நெருங்க வுடாம தடுத்து கொண்டிருந்தது அந்த கூட்டம்.
அந்த பொட்டி சோறு பசியும் பக்தியும் சம்மந்தப்பட்டது, அதை தர்ஹா சோறு என்பார்கள். அதே சோறை அதே பண்டாரி வச்சு அதே பதத்துக்கு எடுத்து பார்த்தாலும் தர்ஹா சோத்து வாசத்துல பாதி வாசம் கூட வராது. எல்லா ஊருக்கும் மண் வாசனை என்றால், நாகூர்ல இந்த சோத்து வாசனை தான்.
'ஏம்மா.. நீ தான் மொதோவே வாங்கிட்டீல்ல..' - ஒரு சிறுமியை தடுத்து நிறுத்தினார் தர்ஹாவில் பணிபுரியும் ஒருவர்.
'இல்ல.. நான் வாங்கவே இல்ல..' என்றதும் 'சரி.. சரி.. இந்த கூட்டத்துல எங்கேத்து கெடைக்கிறது..' - அவர் வாய் முகூர்த்தம் சொன்ன மாதிரியே மொதோலேந்து டிரை பண்ணிக்கிட்டிருந்த அந்த சிறுமிக்கு பொட்டி சோறு கிடைக்கவேயில்லை.
தூரத்திலிருந்து சலீம் இதை கவனித்து கொண்டே இருந்தான். அந்த சிறுமியின் முகம் டிசம்பர் மாத மேகமாய் மாறியிருந்தது. சலீம் இருக்கும் திசையை நோக்கி அவள் நடந்து வந்தாள். அவன் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு சைடுல இருந்த திண்ணைல இருந்த ஒரு பொம்பள பக்கத்துல போய் உக்காந்தாள். கண்ணெல்லாம் கலங்கி இந்தோ இப்ப வந்துடுவேன் என்பது போல தயாரா ஒட்டுல நிண்டு கொண்டிருந்தது.
படுத்திருந்த அந்த பெண் எழுந்தார், 'ஏன்ம்மா..? என்னாச்சு..?..' ன்னு கேட்டார்
அந்த பெண் அந்த சிறுமிட தாயார இருக்கணும்னு தோன்றியது சலீமுக்கு.
அந்த சிறுமி பதில் ஏதும் சொல்லாமல் போகவே, 'பசிக்குதா..?... சாப்பிடுறியா?..' என்றவர், ஒரு பொட்டணத்தை பிரித்து அதிலிருந்த கொத்து புரோட்டாவை காட்டி, 'இந்தா இத சாப்பிடு..?' என்றார்
'வேண்டாம்..' தலையை ஆட்டி மறுத்தாள் அந்த சிறுமி
'ஏன்ம்மா..?' - பொட்டண கையோடு அந்த தாயார் கேட்டார்
'எனக்கு அந்த சோறு தான் வேண்டும்..' என்று கொஞ்சம் தள்ளி ஒக்காந்து பொட்டி சோத்துல எல்லா கோவத்தையும் காட்டிக் கொண்டிருந்த அந்த கூட்டத்தை கைகாட்ட.. அந்த அம்மா அந்த கூட்டத்தை திரும்பி பார்த்ததை தொடர்ந்து சலீமும் அந்த கூட்டத்தை ஒரு முறை பார்த்தான், அந்த சோத்தை பற்றி பசியும் பக்தியும் கலந்தது என்றேனல்லவா, இந்த கூட்டத்துக்கு பசி மட்டுமே காரணம் என்பது போல் தோன்றியது சலீமுக்கு - சலீம் திரும்ப அந்த சிறுமியிடமே தன் பார்வையை திருப்பினான். அவர்கள் பேசிக் கொள்வது நன்றாக கேட்டது அவனுக்கு.
அந்த அம்மாவுக்கு புரிந்து விட்டது, 'அல்லாஹ்வே, சோறு முடிஞ்சிருக்கும், நாளைக்கு சொல்லி வச்சு வாங்கி தர்ரேன்.. இப்ப இத சாப்பிடு..' என்றார்
பிடிவாதம் எதிர்வாதம் செய்தது, 'முடியாது, எனக்கு இப்ப தான் வேணும்..'
அந்த அம்மா எவ்வளவோ சொல்லி பார்க்கிறார், அந்த சிறுமி கேட்டா தானே, ஆனால் இத்தனைக்கும் அந்த அம்மா கொஞ்சம் கூட கோவமே படலை. பொறுமையாவே சொல்லிகிட்டு இந்தாங்க.
சலீம் எழுந்தான், மெதுவாக நகர்ந்து அந்த சிறுமியிடத்தில் வந்தான், இருவரும் விவாதத்தை நிறுத்தி 'இது யாரு?' என்று அதிசயமாக பார்த்தார்கள்,
அந்த அம்மா, 'என்னா தம்பி?' என்றார், தன் புடவை தலைப்பை எல்லாம் சரியாக இருந்தாலும் இன்னமும் சரி செய்து கொண்டு,
சலீம் மெதுவா பேச ஆரம்பித்தான், 'நான் அப்போலேந்து பாத்துகிட்டு தான் இருந்தேன், இந்த புள்ள கூட்டத்துல நிண்டது, எல்லாம்.. நான் வேண்ணா வாங்கிட்டு வந்து தர்ரேன்..' என்றான்
'அதெல்லாம் வேணாம் தம்பி, இவ இப்படி தான்..' என்றார் அந்த அம்மா
'நானும் வர்ரேன்.. எனக்கு வாங்கி தாங்க..' என்றாள் அந்த சிறுமி
சலீம் அந்த அம்மாவிடம், 'ஒண்ணும் பெரச்சனை இல்லம்மா.. நான் போய் வாங்கிட்டு வர்ரேன்..' என்றவன் அந்த சிறுமியிடம், 'நீ வர வாணா.. இங்கேயே இரு..' என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.
சலீம் நேராக தனக்கு தெரிந்த தாவுது பாயிடம் போய் - தாவுது பாய் தான் பொட்டி சோறு பவுந்துகிட்டு இருந்தவர் - 'எங்க வூட்டுக்கு சோறு போயிடுச்சா..? - இருந்தா அத கொடுங்க.. நா கொடுத்துடறேன்.' என்றான்.
