Monday, April 04, 2011

ஹஜ்ரத் கௌதுனா (றலி) - 3

குரான் ஷரீஃப் வசனம்:

ஸூரத்துத் தாஹா - 42 வது வசனம்

”ஆகவே, நீரும் உம் சகோதரர்ரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள். (... 
and do not, you both, slacken and become weak in My Remembrance)



இறைவன் மூஸா நபியை பிர்அவ்னிடம் அத்தாட்சிகளுடன் அனுப்பும் போது இறைவன் சொல்லி அனுப்பியது இது தான்.

 “ என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள்”

நினைவு கூர்வது என்பது இறைவனின் அழகிய திருநாமங்களை நாவால் உச்சரிப்பது. அதாவது திக்ரு செய்வது.

மெய்நிலை கண்ட எங்கள் மெய்ஞ்ஞானி சொல்கிறார்கள்..

”...இறைவனை நினைவு கூர்ந்து துதிக்க முனையும் ஒருவர் துவக்கத்தில் இறைநாமத்தை நாவினால் உரக்க உச்சரிக்க வேண்டும். அதன் மூலம் படிப்படியாக இறைநினைவு உடல் முழுவதும் பரவி இருதயத்தைச் சென்றடைகிறது. பின்னர் அது ஆத்மாவைத் தொடுகிறது. மேலும் அது தொடர்ந்து சென்று இறை இரகசியங்களின் உறைவிடத்தையும் எட்டுகிறது. அதனையடுத்து இரகசியத்திலும் இரகசியமாக விளங்கும் ஆதிமூல வட்டத்தையும் அது சென்றடைகிறது...”

“...இதய உணர்வு அசைவுகள் வழியே இறைவனை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் வல்லமையும் எழிலும் ஆகிய அத்தாட்சி உள்ளத்தே முகிழ்க்கிறது..”

இவ்வாறு இறைவனை நினைவு கூர்வதை விட்டும் சூஃபியாக்கள் ஒரு போதும் சளைத்ததில்லை.

சூஃபியாக்களை பொறுத்தவரை இறப்பு என்பது என்ன தெரியுமா?

இறைவனை மறந்திருப்பது தான்.

ஒரு விநாடியாவது அவர்கள் இறைவனை மறந்திருந்தால் அவர்கள் இறந்து விட்டதாகவே கருதினார்கள்.

அவர்கள் உறக்கத்தில் கூட இறைவனை மறப்பதில்லை...

அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள்,

‘அறிந்தவர்களின் உறக்கம் அறியாதவர்களின் வணக்கத்தை விட சிறந்தது’

அறியாதவர்கள் இறைவனை இறைவணக்கத்தில் கூட நினைக்க வேண்டிய  முறைப்படி நினைப்பதில்லை

இதோ தீனை உயிர்ப்பித்தவர்களின் ஞான மொழிகள்...

”அறியாமையை மயக்கம் என்றும் உறக்கம் என்றும் கூறலாம். மயக்கத்தையும் உறக்கத்தையும் உதறிவிடுவோரே இருள் சூழாத இதயம் பெற்றிருப்பர்...”


”தூய உள்ளங்கள் தூங்குவதில்லை..”


”மெய்யடியார்களின் அகவாழ்க்கையில் உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே வேறுபாடில்லை.”

இவர்கள் மெய்யடியார்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை தன் அனுபவத்திலிருந்தே சொல்கிறார்கள்.

இவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்து பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்தது போல் தங்களை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார்கள்.

அவ்வாறு முழுமையாக ஒப்படைத்து விடுவதை பற்றி இந்த அவ்லியாக்களின் அரசர் குறிப்பிடுகையில்..

“ஒரு இறந்த உடல் எப்படி தன்னை குளிப்பாட்டுபவனின் கையில் ஒப்படைத்து விடுமோ அப்படி ஒரு அடியான் இறைவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியான தவக்குல்”

என்று கூறுகிறார்கள்.

அவர்கள் தங்களின் இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதை பார்க்கும் எல்லா கண்களுக்கும் புலப்படுவதில்லை. அவர்கள் குகை வாசிகளை போன்றவர்கள்.

”...மேலும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்.”

ஸீரத்து கஹ்ஃபு - 18வது வசனம்

நினைவு கூர்ந்து தங்களை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதையே குறிகோளாக கொண்டவர்கள் இவர்கள்.

ஸூரத்து கஹ்ஃபு  28 வது வசனம்:

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன்  இச்சையை பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.”

மேலே கண்ட வசனம் அஸ்ஹாபுஸ் ஸுஃபா எனப்படும் திண்ணை தோழர்களை பற்றியது.

படிக்கவும்: http://www.sufiway.net/ar_org_Suf.html

திண்ணை தோழர்களின் சங்கிலித் தொடர் தான் சூஃபியாக்கள் என்றழைக்கப்பட்ட இறைநேசச் செல்வர்கள்.

அவர்களின் வழியில் அவர்களை விட்டும் நம் கண்களை திருப்பி விடாத வரம்பு மீறிய கூட்டத்தில் சேராதவர்களாக நம்மை இறைவன் காத்தருள வேண்டும்.
------------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களின் மொழிகள்:


”தங்களின் தனித்தன்மை, தனிப் பேராற்றலை இன்னதென அறிந்து, சீரிய முறையில் செயல்படுவோரே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவர்.”


”மனிதத் தன்மையை மாசுபடுத்துவோர் இழப்படைந்தவராகிறார்கள்.”

--------------------------------------------------------------------------------------

Friday, April 01, 2011

ஹஜ்ரத் கௌதுனா (றலி)


ஸூரத்து ஸாத் - வசனங்கள் 71 - 85

(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:


“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);


அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.


இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.


(இப்லீஸென்று யாரும் இல்லை, இறைவன் மனிதனை படைத்து அவனது ஆவியை மனிதனிடத்தில் ஊதி அவனை கண்ணியப்படுத்திய நிகழ்வு வரை)


“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.


“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.


(இப்லீஸாகிய அவன் தான் மேலானவன் என்பதற்கு ஒரு காரணத்தை கண்டு பிடிக்கிறான். 
அதாவது களி மண்ணால் படைக்கப்பட்ட ஒருவரை விட நெருப்பால் படைக்கப்பட்ட ஒருவர் மேலானவர் தானே என்கிறான். இது ஒரு வகையில் சரிதான். 
ஆனால் உண்மையிலேயே இங்கே பார்க்க வேண்டியது களிமண்னா அல்லது நெருப்பா என்பது அல்ல. 
மாறாக இறைவனால் பிரத்தியேகமாக ஆவி ஊதப்பட்ட களிமண்னா அதாவது இறைவனுடைய இயல்புகளின் ஒரு துளியை இறைவனாலேயே கொடுக்கப்பட்ட களிமண்னா அல்லது நெருப்பின் இயல்புகளை மட்டுமே கொண்ட நெருப்பா என்பதை தான். 
இப்லீஸின் கூட்டத்தார்கள் பார்க்க தவறுவதும் இதை தான்)


(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.


“இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).


“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.


“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.


“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).


அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.


(நன்றாக கவனியுங்கள் வழிகெடுப்பதற்கு யாருடைய கண்ணியத்தை சாமர்த்தியமாக கொள்கிறான் என்பதை - இப்பொழுது புரிந்திருக்குமே இறைவனுடைய கண்ணியத்தை உயர்த்துவதாக புலம்புவதெல்லாம் யாவரையும் வழிகெடுக்கத்தான் என்பதை)


“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).


(இப்லீஸ் ஒப்புக் கொள்கிறான் வழிகெடுப்பேன் தான், ஆனால் எல்லாரையும் வழிகெடுக்க முடியாது, யாரை என்றால்.. அந்தரங்க சுத்தியான் உன் அடியார்களைத் தவிர.. 


அந்தரங்க சுத்தியான அடியார்கள் யார்?


அவர்களுடைய கூட்டத்தில் நாம் எப்படி இணைவது?


அவர்களுடைய வழியை எப்படி கண்டுபிடிப்பது?


இதற்கு தான் ஃபாத்திஹா சூரா - 6 வது வசனம் கீழ்கண்டவாறு வருகிறது. 


- (அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.)


(அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.


“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)


-----------------------------------------------------------------------------------------------
மெய்ன்ஞ்ஞான பேரரசரான ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்கள் உலகில் இருக்கும் அத்தனை மெய்ஞ்ஞான தரீக்காக்கள் அத்தனைக்கு தாயான ’காதிரிய்யா தரீக்கா’ எனும் மெய்ஞ்ஞான பாதையின் ஸ்தாபகர் ஆவார்கள்.


வாளை கொண்டு இஸ்லாம் பரப்பட்டதாக அவிழ்த்து விடும் புழுகு மூட்டைகளை இன்றளவும் பொய்கள் என்று எடுத்துரைப்பதற்கு காதிரிய்யா தரீக்காவே வரலாற்று சான்றுகளாக உள்ளன. 


இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா இன்னும் ஏராளமான நாடுகளிலும் இஸ்லாம் வேரூன்றி நிலைத்து நிற்பதற்குக் காதிரியா தரீக்காவே முக்கிய காரணமாக அமைந்து இருக்கின்றது.
(இந்த உண்மைதனை வரலாற்றாசிரியர்கள் பலர் குறிப்பாக ஹெச்.ஏ.ஆர். கிப் என்பவர் எடுத்துரைக்க தயங்கியதில்லை)


அந்தரங்க சுத்தியான அந்த கூட்டத்தை தவிர மற்றவர்களை வழிகெடுப்பதாக இப்லீஸ் சொல்கிறான். தன் உள்ளத்தை சுத்தம் திக்ரின் மூலம் செய்யும் அந்த அந்தரங்க சுத்தியான கூட்டத்தை பார்க்கும் இப்லீஸின் கூட்டத்தாரின் கண்களுக்கு அன்று முதல் இன்று வரை எரிச்சலூட்டுவதாகவே இருந்து வருகிறது.


தொடரும்

Tuesday, March 29, 2011

ஹஜ்ரத் கௌதுனா (றலி)

இன்றைக்கு ஒருவர் எஸ் எம் எஸ் அனுப்பினார், அதில், ‘உயிரோடிருக்கும் போது பாம்பு எறும்பை தின்கிறது, பாம்பு இறந்த பிறகு எறும்பு பாம்பை தின்கிறது - காலம் மாறிக்கிட்டே இருக்கும் மறந்துவிட வேண்டாம்” என்று (ஆங்கிலத்தில்) எச்சரிக்கும் தொனியில் இருந்தது.

நான் சேமித்த வைக்காத எண்களை கொண்ட அந்த நண்பருக்கு நான் திருப்பி அனுப்பினேன், “சரி, நான் இப்போ பாம்புங்கறீங்களா? அல்லது எறும்புங்கறீங்களா?” என்று திருப்பி அனுப்பினேன்.

அப்புறம், ‘சாரி சார், நான் ஜஸ்ட் ஷேர் பண்ணினேன், அவ்வளவு தான்..” என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவர் அனுப்பிய செய்தியில் உண்மை இருக்கிறது. இன்றைக்கு வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க, அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள மனிதன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான்.

ஒழுக்கம், பண்பு எல்லாம் பழைய சரக்காகி விட்டது. மனிதநேயமோ பழங்கதையாகி விட்டது.

கை. கால், கண், இதயம் உள்பட எல்லாம் இனி இயந்திரத்திலேயே செய்து விடலாம். அப்படி இல்லை என்றாலும் கவலையில்லை அதுவே இயந்திரங்களாக தான் காட்சியளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மனித உடலில் ஒரு துண்டுச் சதை இருக்கிறது; அது நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக விளங்கும். அது கெட்டு சீரழியுமானால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.”
அந்த சதைத் துண்டு மனித இருதயமே” என்று.

மனித இருதயங்களை எச்சரிக்கையோடு சரி செய்த சூஃபியாக்கள் வகுத்த மெய்ஞ்ஞான வழிமுறைகளுக்கு ‘தஸ்ஸவுஃப்பு” என்று பெயர். ‘தஸ்ஸவுஃப்பு’க்கு ‘தவ்ஹீது’ எனும் இறை ஓர்மையே மூலக்கரு.

‘தவ்ஹீது’ எனும் இந்த கோட்பாடு இறைவனோடு ஒன்றாக கலந்துவிடுவது அல்ல இறை பண்புகள் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருதயத்தை தூய்மைபடுத்திக் கொள்வதே தவ்ஹீது எனப்படும்.

சூஃபியிச குழந்தை பிறந்தது அரேபியாவில் தான் என்றாலும் அது அதிக போஷாக்குடன் வளர்ந்தது பாரசீகத்தில் தான்.

இந்த சமயத்தில் இஸ்லாம் அதன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வெறும் அசைவற்ற உடலாக இருக்கும் நிலை ஏற்பட்டது. அரசாங்கங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைக்க ஆரம்பித்தனர். உலமாக்கள் என பெயரளவில் உள்ளோர் அரசாங்கத்திற்கு ஒத்தூதீனர்.

இதனை தட்டிக் கேட்ட சூஃபியாக்களை ஷரியத்தை விட்டு விலகி விட்டதாக குறை கூறி ஷரியத்திற்கு பொருந்தாத வகையில் தண்டனையும் அளித்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இமாம் அல்-கஸ்ஸாலி அவர்களையே சாரும். குரான் ஷரீஃப், ஹதீது ஆகியவற்றை வழுவறக் கற்றதோடு மக்களுக்கு புரியும் வகையிலும் உலமாக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் தனது ‘இஹ்யா உலூமித்தீன்’ எனும் சூபியாக்களின் வாழ்க்கையை விளக்கும் கருத்துக் கரூவூலத்தை உலகுக்கு படைத்தார்கள்.

திருக்குரான் ஷரீஃபுக்கும், ஹதீதுகளுக்கும் அவர்கள் கொடுத்த ஆழ்ந்த விளக்கம் சூஃபியிசத்தின் காப்பியங்களாகும்.

இவர்களின் காலம் கி.பி. 1058 லிருந்து 1111 வரை.

இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தான் குத்பு நாயகம் மஹ்பூபே சுபுஹானி மஹ்சூகே ரஹ்மானி ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களும் வாழ்ந்தார்கள்.

இவர்களின் காலம் கி.பி 1078 லிருந்து 1166 வரை.

- தொடரும்..

படிக்க வேண்டியவை:

http://sufibooks.info/Sufism/Memorial_of_Saints_Muslim_Saints_and_Mystics-Attar.pdf 

பார்க்க வேண்டியவை:

Saturday, March 26, 2011

கண்ணாடி கவிதைகள்

மௌலானா ரூமி (றஹ்) அவர்கள் கண்ணாடியை பற்றி:

You've no idea how hard I've looked for a gift to bring you. 
Nothing seemed right.
What's the point of bringing gold to the gold mine, or water to the ocean?
Everything I came up with was like taking spices to the Orient.
It's no good giving my heart and my soul because you already have these.
So I brought you a mirror.
Look at yourself. Remember me!

மௌலானா ரூமி (றஹ்)

_____________________________________________________________________

இது என் கண்ணாடி

நிசப்தங்களும்
சப்தங்களும்
இணையும்
திருநாளில்
உன்னை
சந்திக்க
இருப்பதாய்
உறுதியளித்திருக்கிறேன்

நாளைய
சந்திப்பில்
உனக்கு முன்
அழகாய் 
தோன்ற
அடிமனதில்
ஆசை முளைத்தது

முந்தா நாள்
கடைமூடும் நேரம்
கடைவீதிக்கு சென்றேன்

முகம் பார்க்கும் 
கண்ணாடி ஒன்று 
தேடினேன்

கண்ணாடிக்கு
எத்தனை
கிராக்கி

பழைய கண்ணாடி
பாதி விலைக்கு
கிடைத்தது

அலங்காரம் 
செய்து
கண்ணாடி 
முன் நின்றேன்

மதிய நேரத்திலும்
மங்கலாய்
தெரிந்தது.

கொடுத்த
பாதிக்கு
பாதி கூட
காட்டவில்லையே..!
இந்த கண்ணாடி..!!

அழகை 
எடுத்து சொல்ல வந்த
கண்ணாடியோ
அழகை
இழந்திருந்தது

ரசம் போன
கண்ணாடியில்
முகத்தின்
நவரசம்
எங்கனம் தெரியும்?

மெனக்கெட்டு
வாங்கி வந்த
கண்ணாடிக்கு
மெருகூட்டும்
வேலை
செவ்வனே நடந்தது

பளிச்சென தெரிந்த
கண்ணாடி 
முன்னே
வந்து நின்றேன்

இன்னமும்
கலங்கலாய்
இப்போது

கண்ணாடி
பொய் சொல்லவில்லை
என்று 
உள்ளவலையில்
முதன்முதலாய்
மூளை 
பதிவெழுதியது

இங்கே குருடனாய்
இருந்தால்
நாளைய சந்திப்பிலும்
குருனாய்
இருப்பேன்

இது என்ன சோதனை!
கண்களில் கோளாறு
என்று
கண் பரிசோதனைக்கு
சென்றேன்

கிட்டப் பார்வையும்
இல்லை
தூரப் பார்வையும்
இல்லை
கண் நீதிபதி
தீர்ப்பை
வெள்ளை காகிதத்தில்
கிறுக்கினார்

மீண்டும்
பளிச்சிடும் கண்ணாடி 
எதிரே
தெளிவான கண்களோடு
நான்

புரிந்துவிட்டது..!
மெருகூட்ட வேண்டியது
கண்ணாடியை அல்ல
சரிசெய்ய வேண்டியது
கண்களையும் அல்ல

வெட்கமேயில்லாத
எனது உண்மைகளை
காட்டிய
கண்ணாடிக்கு
நன்றி சொல்லி
புறப்பட்டேன்

முஸ்தபா காட்டிய
வழியில்

இறக்கும் முன்பு
இறப்பெய்திட

என்னையே பளபளப்பாக்க...!

-------------------------------

மன்சூர் அல் ஹல்லாஜ் (ரஹ்) - (858 - மார்ச் 26 922) - அன்னாரின் நினைவாக...

போலிகளும் உண்மைகளும்:

தீவிரவாதிகள் குண்டு வைத்து மக்களை கொன்று விட்டு அவர்கள் உடைமைகளையும் அழித்து விட்டு“அல்லாஹு அக்பர்” என்று கூறுகிறார்கள்

அமெரிக்க அதிபர் புஷ் ஒஸாமாவை பிடிக்க ஆப்கானிஸ்தானிலும், சதாமை ஒழிக்க ஈராக்கிலும் குண்டு மழை பொழிந்து விட்டு ‘

... The Holy Qur'an. It teaches the value and the importance of charity, mercy, and peace” என்று (நவம்பர் 19, 2001 - இஃப்தாருக்கு பிறகு) சொல்கிறார்.

