Wednesday, May 26, 2010

ஏ ஃபார் ஆல்கஹால் - ஹராம்

1

ஒரு குடிமகன் போலீஸுக்கு டெலிபோன் செய்து அழுதிருக்கிறான், "சார், திருடன் என்னோட கார்லேந்து டேஷ் போர்ட், ஸ்டியரிங், பிரேக் பெடல் இவ்வளவு ஏன் ஆக்ஸிலேட்டரையும் விட்டு வைக்காம எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான் சார், நீங்க தான் எப்படியாவது திருடனை கண்டு பிடிச்சு என் சாமான எல்லாம் திருப்பி தரணும்.." என்றானாம்..

போலீஸ்காரர்கள் இது குறித்து கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கிய போது போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு டெலிபோன் வந்தது, எடுத்து பேசினால், கொஞ்ச நேரத்துக்கு முந்தி பேசுன அதே வாய்ஸ், 'பராவாயில்லை' இடையில் வந்த விக்கலை தொடர்ந்து 'நான் தான் தெரியாம பின் சீட்டில ஏறிட்டேன்' என்றதும் 'டொக்..'

டெலிபோன் துண்டிக்கப்பட்டு விட்டதாம்..

மதுபானம் அருந்துபவர்கள் பற்றி பரவலாக ஆங்கிலத்தில்  இணையத்தில்  புழங்கப்படும் ஜோக் இது.

இன்னொரு குடிமகன் நன்றாக குடித்து விட்டு பேருந்தில் ஏறியிருக்கிறார். பேருந்தில் ஒரு பெண்மணியின் அருகில் போய் அமர்ந்திருக்கிறார். அந்த பெண்மணி இந்த குடிமகனிடம், 'நீ குடித்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் 'ஃப்பூ' என்று ஊதி 'ஆமாம்' என்று தலையை ஆட்டியிருக்கிறான்.

உடனே அந்த பெண்மணி கோபமாக 'நிச்சயமாக சொல்கிறேன்.. நீ நரகத்திற்கு தான் செல்வாய்..' என்றார்களாம்

உடனே அந்த குடிமகன் பேருந்திலிருந்து குதித்து விட்டு, 'நல்ல வேலை சொன்னீர்கள், நான் அங்கே போகவில்லை' என்றானாம்..

குடிமகன்கள் நரகத்திற்கு செல்வது ஒருபுறமிருக்கட்டும், சொர்க்கத்தில் மது கிடைக்குமாமே? அதுவும் குரான் ஷரீஃப் சொல்கிறதாமே?

2

நானும் எனது சீன நண்பர் ஒருவரும் 'கோபி தியம்' என்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்றோம், அங்கே அவர் சீனவங்க கடையில் 'வெள்ளை சோறும், கோழியும்' வாங்கினார். நான் போய் முஸ்லீம் ஃபுட் கடையில் 'வெள்ளை சோறும் கோழியும்' வாங்கி வந்தேன்.

இருவரும் அருகருகே அமர்ந்தோம். அவரவர் உணவை அவரவர் சாப்பிட்டோம். அவர் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான் நான் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான். இரண்டுமே ஒன்று தான் ஆனாக்கா வேற வேற..

அது எப்படி வேற வேற , 'ஃபோஃத் சிக்கன் வாட்? ஸோ, சேம் வாட்?' என்று நீங்கள் கேக்கலாம், நான், 'யெஸ், சேம் சேம்.. பட்.. டிஃபரெண்ட்..' என்று பதில் சொல்வேன்.

எப்படி? சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்..?

முதலில் சேம் சேமை பார்ப்போம்..

கோழியை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.. நாங்கள் இருவரும் சாப்பிட்டதற்கும் பெயர் கோழி தான்.. இரண்டுமே ஒரே தாய் வயிற்றில் பிறந்து ஒரே பண்ணையில் வளர்ந்து ஒரே தீனியை தின்று வளர்ந்தது என்றும் வைத்துக் கொள்வோம்.. அந்த வகையில் சேம் சேம் தான்..

ஆனால் டிஃபரெண்ட்.. எப்படியெனில்.. எனது நண்பர் சாப்பிட்ட கோழியானது இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படவில்லை. ஆகையினால், நான் சாப்பிட முடியாது. அந்த கோழி எனக்கு ஹராமாகிறது. அந்த வகையில் இரண்டும் வேறு வேறாகிறது.


3

மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்..
-------------------------------------------------------

A.

"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ......"

ஸூரத்துல் பகரா
வசனம் 2:219

--------------------------------------------
B.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

ஸூரத்துல் மாயிதா
வசனம் 5:90

-----------------------------------------------

ஆக, குரான் ஷரீஃப் மதுபானத்தை தடை செய்வதற்கான காரணம் (In Summary from A and B) அதிலுள்ள பலனை விட கேடுகள் அதிகம் என்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாக இருப்பதும், தவிர்த்தால் வெற்றியடையலாம் என்பதுமேயாகும்.

4

வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தில் வழங்கப்படும் மதுவை பற்றி குரான் ஷரீஃப் சொல்வதை இனி படித்து புரிந்து கொள்வோம்..

-------------------------------------------------------

A.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும் (rivers of incorruptibe water), தன் சுவை மாறாத பாலாறுகளும் (rivers of milk of which of the taste never deteriorates), அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், (rivers of wine of joyous taste for the drinkers), தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன (and rivers of clear and pure honey); இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தககயோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

ஸூரத்து முஹம்மது (ஸல்)
வசனம் 47:15

மேலே கூறப்பட்ட வசனத்தில் பிரதானமாக இருப்பது இந்த உலகத்தில் இறைவனுக்கு பயந்து தனிமையிலும் தீய காரியங்களை செய்யாமல்
பயபக்தியுடன் இருந்த காரணத்தால் பாலாறும் தேனாறும் ஓடும் சுவர்கத்தில் இருப்பவர்களும் தீய காரியங்களில் ஈடுபட்டதினால் கொதிக்கும் நீர் குடித்து
குடல் துண்டாகி இருப்பவர்களும் சமமா? என்று கேட்கிறது..

ஆனால்  சுவர்க்கத்தை பற்றி கூறும் போது 'அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்..' என்று வந்துள்ளதே.. அப்படி என்றால் இங்கே அனுமதிக்கப்படாத மது சொர்க்கத்தில் அருந்த அனுமதியுண்டா?

5
---------------------------------------------------------
இது வரை..

1.வது அத்தியாயம்:
சொர்க்கத்தில் மது அனுமதிக்கப்படுகிறதாமே? என்ற கேள்வி எழுந்தது

2.வது அத்தியாயம்:
இந்த உலகத்தில் அனுமதிக்கப்பட்ட உணவில் (உதாரணமாக கோழி கறி) கூட இறைவன்  பெயர் சொல்லி அறுக்கப்பட வில்லை என்றால் அனுமதி கிடையாது.

3.வது அத்தியாயம்:
மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்

4வது அத்தியாயம்:

நல்லவர்களான சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படுவதாக வரும் குரான் ஷரீஃப் வசனத்தில் 'மதுரச ஆறுகளும்..' இருப்பதாக சொல்லப்படுவது
-----------------------------------------
6

இனி,

சொர்க்கத்தில் வழங்கப்படுவதாக கூறப்படும் 'மதுரசம்' எத்தகையது என்பது பற்றிய குரான் ஷரீஃப் வசனங்கள்:

A.
83:22 -  நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) "நயீம்" என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

83:23 - ஆசனங்களில் அமர்ந்து பார்ப்பார்கள்

83:24 - அவர்களுடைய முகங்களிலிருந்தே பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்

83:25 - முத்திரையிடப்பட்ட தெளிவான மதுவிலிருந்து அவர்கள்  புகட்டப்படுவார்கள்

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்
வசனம் 83: 22 - 25.
------------------------------------------
B.

அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பரிசுத்தமான பானமும் புகட்டுவான் (their Lord having given them a cleansed drink).

ஸூரத்துத் தஹ்ர்
வசனம் 76: 21
-----------------------------------------------------
C.

37:43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -

37:44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).

37:45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.

37: 46 (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.

37:47 அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்திதடுமாறுபவர்களும் அல்லர்.

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
வசனம் 37:43 - 47
--------------------------------------------------------------------------

D.

56:17 நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காக) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்

56:18 தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்)

56:19 (அப்பானங்களை பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.

ஸூரத்து வாகிஆ
வசனம் 56: 17 - 19

7

சுவர்க்கத்தில் வழங்கப்படுவதாக சொல்லப்படும் மதுவானது எத்தகையது என்றால்:

1. முத்திரையிடப்பட்ட தெளிவானது

2. பரிசுத்தமான பானம்

3. தெளிவான பானம்

4. மிக்க வெண்மையானது, அருந்துவோருக்கு மதுரமானது

5. அதில் கெடுதியும் இராது - அதை அருந்தினால் புத்தி தடுமாற்றமும் இராது

6. அதை அருந்தினால், 'தலைவலி' போன்ற தலை சம்மந்தப்பட்ட நோயும் ஏற்படாது - மதிமயக்கமும் ஏற்படாது
8

இறுதியாக, மதுபானம் அதில் இருக்கும் கெடுதிகளால் தான் குடிப்பதற்கு அனுமதியில்லை. அத்தகைய கேடுகளை எடுத்து விட்டால் அதில் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்ட பலன்கள் மட்டும் எஞ்சி நிற்கும். அதை அருந்துவதில் தவறேதும் இல்லை.