தர்ஹாலேந்து செல வூடுவோல்வோக்கு இந்த மாதிரி பொட்டி சோறு போவது உண்டு, தாவுது சொன்னார், 'உங்க வூட்டுக்கு கொடுத்து வுட்டாச்சு.. இப்ப தான் நாஜிம் கொண்டு போனான்..' என்றார்.
'வேற எதுவும் பொட்டி இருக்கா..? ஒரே ஒரு பொட்டி தேவைப்படுது..' என்றான்
அவர் பழைய தரோகா அறை உள்ளே போய் பார்த்துட்டு வந்து 'கொஞ்சம் முன்னாடி சொல்ல கூடாது தம்பி, எல்லாம் முடிஞ்சு போச்சு, என்னட தான் இக்கிது.. அத வேண்ட தரவா?..'
'இல்லல்ல வேணா.. பரவாயில்ல..' என்று எச்சில் விழுங்கி 'அல்லாஹ்வே..' என்று திரும்பியவன் காலை இடிச்சிகிட்டு பக்கத்துல நிண்டு கொண்டிருந்த அந்த சிறுமியை பார்த்து திடுக்கிட்டான், பயந்து போய், 'அல்லா வச்சு காப்பாத்த..' என்று தனக்கு தானே சொல்லி நெஞ்சுல ஊதிக் கொண்டு, 'ஏன்ம்மா.. இப்படியா வந்து காலுகிட்ட பின்னுறது..?'
"பொட்டி சோறு இல்லையா..?'- என்று கேட்டாள்
'ஏன் இல்லை..? - இருக்கு இருக்கு, சரி நான் என்னா செய்றேன்.. இப்ப எங்க வூட்டுக்கு போய் பொட்டி சோற எடுத்துகிட்டு வர்ரேன்.. நீ இங்கேயே ம்மா கிட்டே இரு..' என்றான்
'நானும் வர்ரேன்..' அடம் பிடித்தாள்
'வாணா.. வாணா... ம்மா ஏசுவாஹா..' என்று நெசமாவே பயந்தான் சலீம்
'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல.. நான் சொல்லிட்டேன்.' உறுதிபட சொன்னாள் அந்த சிறுமி
செத்த நேரம் அப்டியே யோசிச்சிட்டு 'சரி வா..' ன்னு பெரிய ஹொத்துவா பள்ளில பூந்தான், அங்கே மக்ரிப் தொழுகையை ஜமாத்தோடு குறிப்பிட்ட நேரத்துக்கு தொழுவதை தவற விட்டவர்கள் இன்னொரு ஜமாத் நடத்திக் கொண்டிருக்க ரெண்டு பேர் ஒலு செஞ்சுட்டு ஓடிப் போய் கரெக்டா ருகுவில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.
செருப்பை எடுத்துகிட்டு தெரு வாசலுக்கு போற இன்னொரு கதவு வழியா படில இறங்கி சின்ன சாப்பிங் காம்ப்ளாகஸை கடந்து அலங்கார வாசலுக்கு வெளியே வந்து செருப்பை கீழே போட்டான், செருப்பை கால்ல மாட்டிகிட்டு தர்ஹா பக்கம் திரும்பி சலாம் சொல்லிட்டு நடந்தான். அந்த சிறுமி பின் தொடர்ந்தாள்.
இசை முரசு தனது சிங்கக் குரலில், 'அருள் மழை.. ' பொழிய ஒரு கடையில் ரஹ்மானிடம் (இறைவனிடம்) வேண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு கடையில் 'சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே..' என்று சிந்திக்க தூண்டிக் கொண்டுமிருந்தார்.
அந்த கடலை கடையில் கடலை போட்டுக் கொண்டிருந்த - வாயில் தான் - நவாப் சலீமை பார்த்து விட்டு ஊருக்கே கேப்பது போல் கத்தினான், 'சலீமு.. நில்லுங்கணி..'ன்னு - நவாபும் சலீம் ஒன்றாக படித்தவர்கள். சலீமின் ஒரே நண்பன் இந்த நவாப் தான். நவாபுக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் கண்டபடி கண்ட எடத்துல எச்சி துப்புவது.
குரான் ஷரீஃபை ராகமாக ஓதுபவர்களை 'காரி' என்று அழைப்பதுண்டு, சலீம் அப்படி தான் பிராமாதமாக ராகமாக ஓதுவான். அவன் ஒரு காரி. அதனால் நாகூர் பார்ட்டிகள் சலீமை 'காரி' என்று மரியாதையாக அழைப்பதோடு நவாபை 'துப்பி' என்று சொல்வதுமுண்டு. அதாவது இப்படி சொல்வார்கள், 'சலீம் காரி.. நவாபு துப்பி'
சலீம் நின்று விட்டான், நவாப் சலீமுடன் இருந்த அந்த சிறுமியை பார்த்த ஒடனே அவன் சொல்ல வந்த சேதியை மறந்து போனான், 'யாருங்கணி இது..? வூட்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கா..?' என்றான்
'இல்ல.. இல்ல' என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னான், 'சரி, பொட்டி சோறு இல்லாகட்டி என்னா..? நான் வந்து கடைல பராட்டா வாங்கி தர்ரேன், ஒக்கேயா?' என்று நவாபு கேட்டான்
சிறுமி வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினாள்
'பிரியாணி..' என்றான்
'எனக்கு அந்த சோறு தான் வேணும்..' என்றாள்
சலீம் நவாபுடன் 'அப்புறம் பார்ப்போம்னு' சொல்லிட்டு வூட்டுக்கு வந்தான்.
வூடு பூட்டி கிடந்தது.

Wednesday, November 18, 2009
Tuesday, November 17, 2009
ஜப்பானியர்கள் - புதுமை பித்தர்கள்
நான் இதுவரை ஜப்பானுக்கும் மட்டுமல்ல, இங்கே சிங்கையில் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஜப்பானீஸ் கார்டனுக்கு கூட போனதில்லை.
நாம ஏதோ உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலமாக எம்.ஜி.ஆரோடு ஜப்பானை சுற்றி பார்த்ததுண்டு. 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்' என்ற அழகிய பாடல் நினைவிலிருந்து நீங்காதவை.