எல்லோரும் குரான் ஷரீஃபையும் ஹதீதுகளையும் காட்டி சொல்கிறார்கள், ”நாங்கள் தான் நேர் வழியில் இருக்கிறோம்..” என்று.

தாடி தஸ்பீஹுடன் தங்களை சூஃபிகள் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

இப்படி நான் எழுதியதை வைத்து ’பீடி மஸ்தான்’, ‘பல்லக்கு அவ்லியா’, ‘காத்தாடி அவ்லியா’ மேற்படி பேர்களில் உடையவர்களை தான் குறிக்கிறேன் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.

என்னை பொறுத்த வரை பெயருக்கும் அவர் குணத்திற்கும் அவ்வளவாக சம்மந்தமில்லை. ‘செவிட்டு வாத்தியார்’ என்பவர் தான் எனக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்தார்.

செவிட்டு வாத்தியார் என்ற பெயரை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு ”இவரெல்லாம் வாத்தியாராம்.. இவர் பாடம் சொல்லி கொடுத்தாராமாம்? இவருக்கே யாரு சொன்னாலும் கேட்காது” என்று யாரும் முடிவுக்கு வந்து விட முடியாது.

மூஸா நபியவர்கள் பிர்அவ்னிடம் போய் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்றும் இறைவனையே வணங்க வேண்டுமென்றும் அடிமையான இஸ்ராயீல்களை விடுவிக்க கோரியும் நின்றார்கள்.

பிர்அவ்ன் மறுக்கவே மூஸா நபியவர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

அதை தொடர்ந்து கையிலுள்ள அசாவை எறிகிறார்கள். அது பாம்பாக மாறியது.

அதன் பின்பு பிர்அவ்ன் நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த மந்திரம் தந்திரம் அறிந்தவர்களை எல்லாம் கொண்டு வந்து சபை முன் நிறுத்தி மூஸா நபியவர்களோடு போட்டி போட நிறுத்தினான்.

அதாவது இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட மூஸா நபியவர்களுடைய அஸாவோடு போட்டி போட போலியான குறைகள் நிறைந்த இன்னொரு அஸாவை தேடிப் பிடித்து கொண்டு வருகிறான்.

இதனை தான் மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் மஸ்னவியில் பாடும் போது,

‘உரைகல் மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருந்த போது கள்ள நாணயம், தங்கத்தை பார்த்து, ‘நாம் இருவரும் சமமே. உன்னை விட நான் எந்த வகையில் தாழ்ந்தவன் ?’ என்று சொன்னதாம்.

அதற்குத் தங்க நாணயம், ‘என்னுடைய சகாவே! உரைகல் வந்து கொண்டிருக்கிறது, தயாராயிரும்!’ என்று மிகவும் அருமையாக ரூமி (ரஹ்) அவர்கள் பாடியிருப்பார்கள்.

ஆனால் உரைகல்லில் கூட போலிகள் உலாவரும் காலம் இது என்பதால் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

-----------------

ஏகத்துவத்தின் படித்தரங்கள்:

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், ‘நீங்கள் தௌஹீது வாதியா, அல்லது கபுரு வணங்கியா?’ என்று

அதாவது தவ்ஹீது என்ற ஏகத்துவ கொள்கையை உடையவர்கள் கபுரடிக்கு செல்ல மாட்டார்கள் என்பது அவரது கருத்து.

நான் சொன்னேன், ‘நான் கபுரடிக்கு செல்கின்ற ஒரு தௌஹீது வாதி’ என்று.

குழப்புபவர்களையே குழப்புவது என்பது அப்படி என்ன லேசான காரியாமா என்ன?

பொதுவாக இறைவன் ஒருவன் என்று நம்புவதை தான் ஏகத்துவம் அல்லது தௌஹீது என்று கொள்வார்கள்.

தவ்ஹீது என்பது ஆழங்காண முடியாத பெருங்கடல் என்று இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் கூறியிருப்பதாக எங்கள் ஹஜ்ரத் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இமாம் கஜ்ஜாலி (றஹ்) அவர்கள் ‘நூஹ் நபிக்குக் கொடுக்கப்பட்டது போல் நீண்ட ஆயுள் (950 ஆண்டுகள்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதை எழுதி முடிப்பது சாத்தியமில்லை என்பதை நான் உணர்கிறேன்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம்.

நான் வந்து வேலையிட பாதுகாப்பு எனும் துறையில் இருக்கிறேன். ஹஜார்ட், ரிஸ்க் என்ற ஆங்கில வார்த்தைக்க்கு சிங்கப்பூர் சட்டப்படி தனி விளக்கமும் இருக்கிறது. எந்த வேலையையும் செய்யும் முன்பு ‘ரிஸ்க் அஸ்ஸெஸ்மெண்ட் (ஆபத்தின் விளைவுகள் பற்றிய பகுப்பாய்வு)’ செய்ய வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டம்.

ரிஸ்க் அஸ்ஸெஸ்மெண்ட் என்பது நாம் பார்க்கும் வேலையை தனித்தனி பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆபத்துகளையும், விளைவுகளையும், தடுக்கும் முறைகளையும் பற்றி ஆய்வு செய்வதை குறிக்கும். இதனை முன்பு ஹஜர்ட் அனலிஸிஸ் என்று வழங்கி வந்தார்கள்.

நான் எதுக்கு இதனை சொல்கிறேன் என்றால், இமாம் கஜ்ஜாலி (றஹ்) அவர்கள் எதனையும் பகுதி பகுதியாக பிரித்து அலசி ஆராய்ந்து அனலிஸிஸ் செய்து அஸ்ஸெஸ்மெண்ட் செய்து முடித்து விடுவார்கள்.

அப்படி அவர்கள் ஆய்ந்து தௌஹீது எனும் ஏகத்துவத்தை நான்கு படித்தரங்களாக பிரிக்கிறார்கள். இதனை வேறொரு முறையில் விளக்கம் தருகிறேன்.

நான் கேட்ட ஒரு உதாரணமத்தை இங்கே சொல்கிறேன்..

முதல் படித்தரம்:
நிலவுக்கு மனிதன் சென்றான். இது உண்மை. இதை யாரும் நம்பலாம். ஒரு படமோ அல்லது கிரிக்கெட்டோ பார்த்துக் கொண்டிருக்கும் போது, ‘இந்தாப்பா.. மனுசன் நிலவுக்கெல்லாம் போயிருக்கான்ப்பா..” என்று சொன்னால்

பதிலுக்கு படம் பார்த்து கொண்டிருப்பவர், ‘அங்கே ஷாருக்கானும் அய்ஸ்வர்யா ராயும் டூயட் பாடினால் சூப்பரா இருக்கும்” என்பார், கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பவர், ‘அங்கே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் செமி ஃபைனல் நடந்தால் சூப்பரா இருக்கும்’ என்பார்.

‘அதுக்கென்ன இப்போ..’ என்பது மாதிரியான நம்பிக்கை இது.

இரண்டாவது படித்தரம்:
பேப்பரை படித்து, டிவியை பார்த்து, யுடியுபில் பார்த்து நிலவில் மனிதன் சென்றதை ஊர்ஜிதப்படுத்திய பிறகு ‘யெஸ்.. நிலவுக்கு மனிதன் சென்றது உண்மை தான்..’ என்று நம்பிக்கை கொள்கின்ற மனதை உடைய படித்தரம். இதில் தான் நான் உள்பட ஏராளமானோர் அடங்கியிருக்கிறோம். அறிவை கொண்டு நம்புகின்ற பாமரர்கள் அனைவரையும் இந்த படித்தரத்தில் இணைக்கலாம்.

மூன்றாவது படித்தரம்:
இது நிலவுக்கு சென்ற மனிதனிடம் அருகில் இருந்து கவனித்த சக விஞ்ஞானிகளுடைய நம்பிக்கைக்கு ஒத்து இருக்கின்றது. இவர்களும் நம்புகிறார்கள். ஆனால் முன்னர் இரண்டு படித்தரங்களில் உள்ளவர்களை விட இவர்களுடைய நம்பிக்கை இன்னும் கொஞ்சம் விசாலமானது. நிலவுக்கு பயணம் செய்தவர்களுடனேயே இவர்கள் பழக்கம் உடையவர்கள். அதற்குறிய அலுவலிலும் ஈடுபட்டவர்கள்.

நான்காவது படித்தரம்:
இந்த படித்தரத்தை நம்பிக்கை என்ற வார்த்தையிலேயே அடங்காது. இதை குறிக்க சரியான வார்த்தை இல்லா விட்டாலும் ஓரளவு நெருக்கமான வார்த்தை ‘அனுபவம்’ என்றே நான் கருதுகிறேன். இது அந்த நிலவுக்கு சென்ற மனிதனுடைய் அனுபவத்தை உடையது. நிலவுக்கு சென்ற மனிதன் தான் நிலவில் தான் இருக்கிறோம் என்று நம்புவதை விட நிலவில் இருப்பதை சொந்தமாக அனுபவிப்பான் அல்லவா அந்த வகையான நம்பிக்கை அனுபவம் அல்லது அனுபவப்பூர்வ நம்பிக்கை இது.