(2வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டதை பார்க்கவும்) நானும் எனது சீன நண்பரும் இருவருமே கோழி கறி தான் சாப்பிட்டோம் என்றாலும் 'இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதன்' காராணமாகவே இரண்டும் வேறு வேறாகும் போது 'பயபக்தியுடையவர்களுக்கு பரிசாக இறைவனே வழங்கும்' மதுபானத்தில் மட்டும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா..?

சுருக்கமா சிங்கப்பூர் ஸ்டைலில் சொல்லணும்னா இரண்டும் "சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்.."

Sunday, May 23, 2010

இந்த சந்திப்பிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும் - குல்சார் சாப் எழுதிய பாடல்

ஆன்ந்தி எனும் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்:

1. இஸ் மோடு சே ஜாத்தே ஹெய்ன் - இந்த பதிவில் இதன் தோராயமான மொழிபெயர்ப்பை படிக்கலாம்

2. சலாம் கீஜியே ஆலி ஜனாப் ஆயிஹே - முஹம்மது ரஃபி சாப் அவர்கள் பாடிய கவாலி. ஐந்து வருடத்திற்கு மட்டும் ஓட்டு கேட்டு வரும் கட்சி தலைவர்/தலைவிகளை பார்த்து மக்கள் கிண்டலடித்து பாடுவது போல் அமைந்திருக்கும். இந்த பாடலின் மொழிபெயர்ப்பு பின்பு பதியப்படும் (தேர்தல் நேரத்தில்)

3. தும் ஆகயே நூர் ஆகயா ஹெய்ன் - நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது.. நீ மட்டும் வந்திரா விட்டால்.. இப்படி போகிறது அந்த பாடல்.

4. தேரே பினா ஜிந்தகி சே கோயி - இந்த அல்டிமேட் பாடலை பற்றி இந்த பதிவில் படிக்கலாம். 

இப்போது இந்த 'இஸ் மோடு சே ஜாதே ஹெய்ன்' என தொடங்கும் இந்த பாடல் தொடங்கும் சூழலுக்குள் செல்ல வேண்டியதாகிறது.

காதலன் அவன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். பெரிய தங்கும்விடுதியில் துணை மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலியானவள் பெரிய வியாபாரியின் மகள். அந்த வியாபாரியோ தனது மகளை அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த காதலனும் காதலியும் தங்கள் காதலையும் வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சத்தையும் இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த பாடல் அந்த காதலனும் காதலியும் கணவன் மனைவியாகி கருத்து வேறுபாடுகளால் 9 வருடங்களாக பிரிந்து தற்போது மனைவி பெரிய அரசியல்  கட்சியின்  தலைவியாகி கனவன் மேலாளராக இருக்கும்  அந்த  ஹோட்டலில்   வந்து தங்க நேரிடுகிறது.

தனது மனைவி வந்து ஹோட்டலில் தங்கியிருப்பது கணவருக்கு தெரியும். தனது கணவர் தான் அந்த ஹோட்டலின் மேலாளர் என்பதை தன்னை தூக்கி வளர்த்த பிந்தா காக்கா என்பவர் மூலமாக தெரிந்து கொள்கிறாள். பிந்தா காக்கா என்பவர் இருவருக்கும் பிறந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக கணவருடனேயே தங்கியிருந்திருப்பார்.

தான் தூக்கி வளர்த்த பிள்ளையை 9 வருடங்கள் கழித்து அவளுக்கு பிடித்த கீரை செய்து கொண்டு கொடுத்து அவளின் கணவருடனேயே தங்கி விட்டதாக சொல்லி விட்டு விடைபெறும் போது இந்த பாடல் தொடங்குகிறது.

இந்த பாடலின் முடிவில் மனைவி 9 வருடங்களுக்கு பிறகு தனது கணவனை சந்திக்கிறாள்

கட் டூ.. காதலன் காதலி அகேய்ன்..

அவர்கள் இருவரும் வாழ்க்கை எனும் சந்திப்பில் (சந்திப்பு என்றால் பல சாலைகள் சந்திக்கும் இடம்) நிற்கிறார்கள். அவர்களின் முன்னால் நிறைய பாதைகள் இருக்கின்றன.. எந்த வழியே செல்வது என்பது அவர்கள் முன் நிற்கும் கேள்வி. காதலிக்கு தான் தேர்ந்தெடுக்கும் பாதை காதலனிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதும் காதலனுக்கு காதலியிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்...



Is mod se jaate hain - 2

இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்

Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe - 2

சற்று 
மெதுவாக செல்லும்
பாதை
சற்று 
துரிதமாக செல்லும்
பாதை

- மேலே சொன்ன இரு பாதைகளில் ஒன்றினை வழியாக தேர்ந்து எடுக்க வேண்டும், அப்படி எடுத்து சென்றால் -

Patthar ki haveli ko
Shishe ke gharaundo mein
Tinko ke nasheman tak

கற்களாலான அரண்மனை
கண்ணாடியினாலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்

-
'கற்களாலான அரண்மனை' என்பது பிரிந்து விடாத நிலையான வாழ்க்கை அதாவது நீடித்து நிற்கும் மணவாழ்வு

கண்ணாடி வீடு என்பது சிறிது காலம் தாங்கும் ஆனால் ரொம்ப பிரஸ்ஸரை தாங்க முடியாது, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடும் மணவாழ்வு

வைக்கோலாலான சிறு குடில் என்பது இந்த இடத்தில் ஊதி விட்டால் கூட பறந்து விடும்.. பவுண்டேஷன் இல்லாத அதாவது அடித்தளம் இல்லாத கொஞ்சம் நாள் கூட வாழாமல் பிரிந்து விடும் இந்த கால மண வாழ்க்கையை கூட உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்..

மேலே சொன்ன இந்த மூன்று சேரிடங்களும் உள்ளது. அந்த லவ் பேர்ட்ஸ் மிகவும் ஜாக்கிரதையாக தங்களது பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்..

Is mod se jaate hain

Aa…Is mod se jaate hain

இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..


ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..

Aandhi ki tarha ud kar ik raah guzarti hai - 2
Sharmaati huwi koyi qadmo se utarti hai
In reshmi raaho mein ik raah to woh hogi

Tum tak jo pahonchti hai
Is mod se jaati hai

புயலைப் போல்
கடுமையான
பாதைகளும்
உண்டு
வெட்கப்பட்டுவதை போல்
நழுவி செல்லும்
பாதைகளும்
உண்டு -
இத்தகைய
பட்டு போன்ற
பாதைகளில்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
உன்னிடம்
நிச்சயம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்

Ik door se aati hai paas aake palat-ti hai - 2
Ik raah akeli si rukti hai na chalti hai
Ye soch ke baithhi hu ik raah to woh hogi
Tum tak jo pahonchti hai is mod se jaati hai

சில பாதைகள்
தூரத்திலிருந்து வருகிறது
(உன்னிடம் அழைத்து செல்லும் என்று நினைத்த போது)
அந்த பாதை
திரும்பி (ஏமாற்றி விட்டு)
பக்கத்திலேயே ( பயணத்தை தொடங்கிய இடத்திற்கே)
வந்து சேர்த்துவிடுகிறது
ஒரு பாதை
நகராமல் (தவறான வழியைகாட்டுகிறது)
தனிமையில் உள்ளது
நான் யோசனையில்
உட்கார்ந்து விட்டேன்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
நிச்சயம்
உன்னிடம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்

Is mod se jaate hain - 2

Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe

Patthar ki haveli ko
shishe ke gharaundo mein
Tinko ke nasheman
tak  (tak means all the above three)

Is mod se jaate hain
Aa…Is mod se jaate hain

இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்


சற்று
மெதுவாக செல்லும்
பாதை
சற்று
துரிதமாக செல்லும்
பாதை


கற்களாலான அரண்மனை
கண்ணாடியிலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்
இந்த
மூன்றில் ஒன்றிற்கு
செல்ல


இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்


ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்
------------------------------------------------------------------------------------------------

குல்சார் சாப்  பாகிஸ்தானில் உள்ள 'டினா' எனும் ஊரில் பிறந்ததினாலோ என்னவோ இவர் பாடல்களில் நிறைய உருது வார்த்தைகள் கல்ந்திருக்கும்,
ஆர்.டி.பர்மன் இந்த பாட்டிற்கு இசையமைத்து முடித்த பிறகு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டாராம்.. திடீரென்று.. இந்த பாடலில் உள்ள ஒரு வார்த்தையான 'Tinko ke nasheman'  வில் வரும் 'நஷேமனை' குறிப்பிட்டு இது எங்கே உள்ளது என்று கேட்டாராம்.

அதற்கு குல்சார் 'நஷேமன்' என்றால் 'குடிசை' என்று விளக்கினாராம்.

சஞ்சீவ் குமாரும் கூட இதே கேள்வியை கேட்டிருக்கிறார்.

குல்சார் சாபின் பாடல்களுக்கு சரியான விளக்கத்தை அவர் மட்டும் தான் விளக்க முடியும்..

Friday, May 21, 2010

இரண்டு பித்தர்கள் பகலிலும், இரவிலும் வாழ்க்கையை, வசிப்பிடத்தை தேடி -

இந்த பதிவில் இதே படத்தில் வரும் 'ஏக் அகேலா இஸ் ஷெஹர் மெய்ன்' என்ற பாடலை சோக அலைவரிசையில் கேட்டு லயித்திருக்கலாம். இதே பாடலை மகிழ்ச்சியின் அலைவரிசையில் இங்கே பாடப்படுகிறது அல்லது பதியப்படுகிறது.

படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர் (கோல் மால் (தமிழில் தில்லுமுல்லு) எனும் படத்தில் நடித்தவர் தான்), ஜரினா வஹ்ஹாப் (மை நேம் இஸ் கானில் ஷாருக்கானின் - அம்மிஜானாக - அம்மாவாக வருபவர்)
பாடியவர்கள்: பூபிந்தர், ரூனா லைலா (- இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்)

இந்த பாடலுக்காக குல்ஜார் சாபுக்கு பிலிம்பேர் 'சிறந்த பாடலாசிரியர்' விருதை வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது..

கட்டுமானம் நடைபெறும் ஓர் கட்டடத்தின் இடையே ஒரு நடுத்தர வர்க்க இளஞ்சோடிகள் தங்களுக்கு ஓர் இல்லம் வேண்டும் என்ற கற்பனையில் கவிஞர்களாகவோ அல்லது பித்தர்களாகவோ மாறிய போது.. என்னையும் இசையின் காதலானாக மாற்றி விட்டார்கள்..




Bhupinder: Do diwaane shaher mein, raat mein aur dopahar mein
Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
(repeated by Runa)

இரு பித்தர்கள்
இந்த நகரத்தில்
இரவும்
பகலும்
வாழ்வாதாரம் தேடுகின்றனர்.. (ஆபோ தானா என்றால் நீரும் உணவும் என்று அர்த்தம்)
ஓர்
வசிப்பிடம் தேடுகின்றனர்..

Runa: In bhoolbhulaiya galiyo mein, apna bhi koyi ghar hoga
Ambar pe khulegi khidki ya, khidki pe khula ambar hoga

(repeated by Bhupinder)

இந்த
சிக்கல் நிறைந்த
குழப்பமான
வழிதடங்களுள்
நமக்கென்று
ஒரு
இல்லம்
இருக்கும்..

விண்ணில்
சாளரம்
திறக்கும்
அல்லது
சாளரம் வழி
தெளிவான வானமது
தெரியும்

Asmaani rang ki aankho mein
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்

R: Asmaani ya aasmaani?
ஒப்பிடமுடியாதவா அல்லது நீல நிறமா? (வானத்தின் நிறமா?)

B: Asmaani rang ki aankho mein

Basne ka bahaana dhhundhhte hain, dhhundhhte hain
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
நாம்
குடியேற
காரணம்
தேடுவோம்

நாம்
தேடுவோம்

வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம் தேடுவோம்

B: Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்R: Taare, aur zameen par?

பூமியில் இறங்கி
நடக்கும் போது


நட்சத்திரம், அதுவும் பூமியில்..?

B: of course
சந்தேகமே இல்லை..

Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
நடக்கும் போது

R: Hmmm hmmm
ஹும்.. ஹூம்..

B: Aakaash zameen ho jaata hai
வானம்
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்

R: A aa aa
ஆ..

B: Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
அந்த இரவானது
மீண்டும்
இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி
விடும்..

R: Jab taare zameen par chalte hain


Aakaash zameen ho jaata hai
Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai

விண்மீன்கள்
பூமியில் இறங்கி
விளையாடும் போது
வானமானது
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
அந்த இரவானது
மீண்டும்
தனது இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி விடும்


B: Pal bhar ke liye
R: Pal bhar ke liye
சில நொடிகளுக்கு மட்டிலும்
சில நொடிகளுக்கு மட்டிலும்


B: Pal bhar ke liye in aankho mein
சில நொடிகளுக்கு மட்டிலும் இந்த கண்களில்

Ham ek zamaana dhhundhhte hain, dhhundhhte hain
நாம் ஓர் உலகை தேடுவோம், தேடுவோம்..

R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம்
தேடுவோம்

Thursday, May 20, 2010

இந்த நகரத்தில் தனிமையில் ஒருவன் - குல்சார் சாப் எழுதிய இந்தி பாடல்

படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர்
படம் வெளியான ஆண்டு: 1977
இசை: ஜெய் தேவ்
இயக்கம்: பீம்செய்ன்
கதை: டாக்டர் சங்கர் சேஷ்

குருவி சேர்ப்பது போல் காசை சேர்த்து காதலியோடு சேர்ந்து வாழ வீடு கட்ட ஆசைப்பட்டான் ஒருவன்.  வீட்டை கட்டி கொடுப்பவர் பாதி வீடு கட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள வீடும் பணமும் காணாமல் போகிறது.

அந்த கட்டத்தில்   எடுத்த  சில  தவறான  முடிவுகளால்  காதலியும்  கை  விட்டு  போகிறாள். 
வாழ்க்கையை தொலைத்து விட்டு இனி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாத தனிமையில் அவன்.
அறிமுகமானவர் என்று யாருமில்லாத மும்பை போன்ற பெரிய நகரத்துக்கு வந்து தனிமை எனும் கொடுமையில் விழி பிதுங்கி நின்றால்...

இதோ குல்சாரின் பேனாவின் இலக்கிய'மை' இசையோடு கலக்கிறது..




Ek Akela is Seher Mein
Raat mein aur do-pehar mein
Aab-o-daana dhoondta hain...
Aashiyaanaa dhoondth hain...

இந்த நகரத்திலே
தனிமையிலே ஒருவன்..

இரவும் பகலும்

வாழ்வாதாரம் தேடுகிறான்...

வசிப்பிடம் தேடுகிறான்...

Din Khaali Khaali Bartan Hai
Aur raat hai jayse Andhaa Kuaan
In sooni andheri aankhon mein....
Aansoo ki jagah aata hai dhuaan
Jeene ki wajaah to koi nahin...
Marne ka bahaana dhoondta hai..

பகல் இங்கே
காலியான பாத்திரம்
(அதாவது பசித்தவனுக்கு காலியான பாத்திரம் என்ன பயன்படுமோ அதுவே இங்கே பகல் வாழ்க்கை)
இரவு இங்கே
ஆழமான கிணறு
(அதாவது பக்கத்தில் இருப்பவர் கூட யாரென்று தெரியாத மிகவும் ஆழமான இருள் நிறைந்த பள்ளத்தாக்கு)
தனித்துவிடப்பட்ட
கருமைநிற கண்களில்
கண்ணீரும்
வெறும் புகையானது..!
(அதாவது வைரமுத்து 'வெள்ளை புறா ஒன்று' பாடலில் அருமையாக எழுதியிருப்பாரே 'நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழையானதே' என்று அதே போல் தனிமையில் அழுதழுது கண்கள் ஏழையாகி இனி அவன் அழும் போது கூட வெறும் புகை மட்டுமே வருகிறதாம்)
இனி அவன்
வாழ்வதெற்கென்று
ஒரு காரணமும்
இல்லை..!
அதனால்
சாவதற்கு
ஒரு சாக்கு
(அதாவது காரணம்) 
தேடுகிறான்..!

In umr se lambi sarhkon ko
Humne to Theherte dekha nahin
Bas Daurhti phirti rehti hain..
Manzil tak pahunchte dekha nahin
Is ajnabi se shehar mein..
Jaana Pehchaana dhoondta hai

இங்கே சாலைகள்
கூட
வாழ்க்கையை
விட
நீளமாக இருக்கிறது..!
அதை பயன்படுத்துபவர்கள்
ஓரிடத்தில் நிற்பதை
நான் பார்த்ததே
இல்லை..!
மாறாக
ஒடிக் கொண்டே
இருக்கிறார்கள்..!
அவர்கள் சேரிடம்
சேர்ந்ததையும்
பார்த்ததே
இல்லை..!
(அதாவது நகரத்து வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் சாலையிலே பாதி வாழ்க்கையை கழித்து வருவதோடு அவர்கள் போய் சேர வேண்டிய எல்லையையும் அடையாமல் 'ஏதோ ஓடுகிறது' என்பது போல் வாழும் வாழ்க்கையை பற்றி பேசுகிறது)
இத்தகைய
அறிமுகமில்லாத
விநோதமான ஊரில்
தெரிந்தவரையும்
அறிந்தவரையும்
தேடுகிறேன்..!

Thursday, May 13, 2010

சில டைரி குறிப்புகள்...

வாசல் கதவு உள் பக்கமாக தாழிட்டு இருந்தது. வீட்டின் வாசலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தி விரலில் உள்ள 'வி'யும் 'ர'வும் போயே போய் விட்டது. கதவை ரொம்ப நேரமாக தட்டியும் திறந்த பாடில்லை.

எங்க மாமா மிகவும் கோபக்காரர். எங்க மாமாவிற்கு பிடிக்காத பழமொழி அல்லது சொல்மொழி 'தோலுக்கு மேலே வளர்ந்துட்டா பெத்த புள்ளைங்க கூட தோழர்கள் அல்லது தோழிகள்' என்பதாகும். பிடித்த பழமொழி 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி மாமன் மச்சான் கூட உதவ மாட்டான்' என்பதாகும்.

அதனால் பிள்ளைங்க எல்லாம் பயந்து நடுங்குங்க.. இப்போது அவர் தான் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: யார் வீட்டு கதவை?  -
பதில்: அவர் வீட்டு கதவை தான்.

என் மாமாவின் மகனார் இருக்கிறாரே, அவர் பத்தாவது பரீட்சை எழுதியிருந்தார். அவர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரவேண்டும் என்று கண்டிப்பாக கறாராக கட்டளையிட்டிருந்தார்கள் எங்கள் மாமா.