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணி, கோவை சரளா, சித்ரா லட்சுமணன் அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை.
அப்புறம் கிருஷ்ணன் வந்தான் எனும் படத்தில் தேங்காய் சீனிவாசன் ஜப்பான் பாஷை பேசுவார்
விவேக் ஒரு படத்தில் ஜப்பான் பாஷையில் ஒரு பாடலே பாடுவார்
ஜப்பான் என்றாலே எலக்ட்ரானிக்ஸ் சாமான்கள், சோனி, வாகனங்கள் டொயோட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரலாம்
எதிலும் புதுமை, வித்தியாசம் என்று வாழ்பவர்கள்.
அவர்களின் புதுமை ஆர்வம் விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை போலும்
புதுமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா!
சிரிப்பதற்கு மட்டுமே!

புதுமை,
விளையாட்டு,
ஜப்பான்
Friday, November 13, 2009
ஜட்ஜப்பா - பகுதி 2
ஜட்ஜ் அப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்
நாடோடிகள் படத்தில் சசிகுமார் வரலாறு பாடத்தின் பெருமையை அப்பா பேரு அப்பாவோட அப்பா பேரு அப்பாவோட அப்பாவோட அப்பா பேரு ... என்று கேட்டு அழகாக விளக்கம் சொல்லுவார், அவர் கொடுத்த தைரியத்தில் எங்கள் குடும்ப வரலாற்றையும் இங்கே எழுதிட விழைகிறேன்.
குலாம் மெய்தீன் - இவர் ஒரு பிஸினஸ் மேக்னட் - பிறந்தது குன்னூர், ஊட்டி அந்த பக்கம் - வசித்தது நாகூர் - துணிமணி (துணி தான்) வியாபாரம் செய்தது மற்றும் திருமணம் செய்தது தாய்லாந்த் நாட்டில் - ஆமாம், வியாபார நிமித்தமாக அந்த காலத்தில் சியாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்த் நாட்டிற்கு சென்ற போது அங்கே யாயி என்ற சீயத்து பெண்ணை (தாய்லாந்த் நாட்டு பெண்ணை) மணமுடித்ததோடு 2 பெண் பிள்ளைகள் 5 ஆண் பிள்ளைகள் என அந்த காலத்து நடைமுறையில் குறை வைக்காமல் நிறைவாய் பெற்றெடுத்தார்.
அவர் அனைத்து பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நாகூர் வந்த போது தனக்கு இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் தனது உறவினரான அப்துல் அஜீஸ் என்பவரிடம் (அப்போது அவர் தையல் கடை வைத்திருந்தார்) எல்லா சொத்துக்களையும், பிள்ளைகளையும் அமானிதமாக கையை பிடித்து கொடுத்து விட்டு கண்ணை மூடினார்.
சொத்துக்கள், குலாமின் பிள்ளைகள் என்பது மட்டுமல்லாமல் அப்துல் அஜீஸுக்கு 3 பிள்ளைகள், அப்துல் அஜீஸின் சகோதரியின் பிள்ளைகள் என ஒரு பெரும் தோப்பே அந்த தனி மரத்தின் முன் பாதுகாவலில் வைக்கப்பட்டது.
அப்துல் அஜீஸ் வியாபாரத்தை சிறு துள்ளியிலிருந்து ஆரம்பித்து பெரு வெள்ளமாக்கினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். தன் பிள்ளைகளாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அவர்கள் வேலையை அவர்களே தான் பார்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி வீட்டு வேலைகளையும் உதாரணமாக வீடு வாசல் பெருக்கி சுத்தம் செய்வதிலிருந்து கொள்ளையில் இருக்கும் மாட்டு கொட்டகையை தொடைச்சு சுத்தம் செய்வது வரை இப்படி எல்லா வேலையையும் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.
மேலும் அரபு பாடத்தில் சரியாக ஓதா விட்டால் சாவி கொத்தால் அடி கொடுப்பார். ஒரு முறை ஜட்ஜ் அப்பா தமிழ் பாடத்தில் 98 மார்க் வாங்கியதற்கு அஜீஸ் அவர்கள், "மத்த பாடமா இருந்தாலும் பரவாயில்லை, நம்ம தாய் மொழி தமிழ்ல்ல போய் இப்படி 2 மார்க் கொறைச்சி வாங்கிட்டு வந்திருக்கியே.." என்று கேட்டிருக்கிறார்கள். ஜட்ஜ் அப்பா அவர்கள் தான் சரியாக எழுதியதாகவும் வாத்தியார் தமிழுக்கு 100க்கு 100 மார்க் போட மாட்டார்களாம் என்று எடுத்து விளக்கினார்கள்.
குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் படிப்பு (அதாவது ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை), அதன் பிறகு பிழைப்பு. அதாவது தாய்லாந்த் நாட்டில் பேங்காக் நகரில் வாட்கோ லாவின்ச் (Watco Lavinch) என்ற முக்கிய வியாபார இடத்தில் அமைந்திருந்த "நாகூர் ஸ்டோர்ஸ்" என்ற கடை ஒன்று இருந்தது. அந்த கடையில் வேலை பார்க்க சென்று விட வேண்டும். அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் வேலை இருக்கும்.
இந்த சூழ்நிலையில் தான் ஜட்ஜ் அப்பா வளர்கிறார்கள். மியா தெரு முனையில் இருந்த நாகூர் முஸ்லீம் பாட சாலையில் படிக்க போவது, பள்ளிகூடம் விட்டு வந்தவுடன் மாட்டை குளிப்பாட்டுவது, கடைகளுக்கு போய் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வருவது, ஒரு நிமிஷம் ஓய்வு இருக்காது.