கிட்டதட்ட இப்படி தான் இறைவன் ஒருவன் என்று நம்புவதை இமாமவர்கள் ’கிதாபுத் தவ்ஹீது’ என்று பதிவு செய்திருப்பார்கள்.

-----------------
ஹக் எனும் பேருண்மை:

கீழே வருவது பெருமானார் (ஸல்) அவர்களுடைய ஹதீதில் உள்ளதாகும்.

Uthman:
Volumn 009, Book 087, Hadith Number 125.
-----------------------------------------
Narated By Abu Qatada : The Prophet said, "Whoever sees me (in a dream) then he indeed has seen the truth."



http://forum.ziyouz.com/index.php?topic=1440.125;wap2 

மேலே குறிப்பிட்டிருக்கும் ஹதீதில் ‘இன் எ டிரீம்’ என்று பிரேக்கட்டில் ஏன் போட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைக்குறிய அரபி பதம் ஹதீதில் இல்லை.

அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ‘யார் என்னை பார்த்தாரோ அவர் உண்மையை (ஹக்கை) கண்டார்’ என்று.

‘ஹக்’ என்பது இறைவனின் பெயராகும்.

கவனிக்க: http://wahiduddin.net/words/99_pages/haqq_51.htm 

இதை வைத்துக் கொண்டு யாரும் பெருமானாரை பார்த்தவர் இறைவனை பார்த்துவிட்டதாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக ‘என்னை எவர் (கனவில்) கண்டாரோ அவர் உண்மையையே (அதாவது பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களையே) கண்டார்’ என்று பொருள் வரும்படியாக எடுத்து கூறியுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்று அல்லாஹ்வுக்கும் பெருமானாருக்கும் (ஸல்) தான் தெரியும்.

கிட்டதட்ட இதே பொருளை உடைய ஒரு மிகவும் பிரபலமான, மிகவும் சர்ச்சைக்குறிய வார்த்தையான, ‘அனல் ஹக் (நானே பேருண்மை)’ என்று ஒரு மிகப் பெரும் ஞானி சொன்னார்.

அவர் தான் மன்சூர் அல் ஹல்லாஜ் (றஹ்) அவர்கள்.

உள்ளபடி அவர்கள், ‘அன்தல் ஹக் (நீயே உண்மை)’ என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் மன்சூர் அல் ஹல்லாஜ் அவர்கள் ஏகத்துவத்தின் படித்தரங்களை கடந்து அல்லது உடைத்து உச்சகட்டத்தில் இருக்கும் போது ‘அனல் ஹக்’ என்று சொல்லி விடுகிறார்கள்.

ஒரு நம்ரூதோ அல்லது பிர்அவ்னோ சொன்னது போல் அகம்பாவத்தில் சொன்னது அல்ல, ஆனந்தத்தில் சொன்ன வார்த்தை அது.

குரான் ஷரீஃபில் ஒரு செய்தி இருக்கிறது.

ஸீரத்துந் நஹ்ல் (தேனி) எனும் அத்தியாயம். மூன்றாவது வசனம்.

“அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் (ஹக்) கொண்டு படைத்துள்ளான்;

உண்மையை கொண்டு படைத்த இறைவன் இவையத்தனைக்கும் கலீஃபாவாக மனிதனை தான் படைத்துள்ளான், அதாவது உண்மைகளின் தலைவனாக மனிதன் இருக்கின்றான்.

அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள், ‘அதஹ்ஸிபு அன்னக ஜிஸ்முன் ஸகீருன் வஃபீக்கன்தவல் ஆலமுல் கபீரு’  என்று பாடினார்கள்


- அதாவது ‘மனிதனே, நீ சிறிய சடலம் என்றா நினைக்கிறாய் ?, உனக்குள்ளே பெரிய உலகமே அமைந்து கிடக்கின்றதே’ என்று அர்த்தம்

அந்த உலகினை அந்த உண்மைகளை இனங் கண்டு கொண்டமனிதன் உண்மைகளின் உண்மைகளை புரிந்து கொள்வான்.

அதனால் தான் இறைவன் அதே 13 வது வசனத்திலேயே ‘த ஆலா அம்மா யுஸ்ரிகூன்’ அதாவது ‘அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்’ என்று அந்த வசனத்தை முடிக்கிறான். இதுவே உண்மைகளின் உண்மை.

அதற்கு அடுத்த 14 வது வசனத்தில் ’மனிதனை இந்திரியத்துளியால் படைத்தோம்..’ என்று ஆரம்பிக்கிறான். என்னா ஹிக்மத் இறைவனுடைய ஹிக்மத். நான் கொண்டு வந்த அற்புதம் என்று பெருமானார் (ஸல்) குரான் ஷரீஃபை சொன்னார்கள்.

இப்னு அரபி எனும் மிகப் பெரிய சூஃபி ஞானி சொல்வார்கள்:

அல் அப்து அப்துன் ஃப இன் தரக, வர் ரப்பு ரப்புன் ஃப இன் தனஜ்ஜல்

என்று

அதாவது
அடிமை அடிமை தான் எவ்வளவு தான் மேலே போனாலும் - இறைவன் இறைவன் தான் எவ்வளவு தான் தனஜ்ஜலில் இருந்தாலும்

(இங்கே நான் தனஜ்ஜல் என்றே குறிக்க விரும்புகிறேன், கீழே வந்தாலும் என்று குறிக்க மனமில்லை - ஏனெனில் இறைவன் ஃபிஸிகலாக கீழே இறங்கி வருகிறான் என்ற பொருள் வரவே வராது, உண்மையில் இதன் அர்த்தத்தை எல்லோராலும் விளங்கிக் கொள்ளவே முடியாது)

------------------
முக்கியமான அந்த கேள்வியும் அதை விட முக்கியமான பதிலும்:

மௌலானா ரூமியும் ஷம்ஸ் தப்ரேஜ் (இருவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுமாக) அவர்களும் சந்தித்து கொண்டது வரலாற்று கிரந்தங்களில் முக்கியமான நிகழ்வு.

ரூமி (றஹ்)அவர்கள் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து மாணவர் புடை சூழ வந்து கொண்டிருந்தார்கள்.

ஷம்ஸ் தப்ரேஜ் அவர்கள் ரூமி (றஹ்) அவர்களை பார்க்கிறார்கள்.

கூட்டத்தை விலக்கி கொண்டு வந்து கத்தலான தொனியில் கேட்டார்கள், “முஸ்லீம்களின் ஆசிரியரே! யார் சிறந்தவர்? அபு யஜித் பிஸ்தாமியா? அல்லது இறைத்தூதர் முஹம்மதா (ஸல்) ? என்று

அபு யஜித் பிஸ்தாமி ஈரான் பிஸ்தாம் என்ற ஊரில் பிறந்தவர்கள். இறைவன் மீது அளப்பறிய காதல் கொண்டவர்கள். சூஃபியிசம் பற்றி பிஸ்தாமி அவர்கள், ‘அனைத்தையும் இழந்து சங்கடத்தை பெறுவது’ என்று விளக்கம் கொடுத்தார்கள்.

‘ஷெய்கு மார்கள் எனும் ஆசிரியர் இல்லாதவருக்கு ஷைத்தானே ஆசிரியன்” என்றும் உண்மையை பட்டென்று உடைத்தவர்.

இந்த பிஸ்தாமியை தான் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்களோடு ஒப்பிட்டு யார் சிறந்தவர் என்று கேள்வி கேட்டார்கள் ஷம்ஸ் தப்ரேஜ் அவர்கள்.

மௌலானா ரூமி (றஹ்) அவர்கள், (இதென்ன கேள்வி என்பது போல்) முஹம்மதே (ஸல்) சிறந்தவர்” என்றார்கள்.

ஷம்ஸ் அவர்கள் விடவில்லை, “முஹம்மது (ஸல்) சொல்லவில்லையா?, “இறைவனை எப்படி அறியப்பட வேண்டுமோ அப்படி இறைவனை நான் அறியவில்லை” என்று, ஆனால் பிஸ்தாமியோ, “என்னுடைய மாண்பு மிகப் பெரிதாகும், நானே பெரியவன், என் கண்ணியம் உயர்வானது, நானே சுல்தானுக்கெல்லாம் சுல்தான்” என்று

அதாவது ஒருவர் தனக்கு தெரியாதது இருக்கிறது என்கிறார்கள் இன்னொருவர் தான் தெரிந்து கொண்டதை உண்மைகளை பற்றி பெரிதும் புகழ்ந்துரைக்கிறார். இவர்களில் யார் பெரியவர்? என்பதே கேள்வி.

மௌலானா ரூமி (றஹ்) அவர்கள் சொன்னார்கள், “பயாஜித்தின் தாகம் வாயளவு தண்ணீர் கண்டவுடன் தீர்ந்து விட்டது, ஆனால் முஹம்மதின் (ஸல்) தாகமோ இன்னும் இன்னும் என்று தண்னீரை தேடிக் கொண்டே இருந்தது. பயாஜித் இறைவனிடமிருந்து பெற்றதை வைத்து அவ்வளவு தான் என்று திருப்தி அடைந்து விட்டார், ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மதோ (ஸல்) நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் முழுமையடையாத இறைவனின் ஒளியை ஞானத்தை பெற்றுக் கொண்டே இருந்தார்கள்.. அதனால் தான் முஹம்மது (ஸல்) இறைவனை எப்படி அறிய வேண்டுமோ அப்படி அறியவில்லை என்று சொன்னார்கள்” என்று சொன்னவுடன்..