அன்னாருடைய மகனோ, 'வாப்பா ஸ்டேட் ஃபர்ஸ்ட் ரொம்ப கஷ்டம் வாப்பா.. இருந்தாலும் நான் முயற்சி பண்றேன்.. எப்படியும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாவது வாங்கி காட்டுறேன்' என்று சவால் விட்டிருந்தார்.

அவர் இதுவரை விட்ட எந்த சவாலிலும் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவ்வளவு ஏன்..? இதுவரை அவர் எந்த சவாலுமே விட்டதாக கூட சரித்திரமே இல்லைன்னா பார்த்துக்க வேண்டியது தான்.

எங்க மாமா அவர்களின் வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் அந்த நல்ல நாளின் காலையில் தான் ரிசல்ட் வந்திருந்தது. மரைக்காயர் அதான் எங்க மாமாவின் மகனார் பரிச்சையில பெயிலாகி இருந்தார். அதிகமில்லை ஜெண்டில்மேன். ஒரே ஒரு சப்ஜெக்டில் தான் அப்படி பெயிலாகி இருந்தார்.

இப்போது வாசலில் இருந்த அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்து விட்டது, புள்ளை அடிக்கு பயந்தோ அல்லது அவமானத்துலேயோ ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு செஞ்சிருக்குமோ என்பதே அது.

எல்லோரும் அழுது புலம்ப எங்க மாமா உள்பட தெருவாடிகளில் பலர் எல்லோரும் ஓட்டின் மீது ஏறி கொல்லை வழியாக குதித்து இரண்டு நாளைக்கு முன்னாடி ஆயிரங்கணக்கா செலவு பண்ணி மாட்டின கதவை கஷ்டப்பட்டு உடைச்சு எல்லோரும் உள்ளே போய் பார்த்தா..

உள்ளே போய் பார்த்தா பத்தாவது பரீட்சையில ஃபெயிலான புள்ளை படுத்து தூங்கிட்டு இருக்கு உள்ளே..

எங்க மாமா அடிச்சாரு தான், ஆனா பரீட்சையில ஃபெயிலானதுக்கு கூட இல்லை, தூங்கிட்டிருந்த அவரை எழுப்பி விட்ட உடனே அவர் சொல்லியிருக்கார், ' இதுக்காக ஏன் புது கதவை உடைச்சீங்க.. வாசல் கதவை உடைச்சிருக்கலாம்ல.. அது தான் பழசு.." என்றிருக்கார் என்னோட சூப்பர் மச்சான்..

Wednesday, May 12, 2010

நீயில்லாத வாழ்க்கையில் குறையேதும் இல்லை.. நீயில்லாத வாழ்க்கையில்.. ஆனால்.. வாழ்க்கையே இல்லை - குல்ஜார் சாப் பாடல்கள்

’ஆன்ந்தி’ - இந்த படத்தை பற்றி ஏற்கனவே எனக்கு தெரிந்த அளவுக்கு இங்கே ஒளறி கொட்டி களறி முடித்து இருந்தாலும் இந்த படம் பாதித்த அளவில் பாதி எழுதியதாக கூட ஒத்துக் கொள்ள முடியாது. சரியாக ஒளற (எழுத) தெரியவில்லை என வேண்டுமென்றால் உண்மையை ஒப்புக் கொள்ளலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்தை பற்றி நான் மறுபடியும் இங்கே எழுதுவதற்கு காரணம் இந்த படத்துக்கும் எனக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. எப்படியெனில்..

இந்த படத்தில் ஒரு கட்டத்தில் சுசித்ரா சென், ‘என்னா இது.. இஸ்மாயில் பாய்.. இஸ்மாயில் பாய்..’ என்று கூறுவார். கேமரா கொஞ்சம் பின்னுக்கு செல்லும் போது சஞ்சீவ் குமார் கையில் கேமராவுடன் சுசித்ரா சென்னை புகைப்படம் எடுக்க வேண்டி ‘இஸ்மாயில் பாய் இல்லை ஸ்மைல் பாய்’ என்று செல்லமாக சிரிக்க சொல்லி கொஞ்சி கொண்டு இருப்பார்.

இந்த வகையில் சுசித்ரா சென் ’இஸ்மாயில் பாய்’ என்று என் பெயரை சொல்லி எனக்கும் இந்த படத்திற்கும் ஒரு சம்மந்தத்தை ஏற்படுத்தி விட்டார். நான் என்ன செய்ய..?

'தேரா பினா ஜிந்தகி சே கோயி.. ' என தொடங்கும் இந்த பாடலை ஏற்கனவே மொழி பெயர்த்து எழுதியிருந்தாலும் (அரை குறையாக தான்)இங்கே பாடலை மட்டும் தனியாக எழுதி விட அடி மனதில் ஆசை வந்து விட்டது.  ஆகையினால்.. இந்த பதிவு..

அரசியல் கட்சியின் தலைவியான ஆர்த்தி தேவி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக வெளியூர் சென்று ஒரு ஓட்டலில் தங்குகிறார். அந்த ஓட்டலின் எம்.டி கம் மேலாளர் தனது கணவர் என்று தெரிய வருகிறது. 

முன்னர் ஆர்த்தி தேவி அரசியலில் ஈடுபடுவதை விரும்பாத காரணத்தினால் எழுந்த கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து இருவரும் பிரிய நேரிடுகிறது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.

இறுதி கட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ‘இனி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டு வீட்டில் குடும்பத்தை குழந்தையை கவனித்து கொள்கிறேன்’ என்று கூறுகிறார்

முன்பு அரசியலில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்த்த கணவரோ, ‘உன் சேவை கட்சிக்கும் நாட்டுக்கும் இப்போது அவசியம் தேவைப்படுகிறது, நீ வீட்டிலேயும் சரி.. நாட்டிலேயும் சரி.. தோல்வி அடைவதை நான் விரும்ப மாட்டேன். நீ போய் வா.. நான் எப்போதும் உன் கூட இருப்பேன்’ என்று அனுப்பி வைத்து கதையை தொடங்கி முடிப்பார்.

இந்த கதையை மிகவும் உணர்வு பூர்வமாக குல்சார் அவர்கள் ‘ஆன்ந்தி’யில் எடுத்திருப்பார்கள்.

ஒரு தியேட்டரில் 'See The Prime Minister of India' என்று விளம்பரப்படுத்தியதை பிலிம்ஃபேர் பத்திரிக்கையில் வெளியிட்டவுடன் இந்த படம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக முடிவு செய்து இந்த படத்துக்கு ஒரு முடிவு கட்டினார்கள்.

அதன் பிறகு சுசித்ரா சென் இந்திரா காந்தியின் ஆதரவாளர் போல் ஒரு காட்சி தனியாக எடுக்கப்பட்டு பிறகு சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் படம் முழுக்க ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் தான். அவர் தான் சுசித்ரா சென். அவரை தவிர்த்து படத்தில் வரும் அத்தனை பேரும் ஆண் கதாபாத்திரம் தான்.

ஜே.கே, ஆர்த்தியின் மகளான 'மன்னு' கூட சிறுமியாக இருக்கும் போது மட்டும் தான் காட்டுவார்கள் பெரியவளானதும் காட்ட மாட்டார்கள். அவளை சிம்லாவில் படிக்க அனுப்பி விடுவார்கள்.

ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் தான் என்றாலும் படமே அவரை சுற்றித் தான் அவர் இல்லாமல் இந்த படமே இல்லை. சுசித்ரா சென்னை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் அந்த கதையை குல்சாரே டைரக்ட் செய்ய வேண்டும் என்று குல்சார் சாபிடம் கதையை சொல்லிய போது,

குல்சார் சொன்னாராம், ‘இந்த கதைக்கு எதுக்கு சுசித்ரா ஜி.. இந்த கதையை தான் டைரக்ட் செய்யணும்னு சொன்னா இதுக்கு யார வேணும்னாலும் நடிக்க வைக்கலாம்.. ஆனால் சுசித்ரா ஜியை தான் நடிக்க வைக்கணும்னு சொன்னா நான் ஒரு கதை சொல்றேன்..’ என்று ஆன்ந்தி கதையை சொன்னாராம்.

அந்த அளவுக்கு சுசித்ரா ஜிக்காகவே எழுதப்பட்ட கதை. அவரும் இருக்கின்ற ஃபிலிம் இன்ஸ்டிடியுட்டுக்கு காம்பெட்டிட்டர் மாதிரி ஒரு நடிப்பு இன்ஸ்டிடியுட்டே நடத்தியிருப்பார் படத்தில்.

ஆனால் அதே சமயத்தில் சஞ்சீவ் குமாரையும் சும்மா சொல்லி விட முடியாது, சில ஹீரோக்கள் தங்களது புதுப்படம் வெளியாகும் போது 'நான் இந்த படத்தில ரொம்ப வித்தியாசமா நடிச்சிருக்கேன்..' என்பார்கள். கடைசியிலே படத்த பார்த்தா கேரக்டர் பேரு மட்டும் தான் வித்தியாசமா இருக்கும். 'தமிழ்படம்' படத்தில் மச்சத்தை வைத்து வேறொரு ஆள் என்பது போல் காட்டியிருப்பார்களே அந்த அளவுக்கு கூட வித்தியாசம் இருக்காது.

ஆனால் 'மாவ்சம்' என்ற படத்திலும் 'ஆன்ந்தி' என்ற படத்திலும் கிட்டதட்ட ஒரே மாதிரி மேக்கப், ஒரே மாதிரி காஸ்ட்யூம் என்றாலும்  சஞ்சீவ் குமார்   எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்திருப்பார்.