ஜட்ஜ் அப்பாவுக்கு அப்போதே தெரியும் நம்மள இன்னும் கொஞ்ச நாள்ல கப்பலேத்தி சீயத்துக்கு அனுப்பி விட்டுடுவாஹாண்டு. அவர்களின் தம்பி ஜக்காப்பா கூட (ஜக்காப்பா அவர்கள் வேறு யாருமல்ல, அவர்கள் எழுத்துலகில் பிரபலமான (இவரின் கதையை அப்படியே நம் பேர் போட்டு பத்திரிக்கைகளுக்கு கொடுத்தாலும் பிரபலாமாகலாம்), நகைச்சுவையில் சோகம், சோகத்தில் நகைச்சுவை, இப்படி கலந்து தனது அனுபவங்களை எழுதும் எழுத்தாளரும் ஓவியருமான ஆபிதீன் நானா அவர்களின் மாமனார், அதாவது அன்னாரின் மகளை தான் ஆபிதீன் நானா அவர்கள் நிகாஹ் செய்துள்ளார், ஆக ஒரு முறையில் ஜட்ஜ் அப்பாவின் மருமகனும் ஆவார் ) அப்படி தான் நாகூர் ஸ்டோர்ஸின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ள சீயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜக்காப்பா தான் அந்த கடையின் மேனேஜர்.
ஆனால் ஜட்ஜ் அப்பாவுக்கு அப்படி சீயத்துக்கு போய் வேலை செய்யணும் என்ற ஆர்வம் இல்லை. ஒரு நிமிஷம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இருந்தாலும் அந்த வேலையையும் பார்த்துக் கொண்டு கூடவே படித்துக் கொண்டும் (எப்படி தான் முடிந்ததோ?) - அதுவும் படிக்கிறது என்றால் சும்மா ஏனோ தானோ படிப்பல்ல, ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்பிற்கு போகாமாலே மூன்றாவது வகுப்பிற்கும் மூன்றாவது வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பிற்கு போகாமலே ஐந்தாவது வகுப்பிற்கு டபுள் புரோமஷனையே டபுள் டைம்ஸ் (இரண்டு முறை) வாங்கி படித்தார்கள். (ஹேட்ரிக் டபுள் பிரமோஷன் வாங்க வேண்டியது ஒரு சில காரணங்களால் அவர்களே வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்)
இப்படி படிப்பில் அவர்கள் காட்டிய அதீத ஆர்வம் அவர்களின் மாமாவான அப்துல் அஜீஸை ஜட்ஜ் அப்பாவை சீயத்துக்கு (பேங்காக் நாடு) அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட வைத்தது.
--------------------------------------------------------------------------
அப்புறம் அவர்களின் சிறு பிராயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை பற்றி சொல்ல வேண்டும்.
தொடரும்

நாகூர் ஸ்டோர் (பின்புறம் போர்டில் தெரிகிறது) , பேங்காக் நகரம் (போட்டோவில் கம்பி கேட்டை ஒட்டி நிற்பவர்கள் எனது மாமனார் ஹாஜா மொய்தீன் அவர்கள்)
இந்த சூழ்நிலையில் தான் ஜட்ஜ் அப்பா வளர்கிறார்கள். மியா தெரு முனையில் இருந்த நாகூர் முஸ்லீம் பாட சாலையில் படிக்க போவது, பள்ளிகூடம் விட்டு வந்தவுடன் மாட்டை குளிப்பாட்டுவது, கடைகளுக்கு போய் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வருவது, ஒரு நிமிஷம் ஓய்வு இருக்காது.
ஜட்ஜ் அப்பாவுக்கு அப்போதே தெரியும் நம்மள இன்னும் கொஞ்ச நாள்ல கப்பலேத்தி சீயத்துக்கு அனுப்பி விட்டுடுவாஹாண்டு. அவர்களின் தம்பி ஜக்காப்பா கூட (ஜக்காப்பா அவர்கள் வேறு யாருமல்ல, அவர்கள் எழுத்துலகில் பிரபலமான (இவரின் கதையை அப்படியே நம் பேர் போட்டு பத்திரிக்கைகளுக்கு கொடுத்தாலும் பிரபலாமாகலாம்), நகைச்சுவையில் சோகம், சோகத்தில் நகைச்சுவை, இப்படி கலந்து தனது அனுபவங்களை எழுதும் எழுத்தாளரும் ஓவியருமான ஆபிதீன் நானா அவர்களின் மாமனார், அதாவது அன்னாரின் மகளை தான் ஆபிதீன் நானா அவர்கள் நிகாஹ் செய்துள்ளார், ஆக ஒரு முறையில் ஜட்ஜ் அப்பாவின் மருமகனும் ஆவார் ) அப்படி தான் நாகூர் ஸ்டோர்ஸின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ள சீயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜக்காப்பா தான் அந்த கடையின் மேனேஜர்.
பேங்காக்
(மேலே உள்ள படத்தில்: இடதிலிருந்து இரண்டாவது: சேத்தப்பா (என் தாயாரின் தந்தை), கடைசியில் தொப்பி போட்டு இருப்பது ஜக்காப்பா (ஜட்ஜப்பாவின் தம்பியும் ஆபிதீன் நானாவின் மாமானாருமாவார்))
(கீழே உள்ள படத்தில் முதலாவது: முஹம்மது தம்பி (எனது தந்தையின் தந்தை), கடைசியில் ஹாஜா மொய்தீன் (எனது தாயாரின் நானாவும், எனது மாமனாரருமாவார்))
ஆனால் ஜட்ஜ் அப்பாவுக்கு அப்படி சீயத்துக்கு போய் வேலை செய்யணும் என்ற ஆர்வம் இல்லை. ஒரு நிமிஷம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இருந்தாலும் அந்த வேலையையும் பார்த்துக் கொண்டு கூடவே படித்துக் கொண்டும் (எப்படி தான் முடிந்ததோ?) - அதுவும் படிக்கிறது என்றால் சும்மா ஏனோ தானோ படிப்பல்ல, ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்பிற்கு போகாமாலே மூன்றாவது வகுப்பிற்கும் மூன்றாவது வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பிற்கு போகாமலே ஐந்தாவது வகுப்பிற்கு டபுள் புரோமஷனையே டபுள் டைம்ஸ் (இரண்டு முறை) வாங்கி படித்தார்கள். (ஹேட்ரிக் டபுள் பிரமோஷன் வாங்க வேண்டியது ஒரு சில காரணங்களால் அவர்களே வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்)
இப்படி படிப்பில் அவர்கள் காட்டிய அதீத ஆர்வம் அவர்களின் மாமாவான அப்துல் அஜீஸை ஜட்ஜ் அப்பாவை சீயத்துக்கு (பேங்காக் நாடு) அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட வைத்தது.