ஷம்ஸ் தப்ரேஜ் உடனே ஸஜ்தாவில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். (இன்னொரு வரலாற்று குறிப்பில் ரூமி (றஹ்) அவர்கள் இந்த பதிலை சொல்லி விட்டு மயக்கமடைந்து விட்டார்கள் என்று வருகிறது)

ரூமி (றஹ்) அவர்கள் ஷம்ஸின் தலையை தொட்டார்கள்.

சூரியனும் சந்திரனும் தழுவிக் கொண்டன.

------------------
கேள்வி - யார் நீ?; பதில் - நீ:

மன்சூர் அல் ஹல்லாஜ் (றஹ்) அவர்களும் பயாஜித் (றஹ்) அவர்களைப் போல் தான் தாகம் தீர்ந்தவர்கள் தான், அதனால் தான் ரகசியத்தின் ஆரம்பத்தை முடிவு என்று கருதி வெளிப்படுத்தினார்கள்.

இதனால் அப்பாஸிய ஆட்சியாளர்களால் பெரிதும் சித்திரவதைக்கு ஆளானார்கள்.

ஷரீயத்திற்கு முரணானதை சொன்னார்கள் என்று ஷரீயத்திற்கு முரணான வழியிலேயே தண்டனையும் கொடுக்கப்பட்டார்கள்.

ஆனால் கொடுக்கப்பட்ட தண்டனைகளையும் அனுபவித்த சித்திரவதைகளையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.

அப்ரஹா என்பவன் கஃபத்துல்லாஹ்வை ஹரம் ஷரீஃபை இடித்து தரை மட்டமாக்கி விட எண்ணி நூற்றுக்கணக்கான யானைகளுடன் மக்கமா நகர் மீது படையெடுத்தான்.

பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பவர்கள் அந்த ஊரிலே மிகப் பெரிய புள்ளி. மக்கள் அவர்களை தேடினார்கள். அவர்கள் ஹிரா குகையிலிருந்து தான் எப்போதும் செய்யும் தியானங்களை முடித்து விட்டு திரும்புகிறார்கள். அவர்களிடம் செய்தி சொல்லப்படுகிறது.

அவர்கள் அப்ரஹாவை நோக்கி வருகிறார்கள்.

அப்ரஹா என்ன நினைத்தார் என்றால், ‘இவர் நம்மிடம் கஃபாவை விட்டு விடும்படி கெஞ்சத்தான் வருகிறார்..’ என்று நினைத்து மெத்தனமாக அமர்ந்திருக்க அருமை பெருமானாரின் அருமை பாட்டனார் அவர்களோ ’நீங்கள் பிடித்து வைத்திருக்கும் ஒட்டகங்களை விடுவித்து விடுங்கள்’ என்பது போல் கூறுகிறார்கள்.

அப்ரஹா கேட்கிறான், “உமக்கு கஃபாவை விட ஒட்டகங்கள் முக்கியமாக இருக்கிறதே..” என்று

அதற்கு பாட்டனார் இப்படி பதில் சொன்னார்களாம், “நான் ஒட்டகங்களில் எசமானாயுள்ளேன். எனவே அவற்றைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். கஃபாவின் எசமான் வேறொருவன் அவன் அதைக் காத்துக்கொள்வான்..” என்று.

(அதனை தொடர்ந்து படையெடுத்து அழிக்க முற்பட்ட போது தான் எங்கிருந்தோ வந்த பறவைகள் கூட்டம் சிறு கற்களை எறிந்து வீரர்களும் யானைகளும் சுருண்டு விழுந்தன என்பது அப்ரஹாவின் அழிவு வரலாறு
- குரான் ஷரீஃப் வசனம் 105: 1- 5)

மன்சூர் அல் ஹல்லாஜ் அவர்கள் ’அனல் ஹக்’ என்று சொன்னது இறைவனின் நாட்டப்படி தான் எனும் போது இது என்னுடைய பிரச்சினை அல்ல அதை அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்பது போல் மகிழ்ச்சியோடு தண்டனைகளை ஏற்றுக் கொண்டார்கள்.

"Allah, Most High, the very One Who Himself affirms His unity by the tongue of whomsoever His creatures He wishes. If He affirms His unity in my tongue it is He who does so,and it is His affair. Otherwise, my brother, I myself have nothing to do with affirming Allah's Unity"

I have seen my Lord with the eye of my heart, and 
I said: "Who are You?" 
He said:"You."
(Diwan al-Hallaj, M. 10)

Sunday, March 20, 2011

சஃபர் சலாமத்


இதை பார்த்து விட்டு சிரிப்பவர்கள்.....



4000 சிங்கப்பூர் வெள்ளி என் அக்கவுண்ட்டில் கட்டணும்..

Wednesday, March 16, 2011

ஜட்ஜப்பா - பகுதி 6


முந்தைய பகுதிகளின் இணைப்பு:

1 - http://nagoreismail786.blogspot.com/2009/09/1.html 

2 - http://nagoreismail786.blogspot.com/2009/11/2.html 

3 - http://nagoreismail786.blogspot.com/2009/12/3.html 

4 - http://nagoreismail786.blogspot.com/2010/07/4.html


5. http://nagoreismail786.blogspot.com/2010/08/5.html 


_________________________________________________________________


ஜட்ஜ் அப்பாவுடன் கலைஞர் அப்பா


வாரா வாரம் நான் ஜட்ஜப்பா வீட்டிற்கு வந்தாக வேண்டும். ஒரு வாரம் வரவில்லை என்றாலும் சேச்சிமா (ஜட்ஜப்பாவின் துணைவியார்) “ஓய்.. ஏங்கணி, போன வாரம் வரலை..?, அப்பா தேடுனாஹல்ல..!” என்பார்கள்.

அப்படி வந்தால் தவறாமல் அவர்களிடம் போய் சற்று பக்கத்தில் நின்று பேசிவிட்டு வருவேன். அப்படி தான் ஒரு முறை அவர்களிடத்தில் போகும் போது அவர்கள் தொலைபேசியில் இருந்தார்கள்.

தொலைபேசி முடித்ததும் அவர்களாகவே சொன்னார்கள், ‘கலைஞர் தான் பேசினார்.. கேரளாவிலிருந்து ஒரு வைத்தியர் காலுக்கு வைத்தியம் பண்ணி விடுகிறாராம்.. காலையில் கோட்டையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம்..’ என்றெல்லாம் சொன்னார்கள்.

ஜட்ஜப்பாவின் மீது மறைந்த காஞ்சி பெரியவருக்கு தொடர்பு உண்டு, மரியாதை உண்டு என்றால் எல்லோரும் ஆச்சர்யப்பட மாட்டார்கள். ஆனால் கலைஞரோடு அவர்களுக்கு என்ன தொடர்பு..?

கலைஞர் முதல்வராக இருப்பதால் ஏதேனும் ஆதாயம் தேடி தான் இவர்களும் நட்பு வளர்த்திருப்பார்கள் என்பதற்கு பொய்யான ஆதாரம் கூட இல்லை. இவர்களின் நேர்மை உலகறிந்த உண்மை.

இவர்களின் நட்பை பற்றி அறிய குல்ஜார் சாபை பின்பற்ற வேண்டியிருக்கும், அதாவது காலத்திலிருந்து பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும்..

அப்போது அரசியலில் அதிரடியான நிகழ்வுகள் வரிசையாக நிகழ்கிறது. இந்திரா காந்தி அவர்கள் மீது தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகாரை தொடர்ந்து இந்தியா முழுவதும் ‘அவசர நிலை’ பிரகடனப் படுத்தப்படுகிறது.

பொதுவாக மக்கள், பத்திரிக்கை துறையினர், எதிர்கட்சியினர் முக்கியமாக தமிழ்நாட்டில் திமுகவினர் என அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் குரல் அதிகார வர்க்கத்தினர் குரல்வளை சுருக்காக போய் விட வேறு மார்க்கமின்றி நீதிபதி இஸ்மாயில் கமிஷன் விசாரணை செய்ய வேண்டும் என்று தீர்ப்பானது.

‘அல்லாஹ்வை தவிர எவருக்கும் பயப்படாத’ நீதிபதி இஸ்மாயில் அவர்களோ அழகிய தமிழில் ஒரு தேர்ந்த இலக்கியம் போல் எப்போதுமே சுடுகின்ற உண்மைகளை செறிக்கும் படி உலகுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதிகார வர்க்கத்தினர் நேர்மையின் எதிரிகளாயிற்றே..!

சொந்த மாநிலத்தில் ஒருவர் நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற  சட்டத்தை ஒரே ஒருவரை இட மாற்றுவதற்காகவே புதிதாக கொண்டு வந்தனர்.

முறையான அறிவிப்பு ஏதுமின்றி ஜட்ஜப்பாவை ‘சென்னை தமிழ்நாடு தலைமை நீதிபதி’ பொருப்பிலிருந்து ‘கர்நாடக நீதிமன்றத்திற்கு’ மாற்றல் செய்தனர்.

உண்மையை உரைத்தவர் மீது உதவாத சட்டம் பாய்ந்தது.

தலைமை நீதிபதி பதவியையே ராஜினாமா செய்தார்கள் எங்களில் சிறந்தவரான அவர்கள்.