'குல்சார்', 'ஆர்.டி.பர்மன்', சஞ்சீவ் குமார்'  காம்பினேஷனில்  புதியதொரு  படம் பார்க்க நிச்சயமாக நடக்காதுன்னு தெரிந்தும்  மனம்  ஒரு தலை  ராகமாய் ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

பெரிய காரணம் ஏதுமில்லாமல் பிரியமான தம்பதிகள் பிரிந்த பின்பு  இருவருமாக - தேர்தல் நேரம் என்பதால் இதை வைத்து எதிர்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் என்று பயந்து - யாருக்கும் தெரியாமல் இரவின் தனிமையில் சந்தித்து தத்தமது மனங்களை பேச விட்டு பிரிவுகளின் துயரங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

மரணித்த மௌணங்களும் செதுக்கிய சொற்களுமாய் நிரம்பிய அந்த  சோக கனங்களின் ஒரு பதிவு தான் இந்த பாடல்...

(டிரில்லியன் தடவை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல்.. an ultimate song..)

மனைவி:
barson baad, yun ghumne nikli hoon ... aise lagta hai
ரொம்ப வருஷமாச்சு.. இப்படிலாம் வெளியே வந்து..  இது எப்படி இருக்குன்னா...!

கணவன்:
kiya?
என்ன..?

மனைவி:
jaise wo kisi sadi ki baath thi
ஒரு யுகத்தையே கடந்து வந்த  மாதிரி இருக்கு

கணவன்:
huhn.., shaayad un dinon ki baath hogi.. jab yeh imaarath abhi ujdehi nahin thi..
(ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை சுட்டிக்காட்டி)
ஹும்.. இந்த கட்ட்டம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அநேகமா.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு..

மனைவி:
huhn.., pichle kisi janam ki bath hi tho laghti hai na?
ஹும்.. இன்னொரு தடவை பொறந்து வந்த மாதிரி இருக்கு.. இல்லை?

கணவன்:
ek kaam karein.., jab thak thum yahan ho..,  roz ghar pe kaane keliye tho aaya hi karogi.. khaane ke baad, ghoom ne nikal aya kareinge.. kum-se-kum, yeh imaarath, kuch dinon keliye tho bas jaayegi
ஒரு வேலை செய்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும்.. ஒவ்வொரு நாளைக்கும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரியாவது இருந்துட்டு போவட்டும்..
 
thumhaare shawl kahan?
ஒன்னோட ஷால் (shawl) எங்கே?

மனைவி:
um, hahn hahn, bhool gai, hahn, ah, ah, na, na,
ம்.. ஆமா.. ஆமா.. நான் மறந்துட்டேன்..  இல்லை.. இல்லை..  (ஷாலை கணவர் போர்த்தி விட) வேண்டாம்.. வேண்டாம்.

கணவன்:
thum nahin badaloge, lo
நீ இன்னும் மாறவே இல்லை.. இத போர்த்திக்க..




பல்லவி:
பெண்:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும் 
குறைகளேதும்
இல்லை

Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில் 
வாழ்க்கையே இல்லை 

வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை

Tere bina zindagi se koyi, shikwa, to nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும் குறைகளேதும் 
இல்லை

சரணம் 1:

Kaash aisa ho tere qadmo se, chun ke manzil chale, aur kahi, door kahi

என் சேரிடம்
உன் பாதங்களின்
வழியாக
இருந்திருக்க வேண்டும் -
அது அல்லாமல்
வழிமாறி சென்றுவிட்டது
தூரமாக சென்றுவிட்டது

Tum gar saath ho, manzilo ki, kami to nahi
நீ என்னுடன்
இருந்தால்
என் சேரிடம்
குறைவில்லாமல்
இருந்திருக்கும்


வசனம்:

கணவன்:
Suno Aarti.., ye jo phoolon ki belen nazar aati hain na,
ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..?

darasal ye belein nahin hai, arabi main aayaten likhi huyi hain.
அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள் (எழுத்துக்கள்)..
Ise din ke vaqt dekhna chahiye.., bilkul saaf nazar aati hain. 
நீ பகல்ல பார்த்தா.. நல்ல தெளிவா தெரியும்

(எதிரே கையை நீட்டி)
Din ke vaqt ye paani se bharaa rahataa hai.
இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..

(வேறொரு பக்கம் கையை காட்டி)
Din ke vaqt.., jab ye fuwhare...
பகல்ல இங்கே.. இங்கே துளித்துளியா இருக்கும் போது..
(என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)

மனைவி: 
Kyon din ki baaten kar rahe ho
ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. 


Kahaan aa paaungi main din ke vaqt?
நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..


கணவன்: 
Ye jo chaand hai na, ise raat main dekhnaa... Ye din main nahin nikaltaa ..
இந்த நிலா இருக்குல்ல.. இது ராத்திரியில மட்டும் தான் தெரியும்.. பகல்ல தெரியறிதில்லை..


மனைவி: 
Ye to jaroor nikaltaa hogaa
இது தான் எப்போதும் தெரியுதே


கணவன்: 
Haan.., lekin beech mein amaavas aa jaati hai...Waise to amaavas pandra dinon ke hothi hai, lekin is baar bahut lambi thhi
ஆமா தெரியும்.. ஆனா இடையில.. அமாவாசை வந்துடும்.. உண்மையில.. எப்போதும் அமாவாசை 15 நாளைக்கு பிறகு தான் நிலா வரும்.. ஆனா இந்த தடவை ரொம்ப நாளாயிடிச்சு..


மனைவி: 
Nau baras lambi thhi naa ?
9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..?


சரணம் 2:


பெண்:
Jee mein aata hai, tere daaman mein, sar jhuka ke ham, rote rahe, rote rahe
உன்னுடைய
தோளில்
சாய்ந்து கொண்டு
அழுது
தீர்க்க வேண்டுமாய்
மனம் உந்துகிறது 



Teri bhi aankho mein, aansuo ki, nami to nahi
உன்னுடைய
கண்களிலும்
அழுது தீர்த்த
தடங்கள்
தெரிகிறது..


ஆண்:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi

நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை

Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை

வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை



சரணம் 3:
ஆண்:
Tum jo keh do to aaj ki raat, chaand doobega nahi, raat ko rok lo
நீ மட்டும்
ஒரு வார்த்தை
சொன்னால்
இந்த நிலவின்
இரவுகள்
நீடித்திருக்கும்..
இரவை  அப்படியே
நிறுத்திவிடு..!


Raat ki baat hai, aur zindagi baaki to nahi 
இருவருக்குமான
இந்த இரவு
நீடித்து விட்டால்
இரவை தவிர்த்து
வேறு வாழ்க்கையே
பற்றிய பேச்சில்லை
பல்லவி:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi

நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை

Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை


வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை

என்னுடைய இண்டர்பிரடேசனும் குல்சார் சாபுடைய இண்டர்பிரடேசனும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சொல் குற்றம் பொருள் குற்றம் ஏதுமிருந்தால் பரிசுத் தொகையில் கழித்துக் கொள்ளலாம்.

நாகூர்ல கொடியேத்தம்

1
எங்க ஊர் ஆசாமி ஒருவர் ரொம்ப இறை பக்தி உள்ளவர். பக்கத்து ஊருக்கு போய் வாஞ்சூர் மருந்த குடிச்சா கூட 'பிஸ்மில்லா' சொல்லி தான் குடிப்பார்ன்னா பாத்துக்குங்களேன்.

அவர் கிட்டே நான் சொன்னேன், 'நானா, நம்ம ஒடம்புக்குள்ளே நம்மளால சொந்தமா உருவாக்க முடியாத வெலை மதிப்பில்லாத பொருளெல்லாம் இருக்கு, நீங்க சாராயத்த குடிச்சு அதெல்லாம் அழிக்க பாக்குறீங்களே..'ன்னேன், அத்தோடு விடாமல், 'நம்ம ஒடம்பு நமக்கு ஒரு வூடு மாதிரி நானா, நம்ம வூட்டுக்குள்ளே நமக்கு கெடுதலானத நாம சேர்ப்போமா..' என்றேன்

அரை போதையில் அறைக்குள் இருந்த அவர், 'ஏன் சேர்க்க மாட்டோம், நம்ம வூட்டுக்குள்ள கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய சேக்குறதில்லை..' என்றார்.

நான் கைலியை காணோம் கைநேஞ்சியை காணோம்னு ஓடியே வந்துட்டேன்.

அவர் நாகூர் தர்ஹால எஜமாண்ட வாசல்ல ரொம்ப மரியாதையா ஒக்கார்ந்திருப்பார், வாஞ்சூருக்கு போவும் போது கூட மியா தெரு, குஞ்சாலி மரைக்கார் தெரு சந்திக்கும் முனையில் தர்ஹா பெரிய மனாரா தெரியும், அங்கே செருப்பை கழட்டி போட்டுட்டு கையை கண்ணுல வச்சு முச்சம் கொடுத்துட்டு தான் வாஞ்சூர்க்கே போவார்.

அதே மாதிரி திரும்ப வரும் போது குடிச்சிட்டு வர்ரது எஜமானுக்கு தெரிய கூடாதுங்கறதுக்காக அப்படியே வாயை பொத்திகிட்டு தலையை திருப்பிகிட்டு தான் போவார். அவ்வளவு மரியாதை.