--------------------------------------------------------------------------
அப்புறம் அவர்களின் சிறு பிராயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை பற்றி சொல்ல வேண்டும்.
தொடரும்
Tuesday, November 10, 2009
கைத்தொலைபேசியை பயன்படுத்துவது ஆபத்தானதா?
இன்றைக்கு ஒரு மெயிலை படித்தேன், அதில் கைத்தொலைபேசியை (ஹேண்ட் போன் அல்லது செல்லுலர் போன் அல்லது செல்) பேண்ட்டில் மாட்டிக் கொண்டு போனால் இடுப்பு எலும்பு நொறுங்கி விடும் என்று துருக்கி நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். 150 பேர்களிடம் நடந்த சோதனையில் 122 பேர்களின் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் அந்த மெயில் சொன்னது.
இது போல் பல சுவாரஸ்ய மெயில்களும் ஹேண்ட் போனை பற்றி வந்ததுண்டு. இரண்டு பக்கமும் ஹேண்ட் போனை வைத்து முட்டை பொறிப்பது போல் எல்லாம் வந்து நம்மை பயமுறுத்தியதுண்டு. அதாவது நம்முடைய காதும் அதோடு சேர்ந்து மூளையும் சேர்த்து சமைக்கப்பட்டு விடுமோ என்று நினைத்து பார்த்தது உண்டு.
ஆனால் நினைத்து தான் பார்த்தோமே தவிர, அதற்காக கலங்கியதெல்லாம் கிடையாது, அது உண்மையாக இருக்குமோ என்று கவலையாவது பட்டிருப்போமா என்றால் அதுவும் கிடையாது என்றே நினைக்கிறேன்.
சரி ஒரு வேலை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட யாரும் ஹேண்ட் போன் பேசுவதை நிறுத்த போவதில்லை என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் உடம்புல இடுப்பு எலும்பு எப்படி ஒரு பாகமோ அது போலவே ஹேண்ட் போனும் ஒரு பாகமாகவே ஆகி விட்டது. yes, hand phone is not our belonging, it is part of our body.
சிகரெட் குடிச்சா கேன்சர் வரும்னு சொன்னாங்க, அதுக்காக சிகரெட் குடிக்கிறதை யாரும் நிறுத்திட்டாங்களா, என்ன? - அதுவும் தவிர சிகரெட் கம்பெனி ஆரம்பித்து நஷ்டமா போன முதலாளி யாருமே இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
சிகரெட் அட்டை பெட்டியில் சிகரெட் கம்பெனி காரர்கள் போடுவது போல் "சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என்று ஹேண்ட் போன் கம்பெனி காரர்கள் "ஹேண்ட் போன் பயன்படுத்துவது தீங்கானது" என்று போடுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில் இது வரை ஹேண்ட் போனால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்கள் என்ற ஆதாரம் இல்லை (there is no conclusive evidence for adverse effects) என்று உலக சுகாதார மையம் (WHO) உள்பட அனைவருமே சொல்லுகின்றனர்.
(long long ago so long ago no body can say how long ago) சிகரெட் கண்டுபிடிக்கப்பட்ட போது கூட இத்தனை பேர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஆதாரம் இருந்திருக்குமா? - யோசிக்க வேண்டிய விஷயம். விஞ்ஞானிகள் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மாட்டார்கள் (நம்ம தௌஹீது வாதிகள் அல்லது வஹ்ஹாபிகளை போல என்று இங்கே யாரும் அநாவசியமாக ஒப்பிட வேண்டாம்)
ஹேண்ட் போனை பற்றி தெரிந்து கொள்வதற்கு கதிர்வீச்சு (ரேடியேசன்) பற்றி தெரிந்து கொள்வது நல்லது.
ரேடியேசன் இரண்டு வகைப்படும்.
1. (ionising radiation - alpha, beta, gamma, neutron and x-ray)
அயனைசிங் ரேடியேசன் (ஆல்பா, பீட்டா, காம்மா, நியுட்ரான் மற்றும் எக்ஸ் ரே)
2. (non-ionising radiation - ultraviolet, visible, infrared, microwave/rf, laser, ultrasound)
நான் - அயனைசிங் ரேடியேசன் (அல்ட்ராவயலட், விசிபிள், இன்ப்ராரெட், மைக்ரோ வேவ் அல்லது ஆர்.எஃப்., லேசர், அல்ட்ரா சவுண்ட் ரேடியேசன்)
இதில் அயனைசிங் ரேடியேசன் மிகவும் ஆபத்தானது. உதாரணமாக எக்ஸ்ரே வை எடுத்து கொள்வோம். தொழிற்சாலைகளில் பல பயன்பாடுகளுக்காக இதனை பயன்படுத்துகிறோம். உதாரணமாக, வெல்டிங் வைத்த பிறகு உள்ளே தெறிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு இதனை பயன்படுத்துகிறோம்.
இதனை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது, இதன் டோஸேஜை சிவர்ட் என்ற அளவில் நாம் அளக்கிறோம். இங்கே சிங்கப்பூரில் ஒரு ஆண்டுக்கு ரேடியேசனில் வேலை பார்க்கும் ஊழியர்கள் (National Environmental Agency - NEA Regulations)சட்டப்படி 20 மில்லி சிவர்ட்டுக்கு மேல் டோஸேஜை உடம்பில் பெறக் கூடாது. இதுவே அனுமதிக்கப்பட்ட அளவு.
அயனைசிங் ரேடியேசன் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது உடனடி பாதிப்பு (acute effect), அல்லது நீண்ட நாட்கள் கழித்து தெரியும் பாதிப்பு (chronic effect) மற்றும் தலைமுறை சார்ந்த பாதிப்பு (genetic effect) ஏற்படலாம். கேன்சர் கூட வரலாம்.
ஆனால் நான் அயனைசிங் ரேடியேசன் என்பது தோல் எறிச்சல் (skin burn) அல்லது கண் பாதிப்பு (eye injury), இந்த இரண்டு பாதிப்புகளை தவிர வேறு எந்த பாதிப்புகளும் இருப்பதாக அறியவில்லை. ஆனால் நான் - அயனைசிங் ரேடியேசன் வகையை சேர்ந்த அல்ட்ராவயலட் எனும் ரேடியேசன் தோல் புற்று நோயை உருவாக்கலாம்.