ஹிந்து நாளிதழ் ஜஸ்டிஸ் இஸ்மாயிலை ‘மேன் ஆஃப் இண்டெகிரிட்டி” என்று கூறியது

ஜட்ஜப்பாவை பற்றி இந்து நாளிதழில் வந்த அந்த நாளைய கட்டுரை

பதவிக்கும் படாடோபத்துக்கும் ஆசைப்படாதவரே உங்களில் சிறந்தவர் - நபிகள் நாயகம் (ஸல்)

The best Jihad (struggle) is to speak the truth before a tyrant ruler. - Hazrath Mohamed (Sal) - Bukhari

மறைந்த மூப்பனார் அவர்கள் ஜட்ஜப்பா வீட்டிற்கு வந்து ‘டெலிபோன் போட்டு தர்ரேன்.. பேசிட்டா பிரச்சினை முடிஞ்சிடும்..’ என்றெல்லாம் சொல்லி பார்த்தார்.

கலைஞருக்கு இவர்கள் மீது தனி மரியாதையும் வந்தது.

 

Monday, March 14, 2011

ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) - குர்ஆன் ஷரீஃப்

ஸூரத்துஜ் ஜில்ஜால் - அதிர்ச்சி

99:1 பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது -

99:2 இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது -

99:3 ”அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது -

99:4 அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்

99:5 (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்

99:6 அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாக பிரிந்து வருவார்கள்.

99:7 எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குறிய பல)னை கண்டு கொள்வார்.

99:8 அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அத(ற்குறிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.



Sunday, March 13, 2011

இடம்

சில பேர்களுக்கு என்ன ஆசை என்றால் இந்த பூமியில் தமக்கென்று ஒரு இடமாவது வாங்கி போட வேண்டும் என்பது, இது நியாயமான ஆசை தான்,

ஆனால் இந்த உலகத்தில் பல பேர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த பூமியில் எல்லா இடத்தையும் வாங்கி சொத்து எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே போக வேண்டும் என்பது தான். இது அநியாய ஆசை.

ஆபிதீன் நானா 'இடம்' என்று ஒரு சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்கள். சரி, வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர்ல ஒரு எடம் கூட வாங்கி போடலை.. ஆபிதீன் நானாட எடத்தயாவது வாங்கி போடலாம்னு பார்த்தா எங்கே தேடியும் கிடைக்கலை. தேடவே இல்லை என்பது பொய். தேடிய இடத்தில் இல்லை அல்லது இல்லாத இடத்தில் தேடியிருக்கிறேன் என்பதே மெய்.

நான் சிங்கப்பூரில் இருந்து எங்க ம்மாக்கு ஒரு கடிதம் எழுதினேன், ’இங்கே சுத்தமான சிங்கப்பூர் சோறு போட்டாலும், நாகூரில் கிடக்கும் குப்பைகளை கூட என் மனம் தேடுகிறது’ என்று. எனக்கு பிடித்த ஊர் நாகூர். பிடித்த இடம் எங்கள் வீடு தான்.

ஆனா எங்க ம்மா என்னய வீட்ல இருக்கவே உடலை. அதுக்கு காரணம் நான் தான். சரி விஷமம். அப்போ எட்டாவது பரீட்சை முடிஞ்சு லீவு. வூட்ல வெசமம் தாங்கலைண்டு எங்க ம்மா அப்பாஸ் அவர்களை கூப்பிட்டு (இப்போ இந்த அப்பாஸ் அவர்கள் தான் நாகூர் தவ்ஹீது ஜமாத்தின் முக்கிய பேச்சாளர் - நான் நினைக்கிறேன் நாகூர் தவ்ஹீத் ஜமாத்துக்கே தலைவர் என்று) 

'இந்தாம்மா ஒன் கடைல (அதாவது அவர் வேலை பார்க்கும் சிங்கப்பூர் கடையில்) இவன வச்சுக்கம்மா.." என்று சேர்த்து விட்டார்கள்.  

அப்போது கடையில் என்னய எந்த வேலையும் செய்ய சொல்ல மாட்டார்கள், அது நான் பணக்கார வீட்டு புள்ளை என்று ஒரு உண்மை கலந்த பொய்யான கருத்திருந்ததாலும் என் மேல் எல்லோருக்கும் பிரியம் என்ற பொய் கலந்த உண்மை என்பதாலும் இருக்கலாம்.

புடவை எடுத்து காட்டுவது, காச வாங்கி கல்லால போடுவது, தேத்தணி வாங்கிட்டு வருவது, தேத்தணி ஊத்தி கொடுப்பது என்று வழக்கமாக கடையில் இருந்தால் என்னென்ன வேலை செய்யணுமோ இப்படி எதையுமே செய்ய மாட்டேன். 

இது அங்கே வேலை பார்த்த ஒரு நானாக்கு ரொம்ப நாளாவே உறுத்திகிட்டு இருந்துச்சு.. அஹ பரம ஏழை..

ஒரு தடவை என்னய கூப்பிட்டு 'தம்பி எல்லாருக்கும் தேத்தணி ஊத்துங்க' என்றார்கள். 

நான் திமிரெடுத்து போய் காதுலேயே வாங்காதது போல் இருந்த போது  அப்பாஸ் மறுத்தார், 'அதெல்லாம் தம்பிய சொல்லாதீங்க.." என்று -

'ஏன் சொல்லக் கூடாது? கடைல வேலைக்கு தானே வந்திருக்கிறாரு.. அப்றம் சும்மா ஒக்காந்து இருப்பாராம்மா..?' என்று கேட்டதற்கு

அப்பாஸ் 'இஹ பெரிய எடம்.." என்று பதில் சொல்லவும்,

வந்ததே கோவம் அந்த வயசான நானாவுக்கு, 'என்னா.. பெரிய எடம்.. பொல்லாத பெரிய எடம்.. அப்படி என்னா எடம்.. மனாரா ஒசக்கயா..? எல்லாம் ஒண்ணு தான் ஊத்த சொல்லுங்கன்னி..' என்று.. 

ஒவ்வொரு வியாழன் மாலை வெள்ளி இரவு (எங்க ஊர் வழக்கப்படி) எங்களது ஹஜ்ரத் வீட்டில் சன்மார்க்கம் பற்றிய சொற்பொழிவு நடக்கும். அந்த கூட்டத்தில் அமர எனக்கும் அனுமதி கிடைத்தது.

கேட்டவுடன் எல்லோருக்கும்  அனுமதி கிடைத்து விடாது.

அந்த பேச்சு அப்படிப்பட்ட பேச்சு. உதாரணமாக,

"எந்த பொருளை நாம் அடைய வேண்டுமோ அந்த பொருளை விட நாம் பெரியதாக இருக்க வேண்டும்"

"கடன்படும் போது இருக்கும் உற்சாகம் கடனை திருப்பி செலுத்தும் போதும் இருக்க வேண்டும்"

"அழுகையையும் வேதனையையும் கண்ட்ரோல் பண்ண சிரிப்பை கண்ட்ரோல் பண்ண வேண்டும்"

மேலேஇருப்பது துளியில் இருந்த எடுத்த அணு. அந்த பேச்சுக்கள் சொல்லப்படும் இடம் ஏதோ நரகத்தை காட்டி பயமுறுத்தியோ சுவர்க்கத்தை காட்டி ஆர்வமூட்டியோ நடக்கும் வழக்கமான இடமல்ல.

ரொம்ப அமைதியான மரியாதையான இடம்.

வீண் பேச்சு, வெடிச் சிரிப்பு எல்லாம் சென்சார்ட் செய்யப்பட்ட இடம்.

அப்படியாபட்ட இடத்தில் தான் எனக்கு அமர அனுமதி கிடைத்தது.

எனக்கு எதை எந்த இடத்தில் பேச வெண்டும் என்று தெரியாது. ஒரு முறை எங்க ஹஜ்ரத் அவர்களிடம் ஏதோ தவறாக கேட்டு மாட்டிக் கொண்டேன்.

அது என்ன கேட்டேன் என்று நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் நான் கேட்டது பிர்அவ்னை பற்றி.

ஹஜ்ரத் அவர்களிடம் நான் ஹதீதுகளை பற்றி நிறைய கேள்விகள் கேட்டதுண்டு. ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை 'ஹதீது' என்றே அழைக்கலானார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

‘எங்கே அவர் ஹதீது..?’ என்று தான் என்னை பேசுவார்கள்.

எனக்கு 'என்னடா இது இப்படி தவறாக கேட்டுவிட்டோமே' என்று உறுத்தலாகவே இருந்தது.

ஹதீதுகளில் ‘ஜிப்ரயீல் (அலை) ஹதீஸ் என்றும், இஹ்சான் ஹதீஸ்’ என்றும் ஒரு ஹதீஸ் இருக்கிறது.

அந்த ஹதீதில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இஹ்ஸான் என்றால் என்ன? (இறுதி) நேரம் எப்போது வரும்? அதற்குறிய அடையாளங்கள் என்ன? என்றெல்லாம் கேட்பார்கள்.

அந்த ஹதீஸில் ஜிப்ரயீல் (அலை) பாடம் கற்க வந்த இடத்தில் மிகவும் மரியாதையாக அமர்ந்து அடக்கமாக கேள்விகள் கேட்பார்கள். இந்த ஹதீத் மரியாதையாக எப்படி பாடம் படிப்பது என்பதையும் கற்றுத் தரும் சிறப்பான ஹதீதாகும்.