மரியாதை பலவகைப்படும் என்றால், அதில் நானாவின் இந்த மரியாதை ஒரு வகை. இது மாதிரி மரியாதைகளில் பல வகைகள் உள்ளது.

அதில் ஹந்திரியே நடக்கக் கூடாது தர்ஹாக்கே போவக்கூடாதுங்கறது தான் உச்சபட்ச மரியாதை.

2
எங்க ஹஜ்ரத் ஒரு கதை சொல்லி காண்பித்தார்கள்,

ஒரு ஊர்ல ஒரு தர்ஹா இருந்துச்சு, அந்த தர்ஹாவ ஒட்டி ஒரு பள்ளிவாசலும் இருந்துச்சு, அந்த பள்ளிக்கி ஒரு முத்தவல்லி ஒருத்தர் இருந்தாரு, அவர் அஞ்சு வேலை தொழுவ, குரான் ஷரீஃப் ஓதுறது, தர்ஹா ஜியாரத்ன்னு ரொம்ப இபாதத்தா இருந்திருக்காரு.

ஆனா அவர்ட மவன் ஒரு வேலைக்கு கூட பள்ளி பக்கமோ இல்ல தர்ஹா பக்கமோ வராதவனா ஒரு ஆட்டு மேலேயே ரொம்ப புரியமா இருந்துகிட்டு இருந்திருக்கான்.

அவர் எவ்வளவோ சொல்லி பார்த்தாரு, இவன் கேக்கலை, ஆட்டு கூடேயே சுத்திகிட்டு இருந்திருக்கான். அதனால் கோவப்பட்டு 'நீ என் புள்ளையே இல்ல, இப்படி தர்தீப் இல்லாத புள்ளை எனக்கு தேவையுமில்லைண்டு சொல்லி வூட்டை வுட்டே தொறத்தி வுட்டுட்டாரு'.

அவன் ரொம்ப சந்தோஷமா, ஆட்டை கூட்டிட்டு அந்த ஊரை வுட்டே போயிட்டானாம். அப்புறமா, திடீர்ன்னு ஒரு நாள்  அந்த ஆடு எறந்துடுச்சு, அத பொதச்ச எடத்துலேயே இவன் ஒக்காந்து அழுவிகிட்டு இருந்திருக்கான்.

அந்த வழியா போற வர்ற ஜனங்க பாத்துட்டு, யாரோ ஒரு மகான் இந்த எடத்துல தான் அடக்கமாயிருக்காருன்னு அவங்களுக்குள்ளாகவே  பேசிகிட்டதோடில்லாம  அவன் கைல காசயும் கொடுத்துட்டு போயிருக்காங்க.

ஒடனே, அவன் ஒரு உண்டியலை வச்சுட்டான், அது பெரிய தர்ஹாவாயிடுச்சு, அதை ஒட்டி ஒரு பள்ளியும் கட்டுனான், தாடிய வச்சிகிட்டு தசுவமணிய ஓதிகிட்டு முத்தவல்லியா ஒக்காந்துட்டான்.

அவர்ர வாப்பா 'பையன் பெரிய இபாதத்துகரனா மாறிட்டான்'னு கேள்விபட்டு இவன வந்து பார்த்திருக்காரு. அதோட, 'எப்டிப்பா இதெல்லாம்..?'ண்டும் கேட்டிருக்கார்.

அவன் வாப்பாட்ட உண்மையை ஒத்துகிட்டு இருந்திருக்கான், 'இந்த கப்ருல அடங்கியிருக்கிறது அவ்லியாவெல்லாம் இல்ல, என்னோட ஆட்டுகுட்டி தான்'னு

உடனே அவண்ட வாப்பா சொன்னாராம், 'அதானே, புலிக்கு பொறந்தது பூனையாவுமா?, நம்ம ஊர்ல தர்ஹால அடங்கியிருக்கிறது யாரு?, நீ கூட்டிட்டு வந்த ஆட்டுகுட்டியோட ம்மா தானே' என்று.

எப்படியிருக்கு கதை?

3
நாகூரில் 453வது வருட கந்தூரி வருகிற மே மாதம்  15ந் தேதி சனிக்கிழமை சிறப்பாக தொடங்க இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.

ஹந்திரி என்பது இறைவனின் நண்பர்கள் என்று அறியப்படும் அவ்லியாக்கள் மறைந்த தினத்தில் அவர்களின் சீடர்கள், குடும்பத்தார்கள், இன்னும் பொது மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அன்னாரை நினைவு கூர்வதையே குறிக்கும்.

இந்த வகையில் சையிது அப்துல் காதிர் என்ற இயற் பெயரை கொண்ட சுல்தானுல் அவ்லியா நாகூர் பாதுஷா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிகிழமை அதிகாலை நேரத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள்.

அவர்களின் சீடர்களான 404 பேரும் சன்மார்க்க பணி புரிய நான்கு குழுக்களாக பான்வா, மலங்கு, மதாரி, ஜலாலி என நான்கு வகுப்பாக பிரிந்து சென்றார்கள். பிரிந்து சென்ற அவர்கள் ஹிஜ்ரி 979 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் முதல் தேதியில் சந்தித்தார்கள். 10ஆம் நாள் வாழ்வை நீத்த அந்த தருணத்தில் திக்ரில் ஈடுபட்டார்கள். இதுவே ஹந்திரியானது.

4

ஆனால் ஊரில் இன்னேரத்துக்கு சுறா, பையா, குட்டி பிசாசு கைலிங்க எல்லாம் கம்பில தொங்கிட்டு இருக்கும். மூக்கை துளைக்கும் முட்டை புரோட்டாவிலிருந்து மலேசியா ஸ்பெஷல் மீங்கோரிங் வரை கடைகள் குவிந்திருக்கும். அலங்கார வாசல் வெளக்கு ஜெதப்பா எறிய ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும். இசை முரசு இசை அமுதமெல்லாம் செவிக்கொரு சுவையாய் விருந்து படைத்து கொண்டிருப்பார்கள்.

இப்படியாக ஒரு புரம் ஹந்திரி வேடிக்கை தடபுடலாக நடந்து கொண்டிருக்க இன்னொரு புரம் முஸ்லீம்களில் ஒரு சாரார் எங்கே ஷிர்க் வைத்து விடுவார்களோ என்ற உண்மையான (?) அக்கறையிலும் கவலையிலும் கபுரு வழிபாடு கூடாது, கல்லை படுக்க வச்சு வணங்காதீங்க, அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீங்க என்று கூடு வருவதற்கும் கொடி ஏற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க தயாராகிக் கொண்டு இருப்பார்கள்

அவ்லியாக்களின் கப்ரில் மரியாதையின் குறியீடாக போர்வை போர்த்துவார்கள், அதற்கு ஒரு மேலே சொன்ன ஷிர்க் பற்றி கவலைப்படும் அறிஞர்களில் ஒருவர் இப்படி கேட்டார், ‘ஏன்..? அஹலுக்கு என்ன குளுராவா இருக்குது..” என்று

4

குரான் ஷரீஃப், ஹதீஸை மட்டும் தான் பின்பற்றுங்கள் என்று சொல்வோர்கள் ஒரே அணியாக இருக்க தவறி விட்டார்கள். மேடையேறி ஒருவர் மீது ஒருவர் வசை பாடி அறிக்கை விட்டு பிரிவினைக்கு காரணமாகி இருக்கிறார்கள்.

ரசூல் (சல்) அவர்களை ‘அழகிய முன்மாதிரி’ என்று ஒப்புக் கொண்ட நாம் இந்த ஏகத்துவத்தை விட சொந்த பிரச்சினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி பல குழுவாகி நிற்கும் இவர்களை ‘மோசமான முன்மாதிரி’ என்று ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் ஹந்திரி நிகழ்ச்சியானது முஸ்லீம்களை முஸ்லீம்களோடு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களோடும் ஒன்றிணைந்து ஒரே மனநிலைக்கு கொண்டு செல்கிறது எனலாம்.

சீர்திருத்தம் என்பது தேவையான அளவு தான் இருக்க வேண்டும், ரசூலுல்லாஹ் (சல்) அவர்கள் மக்காவில் உள்ள சிலையை தான் உடைத்தார்கள். மக்காவில் குறைஷிகளால் கஃபாவை சுற்றி கட்டியிருந்த துணிகளை கிழிக்கவில்லை. அதற்கு அவசியமுமில்லை.

’ஷிர்க்’ புகழ் அறிஞர்கள் (அதாவது எதற்கெடுத்தாலும் அவன் ஷிர்க் வச்சுட்டான் என்று கவலைப்படுபவர்கள்) துணிகளையும் கிழித்து எரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனது கருத்தாகும்.

5

’ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் போது ஹந்திரி வருது என்று உங்களை யாரும் கூப்பிட்டு நீங்கள் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், முழு ஊர்வலமும் முடிந்து திரும்ப வந்து விட்ட இடத்திலிருந்து கடிதத்தை உடனே தொடங்க உங்களால் முடியணும்..’ - எங்கள் ஹஜ்ரத் கற்றுக் கொடுத்தவை தான்..


ஹந்திரியில் கொடியேறுவது, கப்பல் வருவது, கூடு வருவது இவை அத்தனையும் எஜமானை நினைவு கூர்வதை விட்டும் தடுத்து விடாத அளவுக்கு  நாம் கலந்து கொள்ள வேண்டும் என்றே நான் எங்களின் ஹஜ்ரத்திடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

‘கத் அஃப்லஹ மன் தஜக்கா..’ - மனதை தூய்மை படுத்தியவர்கள் வெற்றி அடைந்து விட்டார்கள் என்பது குரான் ஷரீஃபின் வாசகம்.