இப்போது ஹேண்ட் போன் மேட்டருக்கு வருவோம். அது மைக்ரோவேவ் வகையை சேர்ந்தது. இத்தகைய ரேடியேசன் கேன்சரை உருவாக்குவது என்பதெல்லாம் நம்ப முடியாத அல்லது நிரூபிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஹேண்ட் போனின் பவர் அவுட் புட் 6.3 மில்லி வாட்ஸிலிருந்து 600 மில்லி வாட்ஸ் வரை. இந்த பவரை வைத்துக் கொண்டு முட்டையை எல்லாம் வேக வைப்பது சாத்தியமே இல்லை என்று தான் நான் அறிகிறேன்.
என்றாலும் தலைவலி, உறக்கமின்மை, மறதி, சோர்வு போன்ற பாதிப்புகள் வரலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
SAR (Specific Absorption Rate) - என்று சொல்கிறார்களே அது என்ன என்றும் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது 'சார்' என்றால் நம் உடலில் எவ்வளவு மைக்ரோவேவ் அல்லது ஆர்.எஃப் ரேடியேசன் உள்ளே செல்கின்றது என்பதை கணக்கிடும் அளவு.
'சார்' அளவு எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவுக்கு நல்லது என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக 2 க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று the International Commission on Non-Ionising Radiation Protection (ICNIRP) பரிந்துரை செய்துள்ளது.
இது போக, என் நண்பர் ஒருவர் இங்குள்ள மருத்துவமனைக்கு அவரின் தாயாரை காண சென்றார். அங்கே அவர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். அந்த மருத்துவமனையில் போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்தார்கள். அங்கே அவரின் தாயாருக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவருக்கு போன் மூலம் முக்கிய அழைப்பு வந்தது. அவர் மெதுவாக நகர்ந்து போன் பேச போனார். இங்கே தண்ணீர் இறங்குவது திடீரென்று நின்று விட்டது. நர்ஸ் வந்து பார்த்து விட்டு, "இங்கே போன் பேசக் கூடாது என்று போட்டிருக்கோம்ல.." என்று சொன்னதும் அவர் ஆடிப் போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

Thursday, October 22, 2009
Sunday, October 18, 2009
ஆன்ந்தி - (புயல்) - பழைய இந்தி பட விமர்சனம்
அரசியலுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இது மத்த எல்லா மாநிலத்தை விட தமிழ்நாட்டிற்கு ரொம்பவே பொருந்தும். பாபா என்ற சுமாராக கூட இல்லாத படத்தை திரையிட விடாது பொட்டியுடன் பொட்டியை கட்டியது தமிழக அரசியலின் அல்லது சினிமாவின் வரலாற்று சிறப்புகளில் ஒன்று.
இதே போல் குல்சார் சாப் அவர்கள் இயக்கிய ஆன்ந்தி என்ற படத்தை அன்றைக்கு (1975 வாக்கில்) வெளியிட விடாமல் தடுத்து நிறுத்தியதும் அரசியல் செல்வாக்கு தான், அது மட்டுமல்ல அந்த படத்தில் பாடிய கிஷோர் குமாரின் பாடல்களை இரண்டு வாரத்துக்கு ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாது தடை செய்திருந்தார்கள் என்றும் படித்ததுண்டு.
அவ்வாறு ஆன்ந்தி - புயல் என்று தமிழில் அர்த்தம் - படத்தை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்ததற்கு காரணம் என்ன என்றால், படத்தின் கதை இந்திரா காந்தி அவர்களின் கதையை ஒத்து இருந்தது தான். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு படம் வெளியாக முடிந்தது.
குல்சார் சாப் கதை சொல்லும் அழகே தனி. பிளேஷ் பேக் காட்சிகள் இல்லாமல் அவரால் படமே எடுக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் படங்களில் பிளேஷ் பேக் காட்சிகள் நிறைந்து இருக்கும். ஒரே தடவையில் பிளேஷ் பேக் காட்சிகள் வந்து முடிந்து விடாது, இடையிடையே பிளேஷ் பேக் காட்சிகள் வந்தவண்ணம் இருக்கும். குல்சார் சாபின் படங்களான பரீச்சே, கோஷிஷ், இஜாஜத், அங்கூர், நம்கீன் இன்னும் அத்தனை கவிதை(யான படங்க)ளும் இதற்கு சாட்சி, அதற்கு, இந்த ஆன்ந்தியும் விதிவிலக்கல்ல..
ஆர்த்தி தேவி (சுசித்ரா சென் - இவர் 12B படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன் சென் என்ற நடிகையின் தாயார் மற்றும் தாஜ்மஹால் படநாயகி ரியா சென், ரய்மா சென்ஆகிய நடிகைகளின் பாட்டி)என்ற சக்தி வாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் சந்திரசேன் (ஓம்சிவ்பூரி) மேடையில் காட்டமாக கேள்விகள் கேட்டு இடைதேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கும் அரசியல் நாடகம் நடத்துவதில் இருந்து படம் தொடங்குகிறது.
ஆர்த்தி தேவியை இடை தேர்தல் நடக்கும் ஊருக்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர் வந்தால் தங்குவதற்கு இருக்கும் கட்சிக்கு சொந்தமான அலுவலகம் எரிந்து சாம்பலாகிய நிலையில் அவர் தங்குவதற்கு ஹோட்டலில் வசதி செய்ய திட்டமிடுகிறார் அவரின் பிரச்சார குழு தலைவர் (ஓம்பிரகாஷ்).
ஒம்பிரகாஷ் ஹோட்டல் மேனேஜர் ஜே.கே.யை (சஞ்சீவ் குமார்) சந்தித்து தங்களுக்கு தெற்கு கிளையில் உள்ள எல்லா அறைகளையும் வேண்டும் என்று புக் செய்கிறார்.
ஜே.கேவுக்கு ஆச்சரியத்துடன், "இவ்வளவு ரூம் தேவைப்படுகிறதே அப்படி யார் வருகிறார்கள்?" என்று கேட்க, "ஆர்த்தி தேவி வருகிறார்", என்றதும் சற்று தடுமாறுகிறார்.