பார்க்கவும்: http://fortyhadith.iiu.edu.my/hadith02.htm  


பாடம் கற்க சென்ற நான் மரியாதையாக நடந்து கொள்ளாதது போல் பேனதாக என்னுள் உறுத்திக் கொண்டே இருந்தது.

நான் என்னா செஞ்சேன், அடுத்த நாள் காலையில் ஹஜ்ரத் அவர்களிடம் சென்று 'தெரியாம அப்படி முட்டாள்தனமா கேட்டுட்டேன் ஹஜ்ரத்.. என்னை மன்னிச்சுடுங்க.. என்ன செஸ்ஸனுக்கு மட்டும் வரக்கூடாதுன்னு சொல்லிடாதீங்க.." என்று கேட்டுக் கொண்டு அறிவுப் பசியை தீர்க்க அடுத்த வாரமும் அதே இடத்திற்கு வந்தேன்.

ஹஜ்ரத் சொன்னார்கள், 'இவர் ஒரு தப்பை ஒரு எடத்துல நாலு பேரு இருக்கும் கூட்டத்துல இருக்கும் போது செஞ்சாரு.. ஆனா மன்னிப்பை வேற எடத்துல தனியா வந்து கேட்டுட்டாரு.." என்று

அப்போது தான் எனக்கு புரிந்தது, எந்த செட் பிள்ளைகள் கூடியிருக்கும் சபையில் பொருந்தாத தவறான கேள்வியை கேட்டேனோ அதே பிள்ளைகள் கூடியிருக்கும் செஸ்ஸன் நடக்கும் இடத்திலேயே மீண்டும் "என்னை மன்னித்து விடுங்கள்" என்று உடனே கேட்டேன்.

இடங்களுக்கு இஸ்லாத்தில் கூட நிறைய முக்கியத்துவம் உண்டு. உதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும். இப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூற சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.

குரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும்,  ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”

மேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் - ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)  - வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.

அதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.

’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு

மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.

அந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.

அது மட்டுமா, இன்னொரு இடத்தில், (இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்)  இன்னும் "என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.  

குரான் ஷரீஃப் 2:125

சூரியன் படத்துல வர்ர கவுண்டமணி அவர்கள் மாதிரியே ‘எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும்’ என்று பேசக்கூடிய (அந்த படத்தில் வருவதை போல் அரசியல்வாதி அல்ல - இவர் வியாபாரி) வெளிநாட்டில் வியாபாரம் செய்து வந்தார்.

ஊருக்கு வந்தால் தான் தான் எல்லங்குற மாதிரி தான் பேசுவார், இவருடைய கூட்டாளிகளில் இருவர் இவர் வசித்த நாட்டிற்கு வர ஆசைப்பட்டார்கள்.

அவர்களாகவே ஏற்பாடு செய்து விட்டு அங்கே சென்று விட்டார்கள்.

நாகூர் சூரியன் அவர்களை வரவேற்று, ‘ஒரு பெரிய ஃபங்ஷன் இஸ்தானா எனும் இடத்தில் (அதிபர் மாளிகை) நடக்கிறது, அங்கே சென்று வாசலில் நிற்கும் காவலாளிகளிடம், நான் தான் இன்னாரோட (அவர் பெயரை சொல்லி) ஆளுன்னு சொல்லுங்க.. அப்ப தெரியும் நான் எவ்ளோ பெரிய எடம்ன்னு..” என்று சொல்ல

அவர்கள் சொன்னது போலவே அங்கே போய் நின்று, ‘நான் தான் இன்னாரோட ஆளு உதாரணமா மஸ்தானோட ஆளு..’ என்று சொல்லவும்..

அந்த இடத்தில் இருந்த காவலாளி, ‘ஆப்படா மஸ்தான்.. ஈலாங் டரி சினி..’ என்று புடிச்சு ஒரு தள்ளு..

அந்த எடத்துல புடிச்ச ஓட்டம்.. நாகூர் மணராஅடில தான் நின்னுச்சு..

(குறிப்பு: ஆப்படா மஸ்தான் ஈலாங் டரி சினி.. என்ற மலாய் வார்த்தைக்கு என்னா மஸ்தான்... இங்கேந்து ஓடி போயிடு அல்லது காணா போயிடு’ என்று அர்த்தம்)

Saturday, March 12, 2011

கலைஞர் எம்ஜிஆருக்காக செய்த பிரார்த்தனை!!!

இந்த கடிதம் “இதய ஒலி” - தலைவர் கலைஞர் என்ற சிறு நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


இது ஒரு திராவிட முன்னேற்ற கழக வெளியீடு


முதற்பதிப்பு: நவம்பர் 1984ல் வெளிவந்தது


விலை 25 காசுக்கு விற்கப்பட்டது


அச்சிட்டோர்: தமிழோசை அச்சகம், 84, அபிபுல்லா சாலை, தியாகராயநகர், சென்னை - 600 017

************************************************************

இந்நூலில் பக்க எண்கள் எல்லாம் இல்லை, அட்டை பக்கத்தை முதல் பக்கமாக கொண்டால் கீழே வருபவைகளை 5ஆம் பக்கத்தில் காணலாம்.

இந்நூல்...

இந்தப் புத்தகம் - நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு

கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் !

இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும்.

எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஆழமான நட்புக்கு இந்தக் கடித நூல் - “இதய ஒலி” ஒரு அடையாளச் சின்னம்!

மு.கருணாநிதி

*********************************************************

இனி பிரார்த்தனை..

நானும் பிரார்த்தனை செய்கிறேன் !

என் இனிய நண்பரே!

உங்களுக்காக - உங்கள் உடல் நலிவு நீங்குவதற்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார்!

பல்வேறு தெய்வங்களின்பால் பக்தி கொண்டோர் நீங்கள் நலம் பெற்று எழ பிரார்த்தனை நடத்துகிறார்கள்!

உங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ல கட்சித் தோழர்கள் - முன்னணியினர் - ஆலயங்கள் பல சென்று உங்களை மீண்டும் நலமுடன் கான வேண்டுமென பிரார்த்தனை நடத்துகிறார்கள்!

பிள்ளைப்பிராய முதலே அந்த நம்பிக்கைபில்லாமல் பெரியார் வழியில் அண்ணா வழியில் வளர்ந்துவிட்டவன் நான்! அதனால் நான் உங்களுக்காக தெய்வங்களிடம் கையேந்தி வரம் கேட்டுப் பயனில்லை என்று கருதுகிறவன்! அது என் கொள்கை!

அப்படியொரு கொள்கையிலே உறுதிப்பாடு கொண்டவன் என்பதற்காக உங்களுக்காக மற்றவர்கள் நடத்தும் பிரார்த்தனையைக் குறைகூறமாட்டேன்!

அவர்களது பிரார்த்தனை நம்பிக்கை பலித்து நீங்கள் பிழைத்தெழுந்து நடமாடுவீர்களேயானால் எனக்கேற்படும் மகிழ்ச்சி - பிரார்த்தனை நடத்துகிறவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எந்த வகையிலும் குறைந்ததாக இருக்காது என்பதை எனக்கு உணவு பரிமாறிய உங்கள் தாயும், உங்களுக்கு உணவு பரிமாறிய என் தாயும் இப்போது உயிரோடிருந்தால் நிச்சயமாக நெஞ்சாரச்சொல்லி நெகிழ்ந்து போவார்கள்.

அந்தத் தாய்கள் நம்மிருவரையும் நேசித்து அன்பு குழைத்து அரவணைத்தது என்பது; ஏதோ அரசியலுக்காக அவிழ்த்து விடும் கதையோ; கற்பனையோ அல்லவே! மறுக்க முடியாத உண்மைகளாயிற்றே!

மந்திரிகுமாரி படத்தில் நீங்கள்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று நானும், மருதநாட்டு இளவரசி படத்துக்கு நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று? நீங்களும் வாதாடி வெற்றி பெற்ற அந்தக் காலம்; ஓ! அது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்றாலும் அன்பு எனும் பொன்தகட்டில் செதுக்கப்பட்ட அழியாத எழுத்துக்களன்றோ!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு அடுத்த ராமநாதபுரமெனும் புறநகரில் நாம் இருவரும் ஒரே வீட்டில் வசித்த அந்த நாட்கள்... இருவரிடையே எழுந்த அரசியல் விவாதங்கள்... நீங்களே பலமுறை பேசியுமிருக்கிறீர்கள்-எழுதியுமிருக்கிறீர்கள் “என்னைக் கலைஞர் தன்பக்கம் ஈர்த்து விட்டார்” என்று ! அந்த நினைவுகள் என் நெஞ்சில் அலைகளாய் மோதுகின்றனவே இப்போது!

அப்போதெல்லாம் அந்தச் சிறிய வீட்டிலிருந்து நீங்களும் நானும் இயக்குனர் காசிலிங்கமும் நண்பர் நம்பியாரும் கோவை நகருக்கு ஒரு குதிரை வண்டியில் தானே போவோம்! ஆம்; அதுவும் வாடகை வண்டி! ஒரு ஆளுக்கு இரண்டணாவாடகை!