இறைநேச செல்வர்களின் மீது அன்பு பாராட்டுவதிலும் மரியாதை செலுத்துவதிலும் அவர்களின் வாசலில் நின்று சலாம் சொல்வதிலும் மனம் தூய்மையடையவே செய்யும்.

Sunday, May 02, 2010

உன்னிடமுள்ள என்னுடைய வேறு சில உடைமைகளையும் திரும்ப அனுப்பவும் - குல்ஜார் சாப் பாடல்கள்

கொட்டுகின்ற ஒரு மழை நாள் இரவில் மஹேனும் சுதாவும்  புகைவண்டி  நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் சந்தித்து கொள்கிறார்கள்.  மஹேனும் சுதாவும் திருமணமாகி பிரிந்து வாழ்கிறவர்கள். இருவரும் மறக்க நினைத்திருந்த அவர்களது வாழ்க்கையை திரும்பி பார்க்க அந்த அறையும் அன்று பெய்த மழையும் ஒரு சந்தர்பத்தை வழங்குகிறது.

அவர்களுடைய அந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மூன்றாவது நபராக அந்த அறையில் அவர்களுடனே விடியும் வரை வசிக்கிறது இல்லை இல்லை விடிந்த பின்னும் கூட தொடர்கிறது. அவர்களின் பிரிவுக்கு  மஹேனுக்கும் மாயாவுக்கு திருமணத்திற்கு முன்பிருந்த உறவு திருமணத்திற்கு பின்பும் தொடர்வதாக சுதா நம்புவதும் சுதாவின் உரிமை கொண்டாடுதலுமே காரணமாக அமைகிறது.

ஆனால் சுதாவை கரம் பிடித்த பிறகு மாயாவை மறந்து விட்டு சுதாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே மஹேன் ஆசைப்பட்டான். மஹேனுக்கு நடந்த ஒரு வகை கட்டாய திருமணத்திற்கு  முன்பு  திடிரென்று சொல்லாமல் கொல்லாமல் காணாமல் போன மாயா திருமணத்திற்கு பிறகு திடீரென்று வந்து நிற்கிறாள்.

மஹேனை பொறுத்தவரை அவனுக்கு அது கட்டாய திருமணம் அதுவும் மாயா திடீரென மறைந்ததால் எப்போது வருவாள் ஒருவேளை திரும்பவே வராமல் கூட போய்விடலாம் என்ற நிலையில் ஒத்துகொண்ட திருமணம்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு மாயா வந்தால் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என வாக்குறுதி கொடுத்து நடந்தேறிய திருமணம். இப்போது திடுதிப்பென்று மறைந்த மாயா திரும்ப வந்து நிற்கிறாள். என்ன செய்வான் அவன்?

சுதாவை பொறுத்தவரை தனது கணவன் தனக்கு மட்டுமே முழுமையாக கிடைக்க வேண்டும் என்று எல்லோரையும் போல் ஆசைப்படும் பெண்மணி. திருமணத்திற்கு முன்னர் மஹேன் தனக்கும் மாயாவுக்கு உள்ள தொடர்பை நேர்மையாக வெளிப்படுத்திய போது மாயவையே திருமணம் செய்து கொள்ள சொல்லி ஒதுங்க நினைத்தாள் கஷ்டத்துடன் தான். ஆனால் மாயா மாயமாய் மறைந்து விட்ட நிலையில் மஹேனின் மாயாவை மறந்துவிடுகிறேன் என்ற வாக்குறிதியை நம்பி திருமணம் செய்து கொண்டாள்.

மாயாவை பொறுத்தவரை இப்படி ஒரு திருமணம் நடந்தேறும் என்று அவளுக்கு தெரியாது, அவளுக்கென்று யாருமும் கிடையாது. அவள் இப்படி தான் அடிக்கடி சொல்லாமல் கொல்லாமல் அமைதியை தேடி மறைந்து போவாள். ஒரு முறை அப்படி மறைந்து விட்டு திரும்பி வந்த போது கிடைத்து கொண்டிருந்த அன்பு இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்று நம்பவும் முடியாமல் வேறு எந்த ஆதரவும் கூட இல்லாமல் இல்லை பிற ஆதரவையும் விரும்பாமல் தவிக்கின்றாள்.

யார் மீதும் குற்றம் சொல்ல முடியாத அந்த சூழலில்  கைதிகளாகிறார்கள்  மூவரும். மஹேன் வீட்டில் குடியிருந்த போது மாயா புழங்கிய துணி மணிகளை அப்படியே போட்டு வைத்திருந்தால் கெட்டு போய் விடும் திருப்பி அனுப்பி வைத்தால் அவளாவது உபயோகப் படுத்திக் கொள்வாள் என்று அந்த துணிமணிகளை திருப்பி அனுப்பி வைக்கிறார்கள் சுதாவும் மஹேனும்.

மாயா திருப்பி வந்த சாமான்களை பெற்று கொண்டு அவளது வேறு சில உடைமைகளையும் அந்த வீட்டில் இருப்பதாக சொல்லி ஒரு பக்க கவிதையை தந்தியில் அனுப்புகிறாள்.

'இது தான் மாயா' என்று மஹேன் கவிதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பத்தில் கவிதை என்று எண்ணி ரசிக்க ஆரம்பித்த சுதா அவளுக்கு உரிமையான உடைமைகளையும் கேட்கும் போது எதிர்வினை செய்கிறாள்...

இனி..
மஹேனின் குரலில் மாயாவின் கவிதையை சுதாவோடு சேர்ந்து நாமும் கேட்க தொடங்குவோம்.. அதை தொடர்ந்து மாயாவே அவளது கவிதையை பாடுகிறாள்..




மஹேன்:
உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை நாம் இருவரும் விளக்குகள் பொருத்தப்படாத மிதிவண்டியில் ஓட்டி வந்ததற்காக பிடிபட்ட போது, நாம் பசியோடும், தாகத்தோடும் இருப்பதாகவும் கையில் காசில்லாத ஏழைகளை போலும் நடித்தோமே, அப்போது நம்மை பிடித்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள்  நம் மீது இறக்கப்பட்டதோடு நமக்கு 50 பைசாவும் கொடுத்து விட்டு சென்றாரே.. அதில் 25 பைசா என்னுடையது. அதையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்...

சுதா:
ஹௌ சுவீட்.. என்ன இனிமை? அப்புறம்...

மஹேன்:
உன்னுடன் கழித்த இளவேனில் கால ஈர இரவுகளில் ஒன்றினை என்னுடைய கடிதங்களில் ஒன்றில் மடித்து கிடக்கிறது. அந்த இரவினையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்..

என்னுடைய வேறு சில பொருள்களும் உன்னுடன் உள்ளது. அதனையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்.. அதில் இலையுதிர் காலமும் அடக்கம்.. அந்த காலத்தில் இலையுதிர்ந்த சப்தம் என் காதோரம் கவிதை பாடி சென்றது, அந்த மரத்தின் தண்டுகள் இன்னமும் நடுக்கத்தில் இருக்கின்றன.. அவைகளை திருப்பி கொடுத்து அனுப்பவும்..

நூற்றி பதினாறு சந்திர இரவுகளையும், உன் தோலில் உள்ள மச்சத்தையும், ஈரம் காயாத மருதானி வாசனைகளையும், ஒருவருக்கொருவர் செய்த பொய்யான சத்தியங்களையும்..

சுதா:
நான் ஏன் அதையெல்லாம் அவளிடம் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்?
இதையெல்லாம் திருப்பி அனுப்பாத போதும், மாயா நம்மோடு தான் இரவும் பகலும் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய பொருள்களென்று அவள் திரும்ப கேட்பதை அனுப்பாமல் நம்மோடு வைத்திருந்தால் மட்டும் என்ன ஆகி விடும்..?

மாயா:
Mera kuch saamaan tumhare paas pada hai
o o o ! saavan ke kuch bheege bheege din rakhe hain
aur mere ik khat main lipti raat padi hai
vo raat bhujaa do, mera vo saamaan lauta do
mera kuch saamaan tumhaare paas pada hai
patjhad hai kcuh ... hai na ?
o ! patjhad main kuch patton ke girne kee aahat
kaanon main ek baar pahan ke laut aai thee
patajhad kee vo saakh abhi tak kaanp rahi hai
vo saakh gira do, mera vo saamaan lauta do

என்னுடைய வேறு சில உடைமகளும் உன்னிடம் உள்ளது
இளவேனிற் கால ஈர தினங்களை அங்கே உன் வீட்டில் வைத்துள்ளேன்
அத்தோடு இனிமை நிறைந்த இரவுகளையும் என் கடிதத்தில் மடித்து வைத்துள்ளேன்
அந்த இரவுகளை முடித்து விட்டு எனக்கு என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பவும்
இது அல்லாமல், என்னுடைய வேறு சில உடைமைகளும் உன்னிடம் உள்ளன
இலையுதிர்ந்த சில மரங்கள் இருந்தனவே.. இப்பவும் இருக்கின்றது தானே?
அங்கே மரத்திலிருந்து இலையுதிர்ந்த சத்தங்களும் உண்டு
ஒரு முறை அந்த சத்தம் என் காதோரம் வந்து விட்டு திரும்ப சென்று விட்டது
அந்த மரத்தின் தண்டுகள் இப்பவும் நடுங்கிகொண்டு இருக்கின்றது
அந்த தண்டை எடுத்து என்னுடைய உடைமகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------
ek akeli chhataree main jab aadhe aadhe bheeg rahe the
aadhe sookhe aadhe geele, sukha to main le aaye thee
geela man shayad bistar ke paas pada ho
vo bhijwa do, mera vo saamaan lauta do