ஆர்த்தி தேவி ஹோட்டலில் வந்து இறங்கியவுடன் அங்கு இருக்கும் ஊதுவர்த்தி, மண் பானையில் தண்ணீர் போன்று அவருக்கு பிடித்தமான அத்தனையும் கண்டு ஆச்சர்யம் கொள்கிறார். அவருக்கு பிடித்த பூவையும் ஹோட்டல் சார்பாக பரிசாக வழங்கப்படுகிறது. எல்லாம் ஜே.கே.யின் ஏற்பாட்டின் படி தான் நடந்திருக்கின்றது.
ஆர்த்தி தேவி மகிழ்ந்து தனக்கு பிடித்தவைகளை யாரோ தெரிந்து வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்.
ஜே.கே விடம் சமையல்காரராக இருக்கு பிந்தா காக்கா (A.K.ஹங்கல்) என்பவரிடம் "நீங்கள் (ஆர்த்தி தேவியை) பார்த்தீங்களா?" என்று ஜே.கே. கேட்கிறார்
பிந்தா காக்கா, "உங்கள்ட்ட கேக்காம எப்படி போய் பாக்குறது?" என்கிறார்
"இதுல எண்ட்ட கேக்க என்ன இருக்கு? என்னய விட அதிக உரிமை உங்களுக்கு தான் இருக்கு, நீங்க ஆர்த்திய சின்ன வயசிலிருந்து தூக்கி வளர்த்திருக்கிறீங்க.. அப்புறமா பிஸியா இல்லாத நேரமா பார்த்து போய் பாருங்க" என்கிறார்
தொடர்ந்து பிந்தா காக்கா போய் பார்க்க ஆர்த்தி தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார், "நீங்கள் எப்படி இங்க..?" என்று ஆச்சர்யம் கொள்கிறார்
"நான் சாபோடு தான் இருக்கேன்.. இப்ப சாப் இந்த ஹோட்டல்ல தான் வேல பார்க்குறாங்க.." என்கிறார்
ஊதுபத்திக்கும், மண்பானைக்கும், பூக்களுக்கும் அர்த்தம் புரிந்து விடுகிறது ஆர்த்தி தேவிக்கு, "காக்கா, நான் இங்கே கொஞ்ச நாளைக்கு இருப்பேன், நீங்க அடிக்கடி வந்து பாருங்க.." என்று விடைபெறுகிறார்.
"இஸ் மோடு (சாலையில் உள்ள வளைவுகள்) ஸே ஜாதே ஹேய்ன்" - என்ற நினைவுகள் பாடலாக பின்னோக்கி ஜே.கேயின் பார்வைகளில் நகர்கின்றது.
அதாவது குழப்பமான பல வளைவுகளை உடைய சாலையில் நின்று ஆர்த்தி தேவி ஜே.கேயை நினைத்து பாடுகிறார்,
எந்த வளைவுகள் வழியாக நான் போவது?
கற்களாளான அரண்மனை அல்லது மாளிகை(கோடீஸ்வரர்கள் வசிக்குமிடம், கண்ணாடி வீடுகள் (நடுத்தர வர்க்கம் வசிக்கும் வீடுகள் என கொள்ளலாம்), பறவையின் கூடு போன்ற சிறிய வீடு (ஏழைகள் வசிப்பது)
இப்படி பல இடங்களுக்கு வழிகள் இருக்கிறது? - எந்த வழியில் சென்றாள் தன் காதலனிடம் (காதலியிடம்) தன்னை கொண்டு போய் சேர்க்கும்? என்று -
பல பேருக்கு இந்த பாட்டு பிடிக்காது என்று தான் நான் நினைக்கிறேன் ஏன்னாக்கா இது மிகவும் அருமையான கருத்தாழமிக்க பாடல் - எங்கே இப்போ உள்ள கவிஞர்களை இதே போல் எழுத சொல்லுங்களேன் பார்ப்போம்? - அவங்க "போடா போடி" என்று எழுதுவார்கள்.
பாடல் நினைவுகள் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முடிவுறுகிறது. ஜே.கே போய் கதவை திறக்கிறார். வாசலில் ஆர்த்தி தேவி. இருவரும் ஒரு கனம் திகைத்து போய் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.
இருவரும் கணவனும் மனைவி என்றும் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்றும் யூகிக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காட்சிகள் அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கவிதைகளாகவும் பதிகின்றன.
படத்தில் ஒட்டு மொத்த கதை..
ஆர்த்தி தேவி மிகவும் பிரபலமானவர்.தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகிறார். ஹோட்டலில் தங்குகிறார். ஹோட்டல் மேனேஜர் தான் தனது கணவர் என்று தெரிய வருகிறது. குழந்தைக்கு பிறகு தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் ஈடுபாடுகள் இருந்ததால் குடும்பத்தையும் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் போகிறது, இதன் காரணமாக கணவனுக்கு மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். 9 வருடம் கழித்து மறுபடியும் இந்த ஹோட்டல்ல் சந்தித்து இருக்கிறார்கள்.
ஆர்த்தி தேவி பிரபலமாக இருப்பதால் தனது தனிப்பட்ட வாழ்க்கை அரசியலுக்கு பிரச்சினையாக வரக் கூடாது என்று கருதினாலும் தனது கணவரை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து சந்திப்பது, ஒன்றாக உணவருந்துவது, வெளியே போய் வருவது என்று இருக்கிறார்.
அப்படி வெளியே முதன் முறையாக ரொம்ப நாளைக்கப்புறம் வரும் போது ஒரு பாடல் வருகிறது.
"தேரே பினா ஜிந்தகி சே கோய் சிக்வா தோ நஹி சிக்வா நஹி..
தேரே பினா ஜிந்தகி சே லேகின் ஜிந்தகி தோ நஹி ஜிந்தகி நஹி.."
- என்று வரும் அந்த பாடல்..
அந்த பாடல் காட்சியில் இருவரும் பேசிக் கொள்வது போல் வசனமும் இடம் பெறுகிறது, ஏதோ எனக்கு தெரிந்த மொழியில்.. எனக்கு தெரிந்த வரையில்..
பெண்: ரொம்ப நாளைக்கப்புறம்... வெளியே வர்ர மாதிரி ஒரு உணர்வு...