மதியம்- பெரும்பாலும் கோவைக்குக் குதிரை வண்டிச் சவாரி! கடைத்தெரு முனையில் இருந்த ‘குருசாமி நாடார்’ மிலிடரி ஓட்டலில் சாப்பாடு! அதற்கிடையே எத்தனை சிரிப்புவெடிகள்! சிந்தனையைத் தூண்டும் உரையாடல்கள்!

ஒன்றா இரண்டா? இப்படி ஓராயிரம் உண்டே! கலை உலகில் நம்மை பிணைத்து வைத்த நட்பின் முத்திரைகளைக் காலம் கரைத்திட முடியுமா? முடியவே முடியாது!

அரசியலில் இன்று நமக்கிடையே மாறுபாடு இல்லை என்று சொன்னால்- அதனை நீங்களும் நானுமே ஏற்றுக் கொள்ள மாட்டோம்! எத்தனையோ மாறுபாடு- எத்தனையோ வேறுபாடு - எப்படியோ முளைத்து விட்டன!

ஆனால் இந்தப் பனிரெண்டு ஆண்டுப் பகையை- நாற்பதாண்டு கால நட்பு; பனிக்கட்டி போல இன்று கரைத்து விட்டதற்கு அடையாளம்; உங்கள் நோய் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் கண்கள் அருவிகளானதுதான்!

அந்த அருவியில் கருத்து மாறுபாடுகள் கரைந்து போகவில்லை! ஆனால் கசப்பு உணர்வுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன!

மூதறிஞர் ராஜாஜியின் உடல் நிலையைக் கேள்வியுற்று மருத்துவமனைக்கு வந்த பெரியார் அப்படியே ஆடிப்போய் விடவில்லையா?

அந்தப் பெரியார் வளர்த்த குடும்ப பாச உணர்வும் அரசியல் பண்பாடும் பட்டுப்போய்விடுமா என்ன?

அரசியலில் நீங்களும் நானும் முப்பது ஆண்டுகள் இணைந்து இருந்தோம்- அதில் இந்தப் பனிரெண்டு ஆண்டுகளாகப் பிரிந்தும் இருக்கிறோம்!

ஆனால் அந்த 1953ஐ மறக்க முடிகிறதா? கல்லக்குடி போராட்டத்தில் ஆறுமாத சிறைவாசமேற்று திருச்சி சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை எழும்பூர் ரயிலடியில் நான், வந்திறங்கிய போது மக்கள் வெள்ளத்தில் அமிழ்ந்து போக இருந்தேன்! அன்றூ என்னைக் “காக்கும் கரங்களாக” உங்கள் கரங்கள்தானே நீண்டன! என்னை வாரி அணைத்துத் தோளிலே தூக்கிக் கொண்டு மக்கள் கடலைக் கடந்தீர்கள்! அப்போது விலை உயர்ந்த உங்கள் கைக்கெடிகாரம் அந்த கூட்டத்தில் போன இடம் தெரியவில்லை!

அம்மவோ; அதையெல்லாம் நினைத்தால்- அதுவும் இந்த நேரத்தில் நினைத்தால்; நீங்கள் நலம் பெற வேண்டுமென்பதைத் தவிர என் உள்ளமும் உதடுகளும் வேறு எதனை உச்சரிக்கும்!

அரசியலில் நீங்கல் எடுத்த அந்த தீடிர் நிலை! அதனால் ஏற்பட்ட திருப்பங்கள்!

அதன் காரணமாக உங்கள் வழி வேறாகிவிட்டது! என் வழியோ எப்போது மிருந்த வழியாக இருக்கிறது!

நான் நடக்கும் வழிதான் நல்வழியென்று வாதம் செய்து மோதிக்கொள்வதிலே கூட ஒரு சுவையுண்டல்லவா நம் இருவருக்கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்று தானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக்கொண்டிருக்கும்!

நான் ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன்; ஆட்சிப் பொறுப்பின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக! கலைச் சிற்பங்களைக் கண்டு மகிழ்வதற்காக!

பிரார்த்தனைகள் செய்ததுமில்லை; அதற்காக பிரகாரங்கள் சுற்றியதுமில்லை! இப்போதும் உங்களுக்காக அந்த தெய்வீகப் பிரார்த்தனையில் நான் ஈடுபடவில்லை! என்னைப் பெரியாரும் அன்னாவும் அப்படி வளர்த்து விட்டார்கள்!

ஆனால் என் இனிய நண்பரே! உங்களுக்காக நடை பெறுகிற பிரார்த்தனைகள் வெற்றி பெறட்டும்!

பாசமிகுந்த எனது பழைய காலத்து தோழரே! நீங்கள் அந்தப் பழைய புன்னகை முகத்தோடு எங்களைக் காண வாருங்கள்!

உங்களைக் காண எங்களுக்கு இப்போது அனுமதியில்லை!

பரவாயில்லை; நீங்கள் நலமெல்லாம் பெற்று எங்களைக் காண வந்தால் போதும்!

“பிரார்த்தனை” என்பதற்கு “துதி” என்பது மட்டுமல்ல; “வேண்டுகோள்” என்றும் ஒரு பொருள் உண்டு!

அந்தப் பொருளில் வேண்டுமானால் நானும் பிரார்த்தனை செய்கிறேன்; கருத்து மோதல்களுக்கிடையிலேயும் கனிந்துரையாடிடக் கடுகி எழுந்து வருக! கதிரொளி பட்ட பனிமூட்டமென உங்கள் நோய் மூட்டம் விலகிடுக!

என்றும் உங்கள் நண்பன்
மு.க.

*******************************************************

Thursday, March 10, 2011

ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு ஒரு ஸலாம் சொல்வோம் - தேர்தல்+குல்ஜார் சாப்+முஹம்மது ரஃபி



தேர்தல் ஸ்பெஷல்..

குல்ஜார் சாபின் உதவிக் கரங்களோடு

படம்: ஆன்ந்தி

Aarti man maanti
kahanaa kyun nahi maanti

ஆர்த்தியின் புத்தி ஏன் சொல்வதை கேட்பதில்லை...? 

paathashaalaa me chhutti ho gayee
bastaa kyun nahi baandhati

பள்ளிகூடம் முடிந்து விட்டது இன்னும் ஏன் புத்தக மூட்டையை கட்டவில்லை..?

Salaam kijiye  aali janaab aaye hai

வருகை புரிந்திருக்கும் பெருந்தலைவருக்கு ஸலாம் சொல்வோம்

ye paanch saalo kaa dene hisaab aaye hai

ஐந்தாண்டு கணக்கு வழக்குகளை நம்மிடம் ஒப்படைக்க வந்திருக்கிறார்கள்


hamaare vote kharidege
hamako ann de kar
ye nage jism chhupaa dete hai
qafan de kar

இவர்கள் அரிசி பருப்பை கொடுத்து நம்மிடம் ஓட்டுக்களை பெறுவார்கள்
இவர்கள் கஃபன் (இறந்த பிறகு மய்யித்தின் மீது போர்த்தும் ஆடை) எனும் துணியை 
போட்டு அம்மணமான உடலை மறைப்பார்கள்

aa ye jaadugar hai
ye chutaki me kaam karate hai
ye bhukh-pyaas ko baato se ram karate hai

இவர்கள் எல்லாம் பெரிய மந்திர தந்திர வித்தைக்காரர்கள்
இவர்கள் வெறும் விரலை வைத்தே தங்களின் காரியத்தை முடித்துக் கொள்வார்கள்
இவர்கள் வெறும் வாய் பேச்சிலேயே நம்முடைய பசிதாகத்தை போக்குவார்கள்


aa hamaare haal pe
hamaare haal pe likhane kitaab aaye hai
hamaare haal pe likhane kitaab aaye hai

இவர்கள் நம்முடைய நிலையை பற்றி புத்தகம் போட வந்திருக்கிறார்கள்

are bhai isaliye
salaam kijiye aali janaab aaye hai

ஆகவே சகோதரனே..! அதனால் தான் சொல்கிறேன்..!
வருகை புரிந்திருக்கும் பெருந்தலைவருக்கு ஸலாம் சொல்வோம்

hamaari zindagi apani hai aap ki to nahi
ye zindagi hai Garibi ki paap ki to nahi

இது எங்களுடைய வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கை அல்ல
இந்த வாழ்க்கை ஏழைகளின் வாழ்க்கை தானே தவிர (உங்களைப் போல்) பாவப்பட்ட 
வாழ்க்கை அல்ல

aa ye vote denge magar
ab ke yun nahi denge
chunaav aane do
ham aapase nipat lege

நாங்கள் எங்கள் ஓட்டினை எப்போதும் தந்திருகிறோம்
ஆனால் இந்த முறை அவ்வளவு சுலபமாக தரமாட்டோம்
தேர்தல் நாள் வரட்டும்
நாங்கள் அப்போது வைத்துக் கொள்கிறோம் உங்களிடம்
haan ke pahale dekh le 
ke pahale dekh le kyaa inqalaab laaye hai
ke pahale dekh le kyaa inqalaab laaye hai
ye inqalaab laaye hai

அதற்கு முன்னர் 
இவர்கள் இந்த முறை என்ன புரட்சி கொண்டு வந்திருக்கிறார்கள்
என்று பார்க்கலாம்
(ஏளனமாக சிரித்து விட்டு) இவர்கள் புரட்சி கொண்டு வந்திருக்கிறார்களா...?

aan salaam kijiye aali janaab aaye hai 

வருகை புரிந்திருக்கும் பெருந்தலைவருக்கு ஸலாம் சொல்வோம்