நாம் ஒரு முறை ஒரே குடையில் பாதி நனைந்து சென்ற போது
பாதி நனைந்தும் பாதி நனையாமலும் இருந்தோம், நனையாமல் இருந்த பகுதியை என்னுடன் எடுத்து வந்து விட்டேன்
ஆனால் நனைந்த பாதி அங்கே தான் எங்கேயோ உனது படுக்கையில் ஓரமாக படுத்திருக்கலாம்
அதை திருப்பி அனுப்பி வைத்து விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து இதனையும் திருப்பி அனுப்பி வைத்து விடவும்
--------------------
ek so sola chaand ki ratain ek tumhare kaandhe ka til
geeli mahendi ki khushbu, jhoot mooth ke shikwe kuch
jhooth mooth ke wade sab yaad karaa do
sab bhijwa do, mera vo saamaan lauta do

ஒரு நூற்றி பதினாறு இரவுகளும், உன் தோல்பட்டையில் உள்ள மச்சத்தையும்
ஈரம் போகாத மருதாணியின் நறுமணத்தையும், போலியாய் கோபப்பட்டு கிறுக்கர்களை போல் நடந்த காட்சிகளையும்
ஒன்றுவிடாமல் எனக்கு அத்தனையையும் நினைவூட்டும் நாம் செய்து கொண்ட பொய்யான சத்தியங்களையும்
இன்னும் என்னுடையதான அத்தனையையும் திருப்பி அனுப்பி விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------------
ek ijaazat de do bas, jab isako dafanaaungee
main bhi vaheen so jaungee
main bhi vaheen so jaungee

அத்தோடு எனக்கு நீ ஒரு அனுமதியையும் வழங்கி அனுப்பி விடவும், எப்போது அந்த உடைமைகளை நான் எரிக்கின்றேனோ
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதர்கான  அனுமதியையும் வழங்கிவிடவும்
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதற்கான அனுமதியையும் வழங்கி விடவும்
---------------------
படம்: இஜாஜத்
கவிதை(கஜல்) வரிகள்: குல்ஜார்
இயக்கம்: குல்ஜார்
நடிப்பு: நசிருதீன் ஷா, ரேகா, அனுராதா படேல்
இசை: ஆர்.டி.பர்மன்
பாடியவர்: ஆஷா போன்ஸ்லே (ஆர்.டி.பர்மனின் மனைவி)
படம் வெளியான ஆண்டு: 1987
தேசிய விருதுகள்:
சிறந்த பாடகி: ஆஷா போன்ஸ்லே (1988)
சிறந்த பாடலாசிரியர்: குல்ஜார் (1988)

Saturday, May 01, 2010

மௌனமான காதல் கதையை தண்ணீரினால் எழுதினால்.. - இந்தி (குல்ஜார்) பாடல் வரிகள்

குல்ஜார் சாபின் கஜலுக்கு நான் ரசிகன். அவர் எழுத்தில் இருக்கும் புள்ளிகளை கூட நான் ரசிக்கிறேன்.

ஏற்கனவே 'ஆன்ந்தி' எனும் படத்தில் வரும் 'தேரா பினா ஜிந்தகி சே கோயி' எனும் பாடலை அதில் வரும் வசனங்கள் உள்பட மொழி பெயர்த்திருந்தேன்.

அதன் பிறகு சென்ற பதிவில் 'கினாரா' படத்தில் வரும் 'நாம் கும் ஜாயேகா' பாடலையும் ஏதோ எனக்கு தெரிந்த வரையில் மொழி பெயர்த்திருந்தேன்.

இப்போது அந்த வரிசையில் மூன்றாவது பாடல் 'லிபாஸ்' எனும் படத்தில் வரும் 'காமோஷ் ச அஃப்சானா..' பாடலை மொழி பெயர்க்க முயற்சி எடுத்திருக்கிறேன்.

இனி பாடல்,




பல்லவி
(பெண்)
காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சானா

யாரும் அறிந்திராத
இந்த 
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திராத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 1
(பெண்)
தில் கி பாத் நா பூச்சோ, தில் தோ ஆத்தா ரஹேகா
தில் பஹேகாதா ரஹா ஹேய்ன்; தில் பஹேகாதா ரஹேகா
தில் கோ தும்னே, ஓ, குச் சம்ஜ்ஹாயா ஹோதா

என் மனதை பற்றி
மட்டும்
எதுவும் கேட்டுவிடாதே
அது
ஓரிடத்தில்
நிலையாக நில்லாமல்
சுற்றிக் கொண்டே
இருக்கிறது


மேலும்
அது
பயத்தில்
நடுங்கி கொண்டுமிருக்கிறது -
இன்னமும்
நடுங்கி கொண்டே
தானிருக்கிறது


நீ தான்
என் மனதிடம்
எதுவோ
சொல்லியிருக்க கூடும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திராத
இந்த
மௌணமானகாதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!


சரணம் 2
(பெண்)
செஹ்மே சே ரெஹ்தே ஹெய்ன் ஜப் யே தின் தல்தா ஹெய்ன்
ஏக் தியா புஜ்தா ஹெய்ன், ஏக் தியா ஜல்தா ஹெய்ன்
தும்னே கோய், ஓ, தீப் ஜலாயா ஹோதா

பகலின்
வெளிச்சம்
முடிவுறும் போது
இருள்
தொடங்க இருப்பதை
எண்ணி
நான்
அச்சமடைந்தேன்.!


ஒரு
விளக்கு
அணைந்த பொழுது
இன்னொரு
விளக்கு
திடீரென
எரிய ஆரம்பித்தது


அந்த விளக்கை
நீ தான்
ஏற்றியிருக்க
வேண்டும்..!

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத 
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 3
(ஆண்)
கித்னே சாஹில் டூண்தே, கோயி ந சாம்னே ஆயா
ஜப் மஜ்தார் மெய்ன் தூபே, சாஹில் தாம்னே ஆயா
தும்னே சாஹில், ஓ, பெஹ்லே பிச்சாயா ஹோதா

எத்தனையோ
கரைகளை தேடி
அலைந்திருந்தேன்
எதுவும்
என் கண்களுக்கு
தென்படவில்லை


நடுக்கடலில்
நான் மூழ்கவிருந்த
நேரத்தில்
கரை ஒன்று
கை கொடுத்தது


நிச்சயமாக
அந்த கரை
நீ
அமைத்த 
தாகதானிருக்கும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை


நானும்
கேட்டிருக்க
போவதில்லை

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

Sunday, April 18, 2010

நாம் கும் ஜாயேகா - பெயர் மறைந்து விடும் - இந்தி பாடல்

 கார் மெக்கானிக்காக இருந்து ஸ்பானரை பிடித்துக் கொண்டிருந்த 'சம்பூரன் சிங் கல்ரா' என்ற பஞ்சாபியான அவர் 'குல்ஜாரா'க மாறி பேனாவை பிடிக்க ஆரம்பித்த போது மழையாக பொழிந்தது கவிதை.

அப்படி ஒரு மழை தான் இந்த பாடல்.
நனைந்து விடுங்கள்
குல்ஜார் காய்ச்சல்
வந்தால்
மீண்டும் நனைந்து விடுவது நன்மை பயக்கும்..

 

நான் புரிந்து கொண்டதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்:

பல்லவி:

Naam gum jaayegaa,
Cheharaa ye badal jayegaa
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பெயர் மறைந்து விடும்
முகம், என் தோற்றம் மாறி விடும்
என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்
(which means - if you bother to remember)

சரணம் 1:
Waqt ke sitam, kam hasin nahin
Aaj hain yahaan, kal kahin nahin
Waqt se phare agar, mil gaye kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

(கண்ணீரை தரும்)
காலம் நேரம் கொடுமையானது,
ஆனால் அதுவே அழகானதும்


இன்று இங்கே (இம்மையில்) இருக்கின்றோம்
நாளை இருக்க போவதில்லை


கால நேரங்களுக்கு
கட்டுப்படாத
ஒரு உலகத்தில்
நாம் சந்திக்கக் கூடும்
(அப்போது...)


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 2:
Jo guzar ga_i, kal ki baat thi
Umr to nahin, ek raat thi
Raat kaa silaa agar, phir mile kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

எது நடந்ததோ
அது
நேற்றைக்கு சொந்தமானது


அது ஒரு இரவை
போன்றது
வாழ்க்கை முழுமைக்குமானது
அல்ல


அந்த இரவின் தொடர்ச்சி
திரும்பினால்,
நாம்  மீண்டும்
(அந்த இரவை)
அனுபவிக்கலாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 3:
Din dhale jahaan, raat paas ho
Zindagi ki lau, uunchi kar chalo
Yaad aaye gar kabhi, ji udaas ho
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பகலின் நேரங்கள்
முடிவுரை
எழுதும் போது -
இரவு
எப்போதும்
அருகிலேயே
இருக்கும்
(உடனே
தொடங்கிவிடும்)


(அப்போது)
உன்
வாழ்க்கை எனும் விளக்கின்
ஒலியை
அதிகமாக்கி விடு


உனக்கு கண்ணீரை
தந்த
அந்த கனங்களை
(அந்த விஷயங்களை)
நினைத்துக்
கொண்டிருக்க வேண்டாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்