ஆண்: என்ன அது..?
பெண்: ஒரு யுகம் தாண்டி வந்த மாதிரி இருக்கு
ஆண்: ம்.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு.. (ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை காட்டி) இந்த கட்டடம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அந்த காலத்துக்கு..
பெண்: ம்.. இன்னொரு ஜென்மம் கெடைச்சு வந்த மாதிரி..இல்ல?
ஆண்: நாம் ஒண்ணு செய்வோம்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும் தெனமும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரி இருக்கும்.. (ஆர்த்தி தேவி குளிரில் நடுங்குவதை பார்த்து) ஒன் ஷால் எங்கே?
பெண்: நான் மறந்துட்டேன்
ஆண்: நீ இன்னும் மாறவே இல்லை.. இத வச்சுக்க.. (மாட்டி விடுகிறார்)
பாடல் ஆரம்பமாகிறது..
பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை
சரணம் 1:
பெண்:
நான் போய் சேர வேண்டிய இடம் உன் பாதங்களை பின்பற்றியதாக இல்லாமல் வேறு எங்கேயோ தூரமாக விலகி சென்று விட்டது
நீ என்னுடன் இருந்திருந்தால் உன்னுடன் சேர்ந்து நான் போக வேண்டிய இடங்கள் குறைவில்லாமல் இருந்திருக்கும்
வசனம்:
ஆண்: ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..? அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள்.. நீ பகல்ல பார்த்தா தான் தெளிவா தெரியும்
(எதிரே கையை நீட்டி) இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..
(வேறொரு பக்கம் கையை காட்டி)பகல்ல இங்கே.. (என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)
பெண்: ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..
ஆண்: இந்த நிலவை பாரு.. இது ராத்திரியில மட்டும் தான் வரும்.. பகல்ல வெளியே வர்ரதில்ல..
பெண்: இது தான் எப்போதும் வருதே
ஆண்: ஆமா வரும்.. ஆனா எடைல.. அமாவாசை இருக்கு.. உண்மையில.. எப்போதும் அமாவாசை வர்ர நாள்லேந்து தொடர்ந்து 15 நாளைக்கு இருட்டாவே இருக்கும்.. ஆனா இந்த தடவை அமாவாசை வந்ததிலிருந்து ரொம்ப வருஷமா வரவே இல்ல..
பெண்: (தன்னை தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு) 9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..
சரணம் 2:
பெண்:
உன்னுடைய தோளில் சாய்ந்து கொண்டு அழுது தீர்க்க வேண்டும் போலிருக்கிறது..
உன்னுடைய கண்களிலும் அழுததற்கான தடங்கள் தெரிகிறது..
சரணம் 3:
ஆண்:
நீ மட்டும் ஒரு வார்த்தை சொன்னால் இந்த நிலவு மறைந்து போகாமல் தங்கி விடும், இந்த நிலவின் இரவுகள் நீடித்து இருக்கும்..
ஆனால் அப்படி நீ சொன்னால் கூட அது இந்த ஒரு இரவுக்கு மட்டும் தான்.. தொடர்ந்து வாழ்க்கை பூராவும் இருக்குமா என்று தெரியவில்லை

- இப்படியாக முடிகிறது அந்த பாடல்
கணவன் மனைவியின் பிரிவுகளின் வலியை இவ்வளவு உணர்வு பூர்வமாக எந்த வசனங்களும் பாடல்களும் சொன்னதில்லை என்பது என்னுடைய கருத்து.
படத்தில் ஆர்த்தி தேவியின் அரசியல் எதிரிகள் ஹோட்டல் மேனேஜருடன் ஆர்த்தி தேவிக்கு உறவு என்ற ரீதியில் குழப்பம் ஏற்படுத்த பல பிரச்சினைகள் புயலாக (ஆன்ந்தி) புறப்பட்டு வருகிறது.
ஆர்த்தி தேவியின் அரசியல் வாழ்க்கை, தேர்தல் முடிவு என்னாயிற்று? கணவருடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? சிம்லாவில் படித்து கொண்டிருக்கும் தனது குழந்தையை கண்டாரா? என்பதை எல்லாம் உணர்வு பூர்வமாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.
பெர்ஃபார்மென்ஸை பொறுத்த மட்டில் இந்த படத்தில் சஞ்சீவ் குமாரும், சுசித்ரா சென்னும் நடிப்பு பாடம் நடத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். எக்ஸலண்ட்.
அவுட் ஸ்டேண்டிங்.. மாஸ்டர் பீஸ்..
இந்த படத்தில் வேறு ஏதேனும் நுண்ணரசியல்கள் இருக்கலாம், எனக்கு தெரியவில்லை, ஏனெனில் அந்த பாடத்தில் நான் நர்ஸரி தான் படித்து வருகிறேன்.
பாடல்களை பொறுத்த வரை,
1.
சலாம் கீஜியே என்ற அரசியல் கிண்டல் பாடலும் முஹம்மது ரஃபி வாய்ஸில் கேட்டு மகிழலாம்.
2.
இஸ் மோடு ஸே ஜாதே ஹேய்ன் என்ற அர்த்தமுள்ள கணவன் மனைவிக்கான பாடலும் உள்ளது
3.
தும் ஆகயிஹே நூர் ஆகயா ஹே (நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது) என்ற காதல் பாடலும் உள்ளது
4.
தேரே பினா ஜிந்தகி சே கோயி என்ற பிரிவின் வலியும் உள்ளது
கிஷோர் - லதா - ஆர்.டி.பர்மன் - குல்ஜார் சாப் சேர்ந்தால் பாடல் ஹிட் தானே
சாப்பாட்டிலிருந்து கக்கூஸ் போறது வரை புயல் வேகத்தில் அவசரமாக போய் விட்ட இந்த உலகத்திலிருந்து என்னை அமைதியான மென்மையான் உலகத்துக்கு சில நேரங்களுக்காவது அவ்வப்போது அழைத்து செல்லும் படங்களில் இந்த புயலும் - ஆன்ந்தியும் - ஒன்று என்று தான் நான் சொல்வேன்

குல்ஜார் சாப் படங்கள்,
சஞ்சீவ் குமார்
Subscribe to:
Posts (Atom)